www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
இயல் : 02
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திருக்குறள்
அறிமுகம்:
உலகப்
பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளின் அறக்கருத்துகளை மாணவர்களுக்கு அறிமுகம்
செய்து, அவற்றை வாழ்வியல் நெறிகளாகப் பின்பற்ற ஊக்குவித்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல் .
- திருவள்ளுவர் படம் மற்றும் திருக்குறள் கருத்துகள்
அடங்கிய அட்டைகள்.
நோக்கம்:
- வாழ்க்கைக்குத் தேவையான அறம், நடுவுநிலைமை, இடனறிதல் போன்ற விழுமியங்களை
அறிதல்.
- குறள்களில் பயின்று வரும் உவமையணி, இல்பொருள் உவமையணி மற்றும் பிறிதுமொழிதல் அணிகளைப் புரிந்துகொள்ளுதல்.
ஆசிரியர் குறிப்பு:
திருவள்ளுவரின்
காலம், திருக்குறளின் முப்பால் பகுப்பு (அறம், பொருள், இன்பம்) மற்றும் அதன் சிறப்புகளை விளக்குதல்.
ஒவ்வொரு குறளின் பொருளையும் தற்கால வாழ்வியலோடு தொடர்புபடுத்தி
மாணவர்களுக்கு விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
நடுவுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, குற்றங்கடிதல்,
இடனறிதல் ஆகிய அதிகாரங்களில் உள்ள பத்து குறள்களின் பொருளையும்,
அதில் கையாளப்பட்டுள்ள அணிநயங்களையும் விளக்குதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் குறள்களைச் சீர்பிரித்துப் பிழையின்றி
வாசித்தல்.
- குறள் கூறும் அறக்கருத்துகளைத் அன்றாட வாழ்வில்
எவ்வாறு பின்பற்றலாம் என்பது குறித்த கலந்துரையாடல்.
மதிப்பீடு:
- LOT: புகழாலும் பழியாலும்
அறியப்படுவது எது?
- MOT: 'கடல்ஓடா...' எனத்
தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக.
- HOT: 'வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை'
- இதற்கு நீங்கள் கூறும் விளக்கம் யாது?
கற்றல் விளைவுகள்:
- T808: கட்டுரையைப் படித்த
பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் வினாக்களுக்கு
விடை காண முற்படல்.
- T810: பாடலில் காணப்படும்
சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்களைப்
புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
தொடர் பணி:
திருக்குறளில்
உங்களுக்குப் பிடித்த ஐந்து குறள்களை எழுதி, அவற்றின் பொருளையும் எழுதி வருக.
