9th Tamil Quarterly Exam 2026 Answer Key PDF – Salem District - pdf

 


சேலம் மாவட்டம்

ஒன்பதாம் வகுப்பு – காலாண்டுத் தேர்வு - 2026

மொழிப்பாடம் விடைக்குறிப்பு

வி.எண்

விடைக்குறிப்பு

மதிப்பெண்

                                                                பகுதி – 1                                                       15×1=15

1

இ) மலையாளம்

1

2

இ) பக்கம்

1

3

இ) எண்ணும்மை

1

4

இ) நீட்டலளவை ஆகுபெயர்

1

5

இ) நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்

1

6

ஆ) ஆராயாமை, ஐயப்படுதல்

1

7

ஆ) களர்நிலம்

1

8

இ) செய்தித் தொடர்

1

9

ஈ) நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல்

1

10

அ) இரண்டு

1

11

ஈ) வ்

1

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி

12

ஆ) மணிமேகலை

1

13

இ) சீத்தலைச் சாத்தனார்

1

14

இ) யானை

1

15

ஆ) எண்ணும்மை

1

 

                                                              பகுதி – 2 / பிரிவு -1                                          4×2=8

16

தமிழ்            மலையாளம்

கன்னடம்     துளு

2

17

v பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

2

18

உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

2

19

v காளைகளின் பாய்ச்சல் – கலித்தொகை

v மாடு தழுவுதல் – கண்ணுடையம்மன் பள்ளு

v ஏறுகோள் – சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பா மாலை

2

20

கண்ணுக் கினியான் என்பது சிவபெருமானைக் குறிக்கிறது.

2

21

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

2

 

 

 

                                                              பகுதி – 2 / பிரிவு -2                                       5×2=10    

22

கொடுத்த – கொடு + த் + த் + அ

கொடு – பகுதி; த் – உடன்படும் மெய் சந்தி ; த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

2

23

அ) சென்றனர்.                                  ஆ) திருத்துவேன்

2

24

மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

2

25

மதியழகன் கண்ணும் கருத்துமாகப் படித்து தேர்வில் வெற்றிப் பெற்றான்.

2

26

அ. தொல்லியல்

ஆ. பாசனத் தொழில்நுட்பம்

1

27

அ) சொல்லாடம் செய்யாதே   ஆ) பயில்/கற்க

2

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

27

அ) வந்தேன்      ஆ) எழுதினார்

2

28

செய்யுளில் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும் போது அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.

2

 

                                                              பகுதி – 3 / பிரிவு -1                                         2×3=6

29

அ) காளை

ஆ) ஐராவதம் மகாதேவன்

இ) பொருத்தமான தலைப்பு கொடுத்து இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

3

30

Ø  நீர் நிலைகளைப் பாதுகாத்தல்

Ø  மழை நீரை முறையாக சேமித்தல்

Ø  நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல்

Ø  நீரினை பாதுகாக்கும் வழிகளை அறிந்து பாதுகாத்தல்

1

1

1

31

மூன்று – தமிழ்

மூணு – மலையாளம்

மூடு – தெலுங்கு

மூரு – கன்னடம்

மூஜி – துளு

3

 

                                                              பகுதி – 3 / பிரிவு -2                                         2×3=6

32

Ø  அனைத்து பொருட்களுக்கும் தமிழில் பெயர் சூட்டுவதற்கு குரல் கொடுப்பேன்.

Ø  தமிழில் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன்.

Ø  பல்வேறுத் துறைகளில் பலவிதமான கலைச்சொற்களை உருவாக்கி தமிழை வளர்ப்பேன்.

Ø  தானியங்கி பணம் எடுக்கு இயந்திரதில் தமிழ் மொழியைத் தெரிவு செய்து பரிவர்த்தனையை மேற்கொள்ள மற்றவர்களுக்கு வழிகாட்டுவேன்.

3

33

v  இடம் : மணிமேகலை

v              பொருள் விளக்கம் : விழாக்கள் நிறைந்த மூதூரில் தெருக்கள், மன்றங்கள் எல்லாவற்றிலும் உள்ள பழைய மணலை மாற்றி புது மணலை பரப்புங்கள்.

