🔥 8ஆம் வகுப்பு-தமிழ் இயல் 1–3 | காலாண்டு தேர்வு-26- முழுத்தொகுப்பு வினாக்கள்!-PDF

📚 காலாண்டுத் தேர்வு – 2026

தமிழ் – புத்தக மதிப்பீடு வினாக்கள்

எட்டாம் வகுப்பு
📘 இயல் 1 – தமிழ் இன்பம்

1. தமிழ்மொழி வாழ்த்து

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
    அ) வைப்பு    ஆ) கடல்    இ) பரவை    ஈ) ஆழி
  2. ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
    அ) என் + றென்றும்    ஆ) என்று + என்றும்
    இ) என் + என்றும்    ஈ) என்றும் + என்றும்
  3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
    அ) வான + மளந்தது    ஆ) வான் + அளந்தது
    இ) வானம் + அளந்தது    ஈ) வான் + மளந்தது
  4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
    அ) அறிந்ததுஅனைத்தும்    ஆ) அறிந்தனைத்தும்
    இ) அறிந்தனைத்தும்    ஈ) அறிந்துனைத்தும்
  5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
    அ) வானமறிந்த    ஆ) வான்அறிந்த    இ) வானம்அறிந்து    ஈ) வான்மறிந்த
குறுவினா
  1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
  2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
சிறுவினா
  1. தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
சிந்தனை வினா
  1. பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
கற்பவை கற்றபின்
  1. ‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.

2. ஆழிக்கு இணை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. தமிழ்த்தாய் ஐம்பெருங்காப்பியங்களை __________ அணிந்துள்ளாள்.
    அ) மாலையாக    ஆ) ஆடையாக    இ) அணிகலன்களாக    ஈ) மகுடமாக
  2. பெரிய கப்பல்கள் __________ மீது செல்லும்.
    அ) ஊழி    ஆ) ஆழி    இ) நாழி    ஈ) தாழி
  3. ‘முத்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
    அ) மூன்று + தமிழ்    ஆ) முத்து + தமிழ்    இ) மு + தமிழ்    ஈ) முத் + தமிழ்
  4. ‘தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது’ – இத்தொடரில் தன் என்னும் சொல் __________ குறிக்கிறது.
    அ) அணிகலனைக்    ஆ) கடலைக்    இ) கப்பலைக்    ஈ) தமிழைக்
தொகைச்சொற்களை விரித்து எழுதுக
  1. முத்தமிழ் : __________, __________, __________.
  2. முச்சங்கம் : __________, __________, __________.
  3. முச்சங்கு : __________, __________, __________.
குறுவினா
  1. தமிழ் யாரால் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்?
  2. இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?
சிறுவினா
  1. தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?
சிந்தனை வினா
  1. தமிழுக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

3. தமிழ் வரிவடிவ வளர்ச்சி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது.
    அ) ஓவியக்கலை    ஆ) இசைக்கலை    இ) அச்சுக்கலை    ஈ) நுண்கலை
  2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.
    அ) கோட்டெழுத்து    ஆ) வட்டெழுத்து    இ) சித்திர எழுத்து    ஈ) ஓவிய எழுத்து
  3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.
    அ) பாரதிதாசன்    ஆ) தந்தை பெரியார்
    இ) வ.உ. சிதம்பரனார்    ஈ) பெருஞ்சித்திரனார்
கோடிட்ட இடத்தை நிரப்புக
  1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ______ என அழைக்கப்பட்டன.
  2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ______.
குறுவினா
  1. ஓவிய எழுத்து என்றால் என்ன?
  2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
  3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
  4. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் ஏதேனும் இரண்டனை எழுதுக.
சிறுவினா
  1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
  2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
நெடுவினா
  1. எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
சிந்தனை வினா
  1. தற்போதைய தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

4. சொற்பூங்கா

மதிப்பீடு
  1. ஓரெழுத்து ஒருமொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.

5. எழுத்துகளின் பிறப்பு

மதிப்பீடு
‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. உதடுகளைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
    அ) இ, ஈ    ஆ) உ, ஊ    இ) எ, ஏ    ஈ) அ, ஆ
  2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.
    அ) மார்பு    ஆ) கழுத்து    இ) தலை    ஈ) மூக்கு
  3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
    அ) மார்பு    ஆ) தலை    இ) மூக்கு    ஈ) கழுத்து
  4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
    அ) க், ங்    ஆ) ச், ஞ்    இ) ட், ண்    ஈ) ப், ம்
  5. கீழ் உதடும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
    அ) ம்    ஆ) ப்    இ) ய்    ஈ) வ்
பொருத்துக
  1. க், ங் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
  2. ச், ஞ் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
  3. ட், ண் – நாவின் முதல், அண்ணத்தின் அடி
  4. த், ந் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
சிறுவினா
  1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
  2. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
  3. ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
📗 இயல் 2 – இயற்கை

