www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
இயல் : 04
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திருக்கேதாரம்
அறிமுகம்:
இசையோடு இணையும் பாடல்கள் உள்ளத்திற்கு விருந்தாக அமைவதை விளக்கும் விதமாக, சுந்தரர் பாடியுள்ள தேவாரப் பாடல் ஒன்றின் மூலம் திருக்கேதாரத்தின்
சிறப்புகளை அறிதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- சுந்தரர் புகைப்படம் மற்றும் திருக்கேதாரத்தின்
நிழற்படங்கள்.
நோக்கம்:
- இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை குறித்த
செய்திகளை அறிந்து போற்றுதல்.
- பன்னிரு திருமுறைகளில் ஒன்றான தேவாரத்தின் சிறப்பை
உணர்தல்.
ஆசிரியர் குறிப்பு:
சுந்தரர் தேவாரப்பாடிய மூவருள் ஒருவர் என்பதையும், அவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்று
அழைக்கப்படுவதையும் விளக்குதல். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவர் பாடிய தொகுப்பே 'தேவாரம்' என்பதையும், இதனைத்
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
பண்ணோடு சேர்ந்த இனிய பாடல்களைப் பாடும்போது, புல்லாங்குழலும்
முழவும் இணைந்து ஒலிக்கும் சூழலையும், பொன்வண்ண
நீர்நிலைகளும் மதயானைகளும் நிறைந்து எழும் இசை ஒலியால் திருக்கேதாரம் சிறந்து
விளங்குவதை விளக்குதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- பாடலின் பொருளை உணர்ந்து சீர்பிரித்து வாசித்தல்.
- பாடல் வரிகளில் விவரிக்கப்பட்டுள்ள இசைக்கருவிகள்
மற்றும் இயற்கைக் காட்சிகளைப் பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
- LOT: காட்டிலிருந்து வந்த எவை
கரும்பைத் தின்றன?
- MOT: திருக்கேதாரத்தைச் சுந்தரர்
எவ்வாறு வருணனை செய்கிறார்?
- HOT: விழாக்களின்போது
இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என்பது குறித்து
உமது கருத்து யாது?
கற்றல் விளைவுகள்:
- T810: பாடலில் காணப்படும்
சொற்கள், தொடர்களைப் புரிந்துகொண்டு நயம்
பாராட்டுதல்.
- T811: படிக்கும்போது பல்வேறு
எழுத்தியியல் நடைகளையும் முறைகளையும் (இயற்கை அழகின் வர்ணனை முறை)
இனங்காணுதல்.
தொடர் பணி:
தேவாரம் பாடிய மூவர் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர்கள் பாடிய பாடல்களின் சிறப்புகளை ஒரு சிறு கட்டுரையாக எழுதி வருக.
