மாதம் :
ஜூன்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
அறிமுகம்:
![]()
தமிழ் மொழியின் அடிப்படை எழுத்துகளான முதலெழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகளின்
வகைகளை அறிமுகப்படுத்தி, அவற்றின் இலக்கணக் கட்டமைப்பை விளக்குதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
கரும்பலகை, சார்பெழுத்துகள் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை, எழுத்துகளின்
வகைப்பாடு அடங்கிய விளக்கப்படம் (Chart), இலக்கணப்
புத்தகங்கள்.
நோக்கம்:
· தமிழ் எழுத்துகளின் வகைகளை (முதலெழுத்து, சார்பெழுத்து) அறிந்துகொள்ளுதல்.
· சார்பெழுத்துகளின் பத்து வகைகளை அடையாளம் காணுதல்.
· எழுத்துகளின் ஒலிப்புமுறை மற்றும் வகைப்பாட்டினைப் புரிந்துகொள்ளுதல்.
ஆசிரியர் குறிப்பு:
முதலெழுத்துகள் (உயிர் 12, மெய் 18) மொத்தம் 30 என்பதையும், இவற்றைச் சார்ந்து
பிறக்கும் சார்பெழுத்துகள் 10 என்பதையும் எளிய உதாரணங்களுடன் விளக்குதல்.
கருத்துரு வரைபடம்: (எழுத்துகளின் வகைப்பாடு)
விளக்கம்:
முதலெழுத்துகளைக் கொண்டு பிறப்பவை சார்பெழுத்துகள். சார்பெழுத்துகள் மொத்தம்
10 வகைப்படும்.
இவை மொழியின் ஒலிப்பு நுணுக்கங்களையும், எழுத்துகளின் கால அளவையும்
(மாத்திரை)
அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
· முதலெழுத்துகளை அட்டவணைப்படுத்துதல்.
· சார்பெழுத்துகளின் பத்து வகைகளைப் பெயர்களை மனப்பாடம் செய்ய ஒலிப்புப் பயிற்சி செய்தல்.
· பாடத்திலுள்ள எழுத்துகளை எடுத்து, அவை எந்த வகை சார்ந்தது எனப் பிரித்து எழுதுதல்.
மதிப்பீடு:
· LOT: தமிழ் எழுத்துகளில் முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை?
· MOT: சார்பெழுத்துகள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன? முதலெழுத்துகளுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன?
· HOT: முதலெழுத்துகள் இல்லையெனில் சார்பெழுத்துகளின் நிலை என்னவாகும்? சிந்தித்து எழுதுக.
கற்றல் விளைவுகள் (கோப்பின்படி):
· T611: ஒலி இயைவு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள் மற்றும் மொழியின் மரபு நடை
நுட்பங்களைக் கருத்தில் கொண்டு எழுத்துகளைப் பகுத்தாய்தல்.
· T614: புதிய எழுத்துகள் மற்றும் இலக்கணக் கூறுகளைத் தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை
வெளிப்படுத்துதல்.
· T618: பல்வேறு தலைப்புகளில் சரியான இலக்கண விதிகளுடனும், நிறுத்தற்குறிகளுடனும்
பிழையின்றி எழுதுதல்.
தொடர் பணி:
· சார்பெழுத்துகளின் பத்து வகைகளை அதன் பெயர்களுடன் எழுதி வருக.
· பாடத்திலுள்ள சொற்களிலிருந்து உயிர்மெய் மற்றும் ஆய்த எழுத்துகளைக் கண்டறிந்து பட்டியலிடுக.
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
