8TH-TAMIL-UNIT-3-PALTHURAIKKALVI-NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஆகஸ்ட்/செப்டம்பர்

இயல்                :         03

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       பல்துறைக்கல்வி


அறிமுகம்:

கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல, அது மனித ஆன்மாவின் வளர்ச்சிக்கும், அறிவுத் தேடலுக்கும், பண்பாட்டைக் காப்பதற்கும் உதவும் ஒரு நெறிமுறை என்பதைத் திரு.வி.க.வின் சிந்தனைகள் வழி அறிமுகம் செய்தல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல் .
  • திரு.வி.க.வின் புகைப்படம் மற்றும் அவர் எழுதிய நூல்களின் பட்டியல்.

  நோக்கம்:

  • ஏட்டுக்கல்வி, தாய்மொழி வழிக்கல்வி, காப்பியக் கல்வி, இயற்கைக் கல்வி, இசைக்கல்வி, நாடகக்கல்வி மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றின் இன்றியமையாமையை உணர்தல்.
  • கல்வி வருவாய் ஈட்டும் கருவி மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல் பயிற்சி என்பதைப் புரிந்துகொள்ளுதல்.

  ஆசிரியர் குறிப்பு:

·         "தமிழ்த் தென்றல்" என்று அழைக்கப்படும் திரு.வி.க.,

·         மனித வாழ்க்கையில் கல்வியின் பன்முகத்தன்மையை எவ்வாறு வலியுறுத்துகிறார் என்பதை விளக்குதல்.

·         ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது என்பதையும், கல்வி என்பது அறநெறியைப் பயில உதவும் கருவி என்பதையும் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துதல்.

  கருத்துரு வரைபடம்:

 விளக்கம்:

தமிழ்க் காவியங்கள் (சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவை) மாணவர்களின் உள்ளத்தில் எழும் இன்பத்தை விளக்குதல். ஏடுகளைப் பயில்வதோடு நில்லாது, இயற்கையோடு கலந்து கல்வி பயிலும் முறையையும், நவீன உலகிற்குத் தேவையான அறிவியல் கல்வியின் அவசியத்தையும் விரிவாகக் கற்பித்தல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான துறைகள் மற்றும் அந்தக் கல்வியின் தேவை குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.
  • திரு.வி.க. குறிப்பிடும் காப்பியங்களை அட்டவணைப்படுத்துதல்.

  மதிப்பீடு:

  • LOT: அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது எது?
  • MOT: தாய்மொழி வழிக்கல்வி ஏன் சிறப்பானது என்று திரு.வி.க. கூறுகிறார்?
  • HOT: திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில், இன்றைய சூழலில் எதனைக் கற்க விரும்புவீர்கள்? ஏன்?

  கற்றல் விளைவுகள்:

  • T808: ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல்.
  • T811: படித்த பிறகு பல்வேறு எழுத்தியியல் நடைகளையும் முறைகளையும் இனம் காணுதல்.
  • T813: தேவைப்படின் கலைக்களஞ்சியம் மற்றும் இணையதளத்தைப் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.

  தொடர் பணி:

திரு.வி.க. குறிப்பிடும் ஏதேனும் ஒரு காப்பியம் குறித்துச் சிறு கட்டுரை எழுதி வருக.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post