மாதம் :
ஜூலை
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : ஏதிலிக்குருவிகள்
அறிமுகம்:
![]()
மனிதர்களின் வாழ்விடங்களில் ஒன்றி வாழ்ந்த சிட்டுக்குருவிகள் இன்று அழிந்து வரும்
சூழலை அறிந்து, அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை
அறிமுகப்படுத்துதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
சிட்டுக்குருவிகளின் படங்கள், குருவி கூடுகள், பறவைகள் வலசை போதல் குறித்த
விளக்கப்படங்கள், காணொலிகள்.
நோக்கம்:
· சிட்டுக்குருவிகளின் வாழ்வியல் மற்றும் அழிவிற்கான காரணங்களை அறிதல்.
· பறவைகளின் வலசை போதல் குறித்த புரிதலைப் பெறுதல்.
· பறவை இனங்களைக் காக்கும் பொறுப்புணர்வினை வளர்த்தல்.
ஆசிரியர் குறிப்பு:
பறவைகளின் வலசை போதல் என்பது இயற்கையின் விந்தை என்பதை விளக்குதல்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு மனிதச் செயல்களே முக்கியக் காரணம் என்பதைப்
பாடப்புத்தகத்தின் அடிப்படையில் எடுத்துரைத்தல்.
கருத்துரு வரைபடம்: (சிட்டுக்குருவி பாதுகாப்பு)
விளக்கம்:
சிட்டுக்குருவிகள் மனிதர்களோடு நெருங்கி வாழும் இயல்புடையவை.
ஆனால், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, நவீனக் கட்டடங்களின் அமைப்பு மற்றும்
சுற்றுச்சூழல் பாதிப்பால் இவை அழிந்து வருகின்றன.
இவற்றை மீட்க நாம் இயற்கை
முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
· குருவிகள் கூடு கட்ட ஏற்ற மரங்களைப் பட்டியலிடுதல்.
· பறவைகளுக்குச் செயற்கை முறையில் உணவு மற்றும் தண்ணீர் வைக்கும் முறைகளைச் செய்து பார்த்தல்.
· வலசை போதல் பற்றி வரைபடம் வரைதல்.
மதிப்பீடு:
· LOT: சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் எவ்வளவு?
· MOT: சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமான மனிதச் செயல்கள் யாவை?
· HOT: சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற உங்கள் வீட்டில் என்னென்ன மாற்றங்களைச் செய்வீர்கள்?
கற்றல் விளைவுகள்:
· T606: தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை
அறிந்திருத்தல், அவற்றைப் பற்றி கலந்துரையாடுதல்.
· T610: பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களைப் படித்துப் புரிந்து கொண்டு,
அவற்றின்
மீதான கருத்துகளைப் பகிர்தல்.
· T615: சூழலியல் மற்றும் பறவைகள் வாழ்வியல் துறைகளில் பயன்படுத்தப்படும் மொழியின்
தனிச்சிறப்புகளை அறிந்து கொள்ள பேரார்வத்தை
வெளிப்படுத்துதல்.
தொடர் பணி:
·
சிட்டுக்குருவிகளைக்
காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை குறித்த வாசகங்களை எழுதி வருக.
·
பறவைகளின்
வலசை போதல் குறித்த கூடுதல் தகவல்களை இணையத்தில் தேடி ஒரு தொகுப்பு தயார் செய்து
வருக.
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
