6TH-TAMIL-1ST-TERM-UNIT-2-KILAVANUM KADALUM- NOTES OF LESSON

 

மாதம்                  :        ஜூலை

வகுப்பு                 :        ஆறாம் வகுப்பு     

 பாடம்                  :        தமிழ்                                   

பாடத்தலைப்பு       :        கிழவனும் கடலும்

அறிமுகம்:

எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய புகழ்பெற்ற நாவலின் சுருக்கமான வடிவம். ஒரு

 முதியவருக்கும், கடலில் அவர் எதிர்கொள்ளும் ஒரு பெரிய மீனுக்கும் இடையிலான

 போராட்டத்தை அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

கடலும் முதியவரும் தொடர்புடைய படங்கள், மீன்பிடி தொழில் சார்ந்த கருவிகள்,

நாவலின் கதைச் சுருக்கம் அடங்கிய விளக்கப்படம், காணொலிகள்.

நோக்கம்:

·        விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் சிறப்பை உணர்த்துதல்.

·        ஒரு கதையை ஆழ்ந்து படித்து அதன் மையக்கருத்தை ஊகிக்கும் திறனை வளர்த்தல்.

·        மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்.

ஆசிரியர் குறிப்பு:

சாண்டியாகோ என்ற முதியவரின் மனவுறுதியையும், தோல்வியைக் கண்டு துவளாத

 அவரது உழைப்பையும் கதையின் வழி விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

சாண்டியாகோ என்ற மீனவர் பல நாட்களாக மீன் கிடைக்காமல் இருந்தாலும், தளராமல்

 கடலுக்குச் சென்று ஒரு பெரிய மீனைப் பிடிக்கப் போராடுகிறார். அந்த மீனைப்

 பிடிப்பதில் அவர் காட்டும் மனவுறுதி, வாழ்க்கையில் வரும் தடைகளை வெல்லும்

 பாடத்தைப் புகட்டுகிறது.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

·        முதியவரின் விடாமுயற்சி குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல்.

·        கதையை மாணவர்கள் தங்கள் சொந்த நடையில் சுருக்கமாகக் கூறுதல்.

மதிப்பீடு:

·        LOT: கதையில் வரும் முதியவரின் பெயர் என்ன?

·        MOT: சாண்டியாகோ மீனைப் பிடிப்பதற்காக மேற்கொண்ட போராட்டத்தை விவரிக்கவும்.

·        HOT: உங்களது வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட ஏதேனும் ஒரு சவாலையும், அதை  

             நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள் என்பதையும் விளக்குக.

கற்றல் விளைவுகள் :

·        T608: ஒரு நூலை ஆழ்ந்து படித்து, அந்நூலின் மையக்கருத்தை ஊகித்தறிதல்.

·        T609: மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து, குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல், ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்.

·        T610: பல்வேறு பாடப் பொருட்கள் (கதைகள் போன்றவை) படித்துப் புரிந்து கொண்டு, அவற்றின் மீதான கருத்துகளைப் பகிர்தல்.

தொடர் பணி:

·        'கிழவனும் கடலும்' கதையை மையமாகக் கொண்டு ஒரு வரைபடம் அல்லது ஓவியம் வரைந்து வருக.

·        இதே போன்ற விடாமுயற்சி கொண்ட வேறொரு கதையைச் சேகரித்து வருக.

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post