8TH-TAMIL-UNIT-3-PADARINTHU OZHUGUTHAL-NOTES OF LESSON

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஆகஸ்ட்/செப்டம்பர்

இயல்                :         03

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       பாடறிந்து ஒழுகுதல்


  அறிமுகம்:

அன்பு, அறிவு, பண்பு ஆகிய உயர்பண்புகளை மனிதன் எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும், வாழ்வியல் விழுமியங்களைச் சான்றோர் காட்டிய வழியில் பின்பற்றி நடப்பதன் சிறப்பையும் இப்பாடல் விளக்குகிறது.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்.
  • சங்க இலக்கியம் மற்றும் கலித்தொகை பற்றிய விளக்க அட்டைகள்.
  • காணொளிக்காட்சிகள்

  நோக்கம்:

  • சங்ககாலத் தமிழரின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை அறிந்து போற்றுதல்.
  • அன்பு, செறிவு, நிறை, பொறை போன்ற நற்பண்புகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தல்.

  ஆசிரியர் குறிப்பு:

·         கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார் என்பதையும், இது கலிப்பா எனும் பாவகையிலான நூல் என்பதையும் விளக்குதல்.

·         இல்வாழ்வு, நட்பு, பண்பு மற்றும் நீதிமுறை குறித்த சங்க இலக்கியத்தின் நுட்பமான பார்வையை மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

வறியவருக்கு உதவுதல், சான்றோர் வழியில் நடத்தல், வாக்கு தவறாமை மற்றும் நீதிமுறை தவறாது நடத்தல் போன்ற மனிதன் வளர்க்க வேண்டிய உயர்பண்புகளை நல்லந்துவனார் கலித்தொகையில் எவ்வாறு விளக்குகிறார் என்பதைக் கற்பித்தல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • பாடலைச் சீர்பிரித்து வாசித்தல்.
  • வகுப்பில் "நற்பண்புகள்" குறித்த பட்டியல் தயாரித்தல் மற்றும் கலந்துரையாடல்.

  மதிப்பீடு:

  • LOT: மறைபொருளைக் காத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  • MOT: பண்பு எனப்படுவது எது என்று கலித்தொகை விளக்குகிறது?
  • HOT: வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகளில் மிக முக்கியமானது என்று நீங்கள் கருதுவது எது? ஏன்?

  கற்றல் விளைவுகள்:

  • T808: கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல்.
  • T810: பாடலில் காணப்படும் சொற்கள், தொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

  தொடர் பணி:

பாடலில் இடம்பெற்றுள்ள நற்பண்புகளை விளக்கும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றை உங்கள் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்தலாம் என எழுதி வருக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post