1. இயற்கையைப் போற்றுவோம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. கழுத்தில் இடுவது ______.
    அ) தார்    ஆ) கணையாழி    இ) தண்டை    ஈ) மேகலை
  2. கதிரவனின் மற்றொரு பெயர் ______.
    அ) புதன்    ஆ) ஞாயிறு    இ) சந்திரன்    ஈ) செவ்வாய்
  3. ‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
    அ) வெண் + குடை    ஆ) வெண்மை + குடை
    இ) வெம் + குடை    ஈ) வெம்மை + குடை
  4. ‘அங்கண்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
    அ) அம் + கண்    ஆ) அ + கண்
    இ) அங் + கண்    ஈ) அங்கு + கண்
  5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
    அ) கொங்குஅலர்    ஆ) கொங்அலர்    இ) கொங்கலர்    ஈ) கொங்குலர்
  6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
    அ) அவன்அளிபோல்    ஆ) அவனளிபோல்
    இ) அவன்வளிபோல்    ஈ) அவனாளிபோல்
நயம் அறிக
  1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
  2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
  1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
  2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
சிந்தனை வினா
  1. இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

2. பட்டமரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. மலர்களிலிருந்து வரும் __________ வண்டுகளை ஈர்க்கும்.
    அ) மந்தம்    ஆ) அந்தம்    இ) சந்தம்    ஈ) கந்தம்
  2. மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது __________ ஆகும்.
    அ) சட்டை    ஆ) பட்டை    இ) மட்டை    ஈ) கட்டை
  3. ‘வருமென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
    அ) வரு + மென்று    ஆ) வரும் + மென்று
    இ) வரும் + என்று    ஈ) வரு + என்று
  4. கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.
    அ) கிழிந்துஎழில்    ஆ) கிழிந்தெழில்    இ) கிழிந்தொழில்    ஈ) கிழிந்தழில்
நயம் அறிக
  1. ‘பட்ட மரம்’ பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
  1. பட்டமரம் எதனை நினைத்துக் கவலை அடைந்தது?
  2. பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது?
  3. பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
சிறுவினா
  1. ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
சிந்தனை வினா
  1. மரங்கள் பட்டுவிடாமல் காக்க, செய்ய வேண்டியவையாக நீங்கள் கருதுவன யாவை?

3. ஈடில்லா இயற்கை – தமிழர் மருத்துவம் (நேர்காணல்)

மதிப்பீடு
  1. நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.
  2. உங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் _____ பயன்படுத்தினர்.
    அ) தாவரங்களை    ஆ) விலங்குகளை    இ) உலோகங்களை    ஈ) மருந்துகளை
  2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.
    அ) மருந்தின்    ஆ) உடற்பயிற்சியின்    இ) உணவின்    ஈ) வாழ்வின்
  3. நோய்கள் பெருக மனிதன்__________ விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.
    அ) வீட்டை    ஆ) உணவை    இ) நாட்டை    ஈ) இயற்கையை
  4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.
    அ) சுவைக்காக    ஆ) சிக்கனத்திற்காக    இ) நல்வாழ்விற்காக    ஈ) உணவிற்காக
குறுவினா
  1. மருத்துவம் எப்போது தொடங்கியது?
  2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
  3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
சிறுவினா
  1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?
  2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
நெடுவினா
  1. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
  1. நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

4. வெட்டுக்கிளியும் சருகுமானும்

மதிப்பீடு
  1. ‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.

5. மயங்கொலிகள்

மதிப்பீடு – சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. சிரம் என்பது ------------------- (தலை / தளை)
  2. இலைக்கு வேறு பெயர் ------------------- (தளை / தழை)
  3. வண்டி இழுப்பது ------------------- (காலை / காளை)
  4. கடலுக்கு வேறு பெயர் ------------------- (பரவை / பறவை)
  5. பறவை வானில் ------------------- (பறந்தது / பரந்தது)
  6. கதவை மெல்லத் ------------------- (திறந்தான் / திரந்தான்)
  7. பூ ------------------- வீசும். (மனம் / மணம்)
  8. புலியின் ------------------- சிவந்து காணப்படும். (கன் / கண்)
  9. குழந்தைகள் ------------------- விளையாடினர். (பந்து / பன்து)
  10. வீட்டு வாசலில் ------------------- இட்டனர். (கோலம் / கோளம்)
மயங்கொலிப் பிழைகளைத் திருத்துக
  1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
  2. தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
  3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்லது.
குறுவினாக்கள்
  1. மயங்கொலி எழுத்துகள் யாவை?
  2. ண, ன, ந ஆகிய எழுத்துகள் (ஒலிகள்) பிறக்கும் முறையைக் கூறுக.

6. திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____.
    அ) அடக்கமுடைமை    ஆ) நாணுடைமை
    இ) நடுவுநிலைமை    ஈ) பொருளுடைமை
  2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.
    அ) வலிமையற்றவர்    ஆ) கல்லாதவர்    இ) ஒழுக்கமற்றவர்    ஈ) அன்பில்லாதவர்
  3. ‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
    அ) வல் + உருவம்    ஆ) வன்மை + உருவம்
    இ) வல்ல + உருவம்    ஈ) வல்லு + உருவம்
  4. நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
    அ) நெடுதேர்    ஆ) நெடுத்தேர்    இ) நெடுந்தேர்    ஈ) நெடுமைதேர்
  5. ‘கடல்ஓடா’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.
    அ) எடுத்துக்காட்டு உவமை அணி    ஆ) தற்குறிப்பேற்ற அணி
    இ) உவமை அணி    ஈ) பிறிதுமொழிதல் அணி
குறுவினா
  1. சான்றோர்க்கு அழகாவது எது?
  2. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
  3. ‘வருமுன்னர்க் காவாதான் ...’ எனத் தொடங்கும் குறளில் உள்ள உவமை அணியை விளக்குக.
  4. பிறிதுமொழிதல் அணி என்பது யாது?
திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக
  1. தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
  2. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின் அல்லது.
கோடிட்ட இடத்தை நிரப்புக
  1. வலியில் நிலைமையான் வல்லுருவம் _______
    புலியின்தோல் _______மேய்ந் தற்று.
  2. விலங்கொடு _____ அனையர் _______
    கற்றாரோடு ஏனை யவர்.
📕 இயல் 3 – கல்வி

1. பாடறிந்து ஒழுகுதல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. நம்மை _____ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
    அ) இகழ்வாரைப்    ஆ) அகழ்வாரைப்    இ) புகழ்வாரைப்    ஈ) மகிழ்வாரைப்
  2. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.
    அ) சிறை    ஆ) அறை    இ) கறை    ஈ) நிறை
  3. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
    அ) பாட் + அறிந்து    ஆ) பா + அறிந்து    இ) பாடு + அறிந்து    ஈ) பாட்டு + அறிந்து
  4. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
    அ) முறையப்படுவது    ஆ) முறையெனப்படுவது
    இ) முறைஎனப்படுவது    ஈ) முறைப்படுவது
குறுவினா
  1. பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
  2. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
சிறுவினா
  1. நமக்கு இருக்க வேண்டிய பண்புநலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
  1. வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புநலன்களாக நீங்கள் கருதுவன யாவை?

2. புத்தியைத் தீட்டு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.
    அ) சோம்பல்    ஆ) அகம்பாவம்    இ) வருத்தம்    ஈ) வெகுளி
  2. ‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
    அ) கோ + அப்பா    ஆ) கோயில் + லப்பா
    இ) கோயில் + அப்பா    ஈ) கோ + இல்லப்பா
  3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
    அ) பகைவென்றாலும்    ஆ) பகைவனென்றாலும்
    இ) பகைவன்வென்றாலும்    ஈ) பகைவனின்றாலும்
நயம் அறிக
  1. ‘புத்தியைத் தீட்டு’ பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
  1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
  2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
சிறுவினா
  1. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
சிந்தனை வினா
  1. உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

3. கல்வி கரையில – பல்துறைக் கல்வி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.
    அ) விளக்கு    ஆ) கல்வி    இ) விளையாட்டு    ஈ) பாட்டு
  2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.
    அ) இளமை    ஆ) முதுமை    இ) நேர்மை    ஈ) வாய்மை
  3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
    அ) வீட்டில்    ஆ) நாட்டில்    இ) பள்ளியில்    ஈ) தொழிலில்
நிரப்புக
  1. உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது __________ என்னும் அறிவுக்கலை.
  2. புற உலக ஆராய்ச்சிக்கு _____ கொழுகொம்பு போன்றது.
  3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது _____ இன்பம் ஆகும்.
பொருத்துக
  1. இயற்கை ஓவியம் – சிந்தாமணி
  2. இயற்கைத் தவம் – பெரியபுராணம்
  3. இயற்கைப் பரிணாமம் – பத்துப்பாட்டு
  4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்
குறுவினா
  1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
  2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
  3. திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
சிறுவினா
  1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை எழுதுக.
  2. அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
நெடுவினா
  1. காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
  1. திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
கற்பவை கற்றபின்
  1. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.

4. ஆன்ற குடிப்பிறத்தல்

மதிப்பீடு
  1. திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.

5. வினைமுற்று

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
  1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரில் உள்ள வினைமுற்று _____.
    அ) மாடு    ஆ) வயல்    இ) புல்    ஈ) மேய்ந்தது
  2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.
    அ) படித்தான்    ஆ) நடக்கிறான்    இ) உண்பான்    ஈ) ஓடாது
  3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.
    அ) செல்க    ஆ) ஓடு    இ) வாழ்க    ஈ) வாழிய
சிறுவினா
  1. வினைமுற்று என்றால் என்ன?
  2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
  3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
  4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post