www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
இயல் : 04
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
அறிமுகம்:
கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியளித்து, தொன்மையான
பண்பாட்டைக் காக்கும் அன்றாடப் பயன்பாட்டுக்கான கைவினைக்கலைகளைப் பற்றி அறிதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- மண்பாண்டங்கள், சுடுமண்
சிற்பங்கள், மூங்கில் மற்றும் பனையோலைப் பொருள்கள்
குறித்த படங்கள்.
நோக்கம்:
- தொன்மையான கைவினைக்கலைகளின் சிறப்புகளை அறிந்து
அவற்றை வளர்த்தல்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த கலைப்பொருள்களைப்
பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்குதல்.
ஆசிரியர் குறிப்பு:
மனித வாழ்வின் தொன்மையான கலைகளாக மண்பாண்டக்கலை, சுடுமண் சிற்பக்கலை (டெரகோட்டா), மூங்கில் மற்றும்
பனையோலைக் கலைகளை அறிமுகப்படுத்துதல். இவற்றின் பயன்பாடு
மற்றும் தற்போதைய நிலையில் இவற்றின் தேவை குறித்து விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
தமிழரின் வாழ்வியலோடு கலந்த இக்கலைகள், சூழலுக்கு
இசைந்தவை என்பதை விளக்குதல். இக்கலைகளைப் பாதுகாப்பதன் மூலம்
கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- கைவினைப்பொருள்களின் கண்காட்சிக்குச் செல்வது போன்ற
சூழலை வகுப்பில் நடித்துக்காட்டுதல்.
- பல்வேறு கைவினைப் பொருள்கள் குறித்த தகவல்களைத்
தொகுத்தல்.
மதிப்பீடு:
- LOT: பழந்தமிழ்
இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை எவை?
- MOT: மண்பாண்டக்கலைக்கும் சுடுமண்
சிற்பக்கலைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
- HOT: கைவினைக்கலைகளுக்கும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து உங்கள் கருத்து யாது?
கற்றல் விளைவுகள்:
- T820: கைவினைப் பொருட்கள்
தயாரித்தல், கட்டிடக்கலை முதலான செயல்பாடுகளில்
பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.
- T813: தேவைப்படின்
கலைக்களஞ்சியம் மற்றும் இணையதளத்தைப் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.
தொடர் பணி:
உங்களைச் சுற்றி கிடைக்கும் களிமண் அல்லது பனையோலைகளைப் பயன்படுத்தி
ஏதேனும் ஒரு கைவினைப் பொருளைச் செய்து வருக.
