8TH-TAMIL-UNIT-2-MAYANGOLIGAL - NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஜூலை

இயல்                :         02

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       மயங்கொலிகள்

அறிமுகம்:

உச்சரிக்கும்போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கும் எழுத்துகளைக் கண்டறிந்து, அவற்றின் பொருள் வேறுபாடுகளை உணர்ந்து பிழையின்றி எழுதும் திறனைப் பெறுதல்.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்.
  • மயங்கொலி எழுத்துகள்
  • பிறப்பு இடங்களைக் காட்டும் விளக்கப்படங்கள்.

  நோக்கம்:

  • , , , , , , , ற ஆகிய எட்டு மயங்கொலி எழுத்துகளை வேறுபடுத்தி அறியுதல்.
  • இலக்கணப் பிழையின்றிச் சொற்களை உச்சரிக்கும் மற்றும் எழுதும் திறனை வளர்த்தல்.

  ஆசிரியர் குறிப்பு:

மயங்கொலிகள் என்றால் உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள் என்பதை விளக்குதல். நாவின் நுனி, அண்ணம், பற்கள் தொடும் இடங்களை விளக்கப்படங்கள் மூலம் விளக்கி, ஒவ்வொரு எழுத்துக்கும் இடையேயான பொருள் வேறுபாட்டை (எ.கா: மணம் - மனம், பணி - பனி) தெளிவுபடுத்துதல்.

  கருத்துரு வரைபடம்:

  விளக்கம்:

எழுத்துகளின் பிறப்பிடம் மற்றும் ஒலியின் தன்மையை விளக்குதல். குறிப்பாகத் தமிழுக்கே உரித்தான சிறப்பு 'ழகர' (ழ) ஒலியின் சிறப்பினை எடுத்துரைத்தல். தவறாக உச்சரிப்பதாலும், பிழையாக எழுதுவதாலும் ஏற்படும் பொருள் குழப்பங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மயங்கொலிச் சொற்களைப் பட்டியலிட்டு அவற்றின் பொருள்களை எழுதுதல்.
  • மயங்கொலிப் பிழைகள் உள்ள தொடர்களைத் திருத்தி எழுதும் பயிற்சி.

  மதிப்பீடு:

  • LOT: மயங்கொலி எழுத்துகள் யாவை?
  • MOT: , , ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.
  • HOT: தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

  கற்றல் விளைவுகள்:

  • T816: மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து, அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்.
  • T810: படித்தவற்றில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

  தொடர் பணி:

பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சித் தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி, புதிய மயங்கொலிச் சொற்களைக் கொண்டு வாக்கியங்களை உருவாக்கி வருக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post