10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26- UNIT -1 - 50-MARK QUESTIONS

 

பத்தாம் வகுப்பு 

புதிய பாடத்திட்டம் 25 - 26

இயல் - 1

அலகுத் தேர்வு வினாத்தாள்

அலகுத் தேர்வுகள்

வகுப்பு : 10                                                                                அலகு : இயல் -1

பாடம்    : தமிழ்                                                                   மொத்த மதிப்பெண் : 50


I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                 6×1=6


1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ____

) இலையும்,சருகும்   ) தோகையும் சண்டும்  

) தாளும் ஓலையும்   ) சருகும் சண்டும்


2. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும _________

) எந் + தமிழ் + நா  ) எந்த + தமிழ் + நா   ) எம் + தமிழ் + நா    ) எந்தம் + தமிழ் + நா


3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே  __________

) பாடிய;கேட்டவர்          ) பாடல்;பாடிய    ) கேட்டவர்;பாடிய  ) பாடல்;கேட்டவர்


4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ___

)குலைவகை     ) மணிவகை   )கொழுந்துவகை     ) இலை வகை


5. சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……                                                          

)பாரதியார்  )ஜி.யு.போப்        ).சச்சிதானந்தன்  )பாவலரேறு


6. கண்ணதாசன் திரைப்படப் பாடலாசிரியர் ஆன ஆண்டு_______________

அ. 1948                ஆ.1949                இ. 1950                ஈ. 1951                               

                           

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                            4×1=4


“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “


7) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா          ஆ) எந்த + தமிழ் + நா 

இ) எம் + தமிழ் + நா          ஈ) எந்தம் + தமிழ் + நா


8) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத்தொகை           ஆ) வினைத்தொகை 

இ) உவமைத்தொகை      ஈ) உம்மைத்தொகை


9). ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை  ஆ) தமிழ் மொழியை  இ) தாய் நாட்டை ஈ) தம் குழந்தையை


10) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்              ஆ) சான்றோர்         இ) வேற்று மொழியினர்  ஈ) புலவர்


III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                              3×2=6


11. விடைக்கேற்ற வினா அமைக்க:-


அ. தமிழுக்கு கருவூலமாய் விளங்குவது பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை என்னும் நூல்.


ஆ. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியவர் தேவநேய பாவாணர்


12. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

  முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.


13. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல்வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.


IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                            4×2=8


14. பலகை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.


15. கலைச்சொல் தருக:- அ. HOMOGRAPH     ஆ. VOWEL


16. கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!

     உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது -  பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச்

      சொற்களைக் கண்டறிந்து எழுதுக.


17. மொழி பெயர்ப்பு:-

If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela


V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                 2×3=6

   பிரிவு -1


18.” புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது” – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.


19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நெல்லிலோ. செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரை வாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும்?


ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.


இ) தமிழ்நாட்டின் நெல்லின் வகைகளை எழுதுக.


20. சொல்லுதல் என்பதற்குப் பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல் எனப் பல சொற்கள் உள்ளன. இதைப் போன்று மழை, கடல், யானை போன்றவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களைத் தொகுத்து எழுதுக.


பிரிவு -2


எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                        2×3=6

வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.


21. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?


22.”அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாதது, புரிந்தது,புரியாதது,பிறந்தது,பிறவாதது” இவை அனைத்து யாம் அறிவோம்.இக்கூற்றில் தடித்த எழுத்துகளில் இருக்கும் வினைமுற்றுகளை தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.


23. “ அன்னை மொழியே “ பாடலை அடிமாறாமல் எழுதுக.


VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                       1×4=4


24. . அ.) நயம் பாராட்டுக:-                                                        

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

          மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

          தழைத்தினி தோங்குவதாய் தண்டமிழ் மொழியே   - கா.நமச்சிவாயர்      ( அல்லது )


ஆ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-



 

 

 








VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                                              2×5=10


25.அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.


    (அல்லது )

ஆ) மதுரை மாவட்டம் அழகப்பா நகர்,சுந்தரம் தெருவிலுள்ள 110ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் அன்பழகனின் மகன் குமரன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார்.அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சிபெற விரும்புகிறார். தேர்வர் தம்மைக் குமரனாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.


26. அ)  சான்றோர் வளர்த்த தமிழ் எனும் தலைப்பில் ஒரு பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை எழுதுக.    

( அல்லது )

     ஆ.) புயலிலே ஒரு தோணி – கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post