3

34அ

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*

3

34ஆ

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

 நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்*  - சேக்கிழார்

3

 

                                                              பகுதி – 3 / பிரிவு -3                                         2×3=6

35

Ø  இரண்டு வகைப்படும்

Ø  உயிரளபெடை, ஒற்றளபெடை

3

36

.கா : செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

       செல்வத்துள் எல்லாந் தலை

அணி : சொற்பொருள் பின்வருநிலையணி

அணிப்பொருத்தம் :

“ செல்வம் “ என்னும் காதால் கேட்கப்படும் செவிச்செல்வம் என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

3

37

நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆகு பெயர்

எ.கா

எண்ணலளவை ஆகுபெயர்

ஒன்று பெற்றால் ஒளிமயம்

ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அதற்கு தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்துள்ளது.

எடுத்தலளவை ஆகுபெயர்

இரண்டு கிலோ கொடு

எடுத்தல் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

முகத்தலளவை ஆகுபெயர்

அரை லிட்டர் வாங்கு.

முகந்து அளக்கும் பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

நீட்டலளவை ஆகுபெயர்

இரண்டு மீட்டர் வெட்டினான்

நீட்டி அளக்கும் பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

3

 

 

                                                              பகுதி – 4                                                         5×5=25

38அ

Ø  ஒளிமிக்க முத்துப் போன்ற பல் தெரிய சிரிக்கும் தோழி! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? என்கிறாள் ஒருத்தி.

Ø  முத்து பல்லழகி “ அழகிய கிளிமொழி பேசும் பாவையர் எல்லோரும் வந்திருக்கின்றனரா? என்றாள்.

Ø  மற்றொருத்தி,” உன் கேள்விக்கு வந்துள்ளவரை எண்ணிப் பார்த்தல்லவோ விடை கூற வேண்டும் என்றாள்.

Ø  மூன்றாவது பெண்,” அதுவரையில் கண்ணை மூடி உறங்கி நம் மார்கழி நோன்பு நேரத்தை வீணாகக் கழித்துவிடாதே’ என்கிறாள்.

Ø  நான்காவதாக ஒருத்தி ‘ இறைவனை புகழ்ந்து பாடிட வா” என்கிறாள்.

Ø  வந்து இருப்பவர்களை எண்ணிப் பார்த்துக் கொள், எண்ணிக்கை குறைந்தால் அவர்கள் வரும்வரை நீ உறங்கு. எது செய்யத் தக்கது என்று நீயே முடிவு செய்து கொள்.

என தோழியை எழுப்பும் நிகழ்வை திருவெம்பாவை காட்சிப்படுத்துகிறது.

5

38ஆ

Ø காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

Ø நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

Ø காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

Ø வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

Ø சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

Ø பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

Ø கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

Ø குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

Ø அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

Ø செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

Ø தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் நிறைந்தது  இந்த திருநாட்டில்.

5

39அ

வளையசெட்டிப்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 05-07-2024 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    பள்ளித் தலைமையாசிரியர்  சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

       மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.

     மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.

5

39ஆ

( வினாத்தாளில் 39அ ஒரு வினா மட்டுமே இடம் பெற்றுள்ளது. அல்லது வினாவிற்கு இந்த வினா கொடுக்கப்பட்டது) 12, தெற்கு வீதி,

மதுரை-2

                                                                                                   28,செப்டம்பர் 2024.

அன்புள்ள நண்பனுக்கு,                     

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் உள்ள  கதைகள்  விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நன்றி,

இப்படிக்கு,

    அன்பு நண்பன்,                                                                                                                                             

         அ.கபிலன்

உறைமேல் முகவரி:

பெறுதல்

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் – 1

5

40அ

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

40ஆ

i) எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறதுஜெரார்ட் டி நெர்வல்

ii) வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும் – ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டெர்சன்.

iii) தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைத் தவிர்க்கலாம்.

iv) தூய்மையே தெய்வீகமானது.

v) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

 

41

காட்சிக்குப் பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

42அ

அஞ்சலக பணம் பெறும் படிவம்.அனைத்து தளங்களும் சரியான பதிவு  செய்திருப்பின் மதிப்பெண் வழங்குக

5

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 

1. பேசப்படுகின்றன.

