www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்/செப்டம்பர்
இயல் : 03
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : ஆன்ற குடிப்பிறத்தல்
அறிமுகம்:
கல்வி
என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல; அது ஒரு மாணவனின் உள்ளத்தில்
நற்பண்புகளை விதைத்து, அவனைச் சிறந்த மனிதனாக மாற்றும்
வல்லமை கொண்டது என்பதை ஒரு நிகழ்வின் மூலம் அறிதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்.
- திருக்குறள் மற்றும் ஆசிரியர் பி.ச. குப்புசாமியின்
சிறுகதைகள் குறித்த தகவல்கள்.
நோக்கம்:
- கல்வியின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்.
- பெற்றோரின் குணங்களை விட, பிள்ளைகளின் நற்பண்புகளே அவர்களின் அடையாளத்தை உருவாக்கும் என்பதை
உணர்தல்.
ஆசிரியர் குறிப்பு:
திருக்குறளின்
"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்" என்ற குறளுக்குப் புதிய அர்த்தத்தைத்
தந்து, ஒரு மாணவனின் வாழ்வை ஆசிரியர் எவ்வாறு மாற்றுகிறார் என்பதை
விளக்குதல். ஆசிரியர் பி.ச. குப்புசாமி, ஜெயகாந்தனோடு நெருங்கிப் பழகியவர் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின்
குறிப்புகளைப் பதிந்தவர் என்ற தகவலைப் பகிர்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
"அப்பன் திருடனாயிருக்கலாம், மகன் நல்லவனாக
இருப்பான்" என்ற விளக்கத்தின் மூலம், பழைய வம்சாவளி
இழிவுகளை நீக்கி, புதிய ஒழுக்கமான தலைமுறையை உருவாக்குவதே
உண்மையான பண்புடைமை என்பதை மாணவர்களுக்கு விவரித்தல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர் சகாதேவனின் செயலை வைத்து, ஒரு நல்ல மாணவனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் குறித்து
கலந்துரையாடுதல்.
- கதையின் மையக்கருத்தை மாணவர்களே சொந்த நடையில்
சொல்லச் செய்தல்.
மதிப்பீடு:
- LOT: சகாதேவன் யாரிடம்
வேட்டியைக் கொடுக்கச் சொன்னான்?
- MOT: "ஆன்ற குடிப்பிறத்தல்"
என்பதற்கு ஆசிரியர் கூறிய புதிய பொருள் யாது?
- HOT: சகாதேவனின் செயல், ஆசிரியரின் போதனையை எவ்வாறு மெய்ப்பித்தது?
கற்றல் விளைவுகள்:
- T808: ஒரு கட்டுரையைப் படித்த
பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் வினாக்களுக்கு
விடை காண முற்படல்.
- T815: தாம் அறிந்திடாத
சூழல்களைப் பற்றி கற்பனை செய்தும், நிகழ்வுகள் பற்றி மனதில்
உருவகித்தும் அவற்றைப் பற்றிச் சிந்தித்து எழுத்து வழி வெளிப்படுத்தல்.
தொடர் பணி:
திருக்குறளின்
கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையை உங்கள் சொந்த நடையில் சுருக்கி எழுதி
வருக.
