8TH-TAMIL-UNIT-2-VEYTTUKILIYUM SARUGUMANUM - NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஜூலை

இயல்                :         02

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       வெட்டுக்கிளியும் சருகுமானும்

அறிமுகம்:

காடர்கள் என்னும் பழங்குடியினரின் கதைகள் வாயிலாக, ஒரு சூழலில் காட்டும் விவேகத்தையும், வாக்குறுதி மீறினால் ஏற்படும் விளைவுகளையும் விளக்கும் கதை இது.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்.
  • காடு, சிறுத்தை, வெட்டுக்கிளி மற்றும் சருகுமான் ஆகியவற்றின் படங்கள்.

  நோக்கம்:

  • சிறு விலங்குகளின் இயல்புகளையும், காட்டிலுள்ள சூழலையும் அறிந்துகொள்ளுதல்.
  • சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதன் அவசியத்தை உணர்தல்.
  • பழங்குடியினரின் வாய்மொழி இலக்கியங்களைச் சுவைத்தல்.

  ஆசிரியர் குறிப்பு:

பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வாழும் காடர்களின் "ஆல்அலப்பு" மொழியையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்துதல். வெட்டுக்கிளியின் வாயாடித் தன்மையால் ஏற்பட்ட சிக்கலையும், சருகுமானின் கூச்ச சுபாவத்தையும் ஒப்பிட்டு விளக்குதல்.

  கருத்துரு வரைபடம்:

  விளக்கம்:

பித்தக்கண்ணுவிடமிருந்து தப்பிக்க சருகுமான் ஒளிந்திருந்த நிலையில், வெட்டுக்கிளி வாக்குறுதியை மீறி நடந்துகொண்டதால் சருகுமான் பிடிபட வாய்ப்பு ஏற்பட்டதை விளக்குதல். இறுதியில் சருகுமான் தப்பித்தாலும், வெட்டுக்கிளிக்குக் கொடுத்த எச்சரிக்கையினால் இன்றும் வெட்டுக்கிளிகள் நிலைத்து இருக்க முடியாமல் குதித்துக் கொண்டே இருப்பதை நகைச்சுவையாகக் கூறுதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • இக்கதையை மாணவர்கள் கதாபாத்திரங்களாகப் பிரிந்து நாடகமாக நடித்துக் காட்டுதல்.
  • "சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல்" குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.

  மதிப்பீடு:

  • LOT: காடர்கள் வசிக்கும் பகுதி எது?
  • MOT: வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.
  • HOT: ஏன் வெட்டுக்கிளிகள் இன்றும் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்துக் கொண்டே இருக்கின்றன?

  கற்றல் விளைவுகள்::

  • T804: தமது சுற்றுப்புறத்தில் வழங்கும் நாட்டுப்புறக் கதைகளைப் பற்றி பேசுதல்.
  • T805: படித்தவற்றைப்பற்றிச் சிந்தித்து, புதிய நிகழ்வுகளைக் கற்பனை செய்து உருவாக்கி வெளிப்படுத்துதல்.

  தொடர் பணி:

இக்கதையில் வரும் பாத்திரங்களுக்குப் பதில், நீங்கள் ஒரு பாத்திரமாக இருந்தால் அந்தச் சூழலில் என்ன செய்திருப்பீர்கள்? என்பதை எழுதி வருக


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post