8TH-TAMIL-UNIT-4-THAMIZHAR ISAI KARUVIGAL-NOTES OF LESSON

   

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       அக்டோபர்

இயல்                :         04

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       தமிழர் இசைக்கருவிகள்



அறிமுகம்:

மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்த குரல் வழியாகவோ அல்லது செயற்கைக் கருவி வழியாகவோ உருவான இசையையும், காலப்போக்கில் பலவிதமான இசைக்கருவிகள் தோன்றி வளர்ச்சி பெற்றதையும் கலைக்களஞ்சியத் தகவல்கள் வழி அறிதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்
  • பல்வேறு வகைப்பட்ட தமிழர் இசைக்கருவிகளின் படங்கள்
  •  ஒலிகளைக் கேட்கும் காணொலிகள்.

  நோக்கம்:

  • இசைத்துறை பற்றிய அடிப்படை அறிவைப் பெறுதல்.
  • பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளின் நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல்.

  ஆசிரியர் குறிப்பு:

இசையை நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தும் கலையாகவும், குரல்வழி இசை மற்றும் கருவிவழி இசை என இருவகையாகவும் பிரித்து விளக்குதல். இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் 'பாணர்' எனப்பட்டனர் என்பதைக் கற்பித்தல்.

  கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

மக்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கருவியாக இசைக்கருவிகளை உருவாக்கினர் என்பதை விளக்குதல். பல்வேறு நிகழ்வுகளுக்காகக் கருவிகள் தோன்றிப் பெருகியதையும், பாணர்களின் முக்கியத்துவத்தையும் விளக்குதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மாணவர்கள் தமக்குத் தெரிந்த இசைக்கருவிகளின் பெயர்களைப் பட்டியலிடுதல்.
  • குறிப்பிட்ட இசைக்கருவிகள் எந்த நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.

  மதிப்பீடு:

  • LOT: இசையை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
  • MOT: இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
  • HOT: மனித வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளில் இசைக்கருவிகளின் பங்கு என்ன?

  கற்றல் விளைவுகள்:

  • T813: தேவைப்படின் கலைக்களஞ்சியம் மற்றும் இணையதளத்தைப் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.
  • T820: உழவுத் தொழில், நாட்டியம், மெய்ப்பாடுகள் முதலான செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் (குறிப்பு: இசைக்கருவிகள் சார்ந்த சொற்களைப் பயன்படுத்துதல்).

  தொடர் பணி:

உங்கள் பகுதியில் உள்ள இசைக்கருவிகளைப் பட்டியலிட்டு, அவை எந்தெந்தக் கலைநிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சேகரித்து வருக.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post