2. திகழ்கின்றன.

3. சென்றோம்.

4. செய்கின்றாய்?

5. படிக்கின்றான்

5

 

                                                              பகுதி – 5                                                        3×8=24

43அ

முன்னுரை

ஏறுதழுவுதல்

போற்றப்படக் காரணங்கள்

முடிவுரை

முன்னுரை :

         ஏறுதழுவுதல் முல்லை, மருத நிலங்களில் கால்கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது. ஏறுதழுவுதல், தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை இக்கட்டுரையில் காண்போம்.

ஏறுதழுதல் :

         இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு ஏறுதழுவுதல். சங்ககாலத் தமிழர்கள் இயற்கையை சார்ந்தும், பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஏறுதழுதலும் ஒன்று.

வெளிநாடுகளில் ஏறுதழுவுதல் :

ü  ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது.

ü  காளை கொன்று அடக்குபவனே வீரன்

ü  வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு.

ü  இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

போற்றப்படக் காரணம் :

ü  தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

ü  நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.

ü  எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

ü  அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

முடிவுரை :

    தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது. வீரவுணர்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டு குறியீடு ஆகும். இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

8

43ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தமிழின் தனித்தன்மைகள்

முடிவுரை

முன்னுரை :

         காலத்தால் அழியாதது , காலம் தோன்றுவதற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ். அத்தகைய தமிழ்மொழியானது காலந்தோறும் தன்னை புதுபித்துக் கொள்ளும் திறனும் உண்டு. அத்தகைய தமிழ் மொழியின் தனித்தன்மைகளை இக்கட்டுரை வாயிலாக காணலாம்.

தமிழின் தனித்தன்மைகள்:

         “ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் “ என்னும் பாரதியின் கூற்று தமிழின் சிறப்பை பறைசாற்றுகிறது.

Ø  தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி. காலத்தால் முன் தோன்றியது.

Ø  தமிழ்மொழி, திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளக்குகிறது

Ø  உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக பேசவும் ,எழுதவும் கூடிய மொழியாக இன்று தமிழ் உள்ளது.

Ø  அனைத்து நிலைகளுக்கும், அனைத்து பொருட்களுக்கும் தமிழில் பெயர் உண்டு.

Ø  இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது.

Ø  தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்களும் உண்டு.

Ø  பலசொற்களுக்கு ஒரு பொருள் தரக் கூடிய வளமும் தமிழில் உண்டு.

Ø  இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

முடிவுரை :

         “ தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”  என்னும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தமிழின் தனித்தன்மையை உணர்ந்து உலகம் முழுமைக்கும் தமிழைப் பரவச் செய்ய நம்மால் முடிந்த அளவு முயற்சிகளை செய்ய வேண்டும்.

8

44அ

முன்னுரை

அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி

குழந்தைகளுக்குப் பரிமாறுதல்

மனித நேயம்

நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்

முடிவுரை

முன்னுரை:

தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.

அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:

தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.

செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார்.

குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:

குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள்..

மனிதநேயம் :

அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள்.

நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:

எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது

முடிவுரை:

வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார்.

8

44ஆ

முன்னுரை

கிராமத்தின் நிலை

இரயில் நீர்

இந்திரா

மக்கள் தேடல்

திரும்பிய இந்திரா

முடிவுரை

முன்னுரை :

          கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

 

கிராமத்தின் நிலை :

         கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும். அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

          அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர். ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

         இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

         வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.  இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

         தண்டாவளத்தில் சிறிது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.

8

45அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பிறப்பும் இளமையும்

நாட்டுப்பற்று

ஆற்றிய பணிகள்

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

45ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

இயற்கை அதன் முக்கியத்துவம்

காடுகள் அழிக்கப்படுதல்

அதன் விளைவுகள்

நம் கடமை

முடிவுரை

குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post