பத்தாம் வகுப்பு
புதிய பாடத்திட்டம் 25 - 26
இயல் - 3
அலகுத் தேர்வு வினாத்தாள்
----------------------------------------------------------------------------------------------------------------------------
அலகுத் தேர்வுகள்
வகுப்பு : 10 அலகு
: இயல் -3
பாடம் : தமிழ் மொத்த
மதிப்பெண் : 50
I. அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 6×1=6
1. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது --------
அ) சுட்டி ஆ)
கிண்கிணி இ) குழை ஈ) சூழி
2. நன்மொழி என்பது _________
அ) பண்புத்தொகை ஆ)
உவமைத் தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
3. அல்லில் ஆயினும் விருந்துவரின்
உவக்கும் – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
_____
அ)
புறநானூறு ஆ) நற்றிணை இ) கம்பராமாயணம் ஈ) குறுந்தொகை
4. குழந்தையின் தலை 5 – 6ஆம் மாதங்களில்
மென்மையாக அசையும் பருவம்___
அ)
காப்பு ஆ) தால் இ) செங்கீரை ஈ) சப்பாணி
5. திறன்பேசியின் தொடுதிரையில் பேசிக் கொண்டிருந்தார். இதில் தடித்தச் சொல்லின் தொகைநிலைத் தொடரைத் தேர்க……
அ) உவமைத்தொகை ஆ) உம்மைத் தொகை
இ) வினைத் தொகை ஈ) அன்மொழித் தொகை
6. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான்
இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியைத் தேர்க.
அ. உவமை அணி ஆ. எடுத்துக்காட்டு உவமை அணி
இ. வஞ்சப் புகழ்ச்சி அணி ஈ. நிரல்நிறை அணி
II) பாடலைப் படித்து வினாக்களுக்கும்
விடையளி:- 4×1=4
“
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை
வடமாடப்
பைம்பொ
னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி
பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி
விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “
7.
இப்பாடலின் ஆசிரியர்
அ. கீரந்தையார் ஆ. குமரகுருபரர் இ. நம்பூதனார் ஈ. செய்குதம்பிப் பாவலர்
8.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பிள்ளைத் தமிழ் பருவம்
அ. அம்மானை ஆ. சப்பாணி இ. சிறுதேர் ஈ. செங்கீரை
9.
‘ குண்டமும் குழைகாதும் ‘ – இலக்கணக் குறிப்பு தருக.
அ. எண்ணும்மை ஆ. உம்மைத்தொகை
இ. பண்புத் தொகை ஈ.அடுக்குத் தொடர்
10.
கிண்கிணி, அரைநாண்,சுட்டி என்பன முறையே
அ. காலில் அணிவது, இடையில் அணிவது, தலையில் அணிவது
ஆ. நெற்றியில் அணிவது,இடையில் அணிவது,தலையில் அணிவது
இ. காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது
ஈ. இடையில் அணிவது, காதில் அணிவது, தலையில் அணிவது
III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-
4×2=8
வினா எண் : 14க்கு கட்டாயம் விடையளிக்கவும்
11.
விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ. சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும்.
ஆ. அதிவீரராம பாண்டியருக்கு, ‘ சீவலமாறன்
‘ என்ற பட்டப் பெயரும் உண்டு.
12. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய
வேண்டியதை எழுதுக.
13. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக்
கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
14.
“ பண்என்னாம் “ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 3×2=6
15. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக்
கண்டறிந்து விரித்து எழுதுக.
16. கலைச்சொல் தருக:- அ.
HOSPITALITY ஆ. BABY SHOWER
17. பழமொழியை நிறைவு செய்க.
அ) விருந்தும் __________ ஆ) ஒரு பானை ______________
V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:- 2×3=6
பிரிவு -1
18.’ இன்மையிலும் விருந்தோம்பல்’ குறித்துப்
புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக
19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு
விடை தருக.
தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று
உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர்
என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு.
முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். ‘ விருந்தே புதுமை ‘ என்று
தொல்காப்பியர் கூறியுள்ளார்.
அ) விருந்தோம்பல் என்பது
யாது?
ஆ) இக்காலத்தில் விருந்தினர்
என்போர் யார்?
இ) விருந்து பற்றி தொல்காப்பியரின்
கூற்று யாது?
20. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி
நின்று விளக்குக.
பிரிவு
-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;- 2×3=6
வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
21. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி
மேற்கொண்டனர். சிலர் மதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச்
செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்.
பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து
எழுதுக.
22‘ தனித்து உண்ணாமை ‘ என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின்
அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
23. “ விருந்தினனாக “ எனத் தொடங்கும்
காசிக்காண்டப் பாடலை அடிமாறாமல் எழுதுக.
VI) கீழ்க்காணும் வினாவிற்கு
விடையளி:-
1×4=4
24. அ.) நயம் பாராட்டுக:-
“ கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட
வெள்ளி எழும் “ - காளமேகப்
புலவர் ( அல்லது )
ஆ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-
VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி 2×5=10
25.அ.சங்க காலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது )
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை
அழகுற விவரித்து எழுதுக.
26. அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
( அல்லது )
ஆ.) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.