8TH-TAMIL-UNIT-3-VINAI MUTRU-NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஆகஸ்ட்/செப்டம்பர்

இயல்                :         03

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       வினைமுற்று


 அறிமுகம்:

செயலைக் குறிக்கும் சொற்கள் 'வினைச்சொற்கள்' எனப்படும். பொருளை முழுமையாக உணர்த்தி நிற்கும் வினைச்சொற்களே 'வினைமுற்று' என்பதை அறிதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • வினைமுற்றின் வகைகளை விளக்கும் அட்டவணை.
  • வினைமுற்று சொற்கள் எழுத்து அட்டை
  • காணொளி காட்சிகள்

  நோக்கம்:

  • வினைமுற்றின் இலக்கணத்தை அறிதல்.
  • தெரிநிலை, குறிப்பு, ஏவல் மற்றும் வியங்கோள் வினைமுற்றுகளை வேறுபடுத்திப் பயன்படுத்துதல்.

  ஆசிரியர் குறிப்பு:

வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகியவற்றில் வரும் என்பதை விளக்குதல். தெரிநிலை வினைமுற்று (ஆறு காரணிகள்) மற்றும் குறிப்பு வினைமுற்று (பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்) ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்துதல்.

  கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

·     வினைமுற்றுப் பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொல் ஆகும். ஏவல் வினைமுற்று ஒருவரைச் செய்யுமாறு கட்டளையிடுவது.

·     வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும். இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்தி விளக்குதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • பாடத்திலுள்ள வினைமுற்றுச் சொற்களைக் கண்டறிந்து வகைப்படுத்துதல்.
  • கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைக் கொண்டு பல்வேறு வினைமுற்றுச் சொற்களை உருவாக்குதல்.

  மதிப்பீடு:

  • LOT: பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று எது? (எ.கா: படித்தான்).
  • MOT: ஏவல் வினைமுற்று மற்றும் வியங்கோள் வினைமுற்று - வேறுபாடு தருக.
  • HOT: வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் எவை? அவை எப்பொருள் நிலையில் வரும்?.

  கற்றல் விளைவுகள்:

  • T816: மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து, அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்.
  • T817: மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்ன சொற்களைப் பிறிதொரு சூழலில் தனது மொழி நடையில் பயன்படுத்துதல்.

  தொடர் பணி:

'வாழ்க' என்ற சொல்லை ஐம்பால்களிலும், மூவிடங்களிலும் அமைத்துத் தொடர்களை எழுதி வருக


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post