10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26- UNIT -4- 50-MARK QUESTIONS

   

பத்தாம் வகுப்பு 

புதிய பாடத்திட்டம் 25 - 26

இயல் - 4

அலகுத் தேர்வு வினாத்தாள்

----------------------------------------------------------------------------------------------------------------------------

அலகுத் தேர்வுகள்


வகுப்பு : 10                                                                                                                            அலகு : இயல் -4

பாடம்    : தமிழ்                                                                                                   மொத்த மதிப்பெண் : 50


I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                 6×1=6


1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு எனக் கூறியவர்.


அ) மு.கு.ஜகந்நாதர்    ஆ) மணவை முஸ்தபா  இ) வல்லிக்கண்ணன்      ஈ) ஸ்ரீராம்


2. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது


அ) இட வழுவமைதி                  ஆ) பால் வழுவமைதி

இ) திணை வழுவமைதி             ஈ) கால வழுவமைதி


3. இரவீந்தநாத தாகூர் _________ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ______ மொழியில், மொழிபெயர்த்த பிறகு தான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.


அ) ஆங்கில, வங்காளம்   ஆ) வங்காள, ஆங்கில

இ) வங்காள, தெலுங்கு     ஈ) தெலுங்கு, ஆங்கில


4. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?


அ) யாம்                 ஆ) நீவிர்               இ) அவர்      ஈ) நாம்


5. தந்த அரசர் என்றத் தொடரின் விளித் தொடரைத் தேர்க…… 

                                                         

) அரசருக்கு தந்தார்                ) தந்து சென்றார்         

) அரசே தருக!                       ) தந்த அரசர்


6. தொடர்களை முழுமை செய்வதற்குப் பொருத்தமான தொழிற்பெயர்களைத் தெரிவு செய்க.   காட்டு விலங்குகளைச் ________ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் _____ திருந்த உதவுகிறது.


அ. புதையல், புதைத்தல்             ஆ. சுட்டல், சுடுதல்         

இ. நடித்தல், நடிப்பு                     ஈ. காணுதல், காட்சி        

                                                

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                            4×1=4


கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்

பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்

மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன்

வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல்.


7. இப்பாடலின் ஆசிரியர்


அ. கீரந்தையார்      ஆ. குமரகுருபரர்      இ. நம்பூதனார்      ஈ. பரஞ்சோதி முனிவர்


8. இப்பாடலில் பனுவல் என்ற சொல்லின் பொருள்


அ. கல்வி               ஆ. நூல்                  இ. பாடல்             ஈ. அரசன்


9. இப்பாடல் இடம் பெற்ற நூல்


அ. கம்பராமாயணம்           ஆ. திருவிளையாடற் புராணம்   

இ. சிலப்பதிகாரம்                ஈ. தேம்பாவணி


10. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைத் தேர்க.


அ. கழிந்த – கேள்வியினான்      ஆ. பொழிந்த – மொழிந்து

இ. புலவன் – பனுவல்                ஈ. தாரானை – தொடுத்து


III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                               3×2=6


11. விடைக்கேற்ற வினா அமைக்க:-


அ. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ராகுல் சாங்கிருத்யாயன்


ஆ. மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்கவிடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிபெயர்ப்பு.


12. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.


13. வழு, வழாநிலை – பற்றி எழுதுக


IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                            4×2=8


14. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.


15. வழுவமைதி என்பது குறித்து எழுதுக.


16. கலைச்சொல் தருக:- அ. HUMAN RESOURCE      ஆ. CULTURE


17. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க


          அ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்             


ஆ) குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்.


V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                 2×3=6


   பிரிவு -1


18.மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.


19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.


ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம். மொழிபெயர்ப்பினால் புதிய சொற்களை உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.


அ. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?


ஆ. தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?


இ. மொழிபெயர்ப்பின் பயன் என்ன?


20. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.  - இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.


பிரிவு -2


எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                        2×3=6


வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.


21.வீட்டிலும், பள்ளியிலும் நீங்கள் நடந்துக் கொள்ளும் விதம் குறித்து எழுதுக


22. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு உதவுகிறது?


23. “ புண்ணிய புலவீர் “ எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம் பாடல்


VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                           1×4=4


24. அ.) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.

 பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக


          குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர்.


( அல்லது )


ஆ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-





VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                          2×5=10


25.அ.இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக


(அல்லது )

ஆ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை –

          மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.


26. குமார் தன் தந்தை செழியன் அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான்.அவரும் குமாரிடம் 500 ரூபாயும், 12, எழில் நகர், பாரதி தெரு, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற குமாராக தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.    


 ( அல்லது )


     ஆ.) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post