8TH-TAMIL-UNIT-3-PUTHIYAI THEETTU-NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஆகஸ்ட்/செப்டம்பர்

இயல்                :         03

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       புத்தியைத் தீட்டு


அறிமுகம்:

மனித வாழ்விற்கு அறிவே ஆற்றல்; வன்முறையை விட அறிவினாலும்

 அன்பினாலும் வெல்லும் வெற்றியே நிலையானது மற்றும் பெருமைக்குரியது

 என்பதை சில நிகழ்வுகளைக் கொண்டு அறிமுகம் செய்தல்

  கற்பித்தல் துணைக்கருவிகள்:


  • பாடநூல்
  • ஆலங்குடி சோமுவின் புகைப்படம்
  • பாடலில் இடம்பெறும் கருத்துகளை விளக்கும் அட்டைகள்.

  நோக்கம்:


  • அறிவே சிறந்த ஆயுதம் என்பதை மாணவர்கள் உணர்தல்.
  • ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி, அன்பிற்குப் பாதைவிடும் பண்பினை வளர்த்தல்.
  • கவிதையின் நயங்களை (எதுகை, மோனை, இயைபு) அறிதல்.

  ஆசிரியர் குறிப்பு:


·         திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்ற ஆலங்குடி சோமு, சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர் என்பதையும், அவர் கலைமாமணி விருது பெற்றவர் என்பதையும் விளக்குதல்.

·         ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பதையும், மன்னிக்கும் குணம் மாணிக்கக் கோயில் போன்றது என்பதையும் மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

கத்தியைத் தீட்டுவதை விட, புத்தியைத் தீட்டுவதே சிறந்தது என்று கவிஞர் வலியுறுத்துகிறார். பகைவன் வந்தாலும் அன்பால் வெல்ல வேண்டும் என்றும், அகம்பாவம் லாபமற்றது என்பதையும் பாடலின் வழி விளக்குதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):


  • மாணவர்கள் பாடலை உணர்ச்சியுடன் பாடுதல்.
  • "அறிவுதான் சிறந்த ஆயுதம்" - தலைப்பில் வகுப்பில் கலந்துரையாடல்.

  மதிப்பீடு:


  • LOT: பகைவர்கள் வரும்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
  • MOT: ஆலங்குடி சோமுவின் சிறப்புகளைக் கூறுக.
  • HOT: உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால், அவர்களை அன்பினால் நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

  கற்றல் விளைவுகள்:


  • T807: கட்டுரைகள், பாடல்களைப் படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.
  • T810: பாடலில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

  தொடர் பணி:

அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டி ஒரு தொகுப்பாக எழுதி வருக.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post