10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26- UNIT -2 - 50-MARK QUESTIONS

 

பத்தாம் வகுப்பு 

புதிய பாடத்திட்டம் 25 - 26

இயல் - 2

அலகுத் தேர்வு வினாத்தாள்

----------------------------------------------------------------------------------------------------------------------------

அலகுத் தேர்வு

வகுப்பு : 10                                                                                அலகு : இயல் -2

பாடம்    : தமிழ்                                                                   மொத்த மதிப்பெண் : 50


I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                 6×1=6


1. பரிபாடல் அடியில் விசும்பில் இசையில் ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?


அ) வானத்தையும் பாட்டையும்    ஆ) வான்வெளியில் , பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்         ஈ) வானத்தையும் பேரொலியையும்


2. மகிழுந்து வருமா? என்பது


) விளித்தொடர்                                ) எழுவாய்த் தொடர்     

) வினையெச்சத் தொடர்                  ) பெயரெச்சத் தொடர்


3. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

இருக்கும் போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை.


) நறுமணம்         ) காற்று     ) விண்மீன்        ) புதுமை


4. அதோ அந்தப் பறவை போல என்ற நூலின் ஆசிரியர் ___


) பாரதியார்     ) எஸ்.இராமகிருஷ்ணன்   ) ச. முகமது அலி  ) உதய சங்கர்


5. வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன். தடித்த சொற்களின் தொடர் வகையைத் தேர்க.

                                                       

) வினையெச்சத் தொடர்         ) அடுக்குத் தொடர்  

) எழுவாய் தொடர்                  ) பெயரெச்சத் தொடர்


6. மேக சந்தேசம் என்ற நூலை இயற்றியவர்________


அ. வியாசர்            ஆ.காளிதாசன்                 இ. வல்லிக்கண்ணன்      ஈ. அகிலா                                                       

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                         4×1=4


மேகங்கள் மிகவும் மென்மையானவை

இதழ் முகிழ்க்கும் மழலையின்

கன்னம் போல

அல்லது காதுக் குருத்து போல

எனினும் மேகங்கள்

துணிச்சலானவை

முதுகைக் கொடுத்து

சூரியனை மறைக்கும் போது

மேகங்கள் மிகவும்

கருணையுள்ளவை

தாகங்கள் தீர்க்கும் போது


7) இதழ் முகிழ்க்கும் போது மேகங்கள் எவ்வாறு காட்சித் தருகிறது?


அ) கண்கள்           ஆ) கழுத்து           இ) கன்னம்           ஈ) மூக்கு

8) மேகங்கள் கருணையுள்ளவை என எதைக் கொண்டு கவிஞர் கூறுகிறார்?


      அ) சூரியனை மறைக்கும் போது              ஆ) தாகங்கள் தீர்க்கும் போது

      இ) மலை முகட்டில் நடை பயிலும் போது    இ) மிதந்து செல்லும் போது


9) இக்கவிதையில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களைக் காண்க.


      அ) மேகங்கள் – மென்மையானவை        ஆ) இதழ் – கன்னம்

      இ) மழலையின் – குருத்து                      ஈ) துணிச்சல் – சூரியன்


10) இக்கவிதையின் ஆசிரியர்


      அ) பிரபஞ்சன்            ஆ) நாகூர் ரூமி      இ) கல்யாண்ஜி      ஈ) ந.முத்துசாமி


III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                   3×2=6


11. விடைக்கேற்ற வினா அமைக்க:-


அ. வடக்கிலிருந்து வீசும் போது வாடை காற்று எனப்படுகிறது.


ஆ. கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை எழுதியவர் முகம்மது ரஃபி


12. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.


13. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?.


IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                            4×2=8


14. கட்டுரை படித்த – இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.


15. கலைச்சொல் தருக:- அ. TORNADO          ஆ. SEA BREEZE


16. பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.


          மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களை பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு.


17. இரு சொற்களையும் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.


          அ) இயற்கை – செயற்கை                   ஆ) சிறு - சீறு


V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                 2×3=6


   பிரிவு -1

18.உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் அறிந்தவற்றைக் குறிப்பிடுக.


19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.


          ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகிறேன். இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகின்றேன். இந்தியாவின் முதுகெலும்[பு வேளாண்மை தானே!.இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன். இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.


அ). இந்தியாவின் முதுகெலும்பு எது?


ஆ). வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலம் எது?


இ). இந்தியாவிற்கு தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது?

20.வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப்பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து  ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். –

 வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.

பிரிவு -2


எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                        2×3=6


21. மொழிபெயர்க்க.


          The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.


22. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.






         

 


 23. “ நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது.வாடைக் காற்று வீசியது.

2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது ; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல் ; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.


( வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு )


VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                       1×4=4


24.அ) உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத் துறை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் வரைக.   

( அல்லது )


ஆ.) மாவட்ட அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.


VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                          2×5=10


25.அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.   

 

(அல்லது )


ஆ) காற்று பேசியதைப் போல, நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு எழுதுக.


26. அ) “ பிரும்மம் “ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க. 


( அல்லது )

     ஆ.) வேலூர் மாவட்டம், எண் -7 , பாரதி தெரு, ஊசூரில் வசிக்கும் தமிழ்செல்வன் த/பெ, ரவி என்பவர் பிறந்த தேதி 01-01-2000,அவர் உதவியாளர் பணி வேண்டிவிண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை தமிழ்ச்செல்வனாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post