10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26- UNIT - 5 - 50-MARK QUESTIONS

    

பத்தாம் வகுப்பு 

புதிய பாடத்திட்டம் 25 - 26

இயல் - 4

அலகுத் தேர்வு வினாத்தாள்

----------------------------------------------------------------------------------------------------------------------------

அலகுத் தேர்வுகள்


வகுப்பு : 10                                                                                                                            அலகு : இயல் -5

பாடம்    : தமிழ்                                                                                                   மொத்த மதிப்பெண் : 50


I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                 6×1=6


1. சித்திரை, வைகாசி மாதங்களை ____________ காலம் என்பர்.


அ) முதுவேனில்       ஆ) பின்பனி       இ) முன்பனி           ஈ) இளவேனில்


2. “ மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ “ இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.


அ) கருமை    ஆ) பச்சை           இ) பழுப்பு              ஈ) நீலம்


3. விளரி யாழ் – எத்திணைக்குரிய கருபொருள்


அ) குறிஞ்சி   ஆ) முல்லை        இ) மருதம்   ஈ) நெய்தல்


4. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

   ______________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.


அ) சிவந்தது          ஆ) வெள்ளந்தி               இ) கருத்த   ஈ) பசும்

5. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?


அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?


6. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?


அ) பெரிய கத்தி                                  ஆ) இரும்பு ஈட்டி

இ) உழைத்தால் கிடைத்த ஊதியம்      ஈ) வில்லும் அம்பும்         

                                             

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                            4×1=4


"ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ

தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ

ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ"

7). இப்பாடல் இடம் பெற்ற நூல்


(அ) தேம்பாவணி  (ஆ) பெருமாள் திருமொழி  (இ) கம்பராமாயணம்   (ஈ) சிலப்பதிகாரம்


8). இப்பாடலின் ஆசிரியர்


(அ) இளங்கோவடிகள்  (ஆ) செய்கு தம்பி பாவலர்     (இ) கம்பர்     ஈ) வீரமாமுனிவர்


9). நெடுந்திரை – இலக்கணக் குறிப்பு தருக.


(அ) உவமைத் தொகை             (ஆ) பண்புத் தொகை  

(இ) உம்மைத் தொகை              (ஈ) வினைத்தொகை


10). இப்பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக


(அ) நெடுந்திரை – போவாரோ     (ஆ) நெடுந்திரை – நெடும்படை

(இ) தோழமை – ஏழமை               (ஈ) போவாரோ – வில்லாளோ


III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                   4×2=8


வினா எண் : 14க்கு கட்டாயம் விடையளிக்கவும்.


11. விடைக்கேற்ற வினா அமைக்க:-


அ. தலையில் கருவியைச் சுமந்தபடி ஆடும் ஆட்டங்கள் கரகாட்டமும், காவடியாட்டமும் ஆகும்.


ஆ. ‘ கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ எனப் பெருமைப்படுகிறார் பாரதி.


12.சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.


13. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?


14." குற்றம் " எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.


IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                            3×2=6


15. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருபொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்

முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.


16. கலைச்சொல் தருக:- அ. STORY TELLER   ஆ. SCREEN PLAY


17. தொடர்களை அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.


           அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.      

   

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                 2×3=6


   பிரிவு -1


18. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.


19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.


 ‘ கவியரங்குகளே தமக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!” என்பார் கலைஞர். அறிஞர் கூடும் கவியரங்கத்தை மக்கள் கூடும் கவியரங்கமாக்கியவர் அவர். பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையும் இதயம் தொடும் இனிய சந்தமும் வாய்ந்தவை கலைஞரின் கவிதைகள். கலைஞர் இயற்றியுள்ள கவிதைகள், ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ‘ புறநானூற்றுத்தாய் ‘ என்னும் தலைப்பிலமைந்த வசன கவிதையும் புகழ்பெற்ற ஒன்று.


அ. அறிஞர் கூடும் கவியரங்கத்தை மக்கள் கூடும் கவியரங்கமாக மாற்றியவர் யார்?


ஆ. கலைஞரின் கவிதைகள் எத்தன்மை வாய்ந்தவை?


இ. கலைஞர் எழுதிய வசன கவிதை எது?


20. கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

 

 

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                        2×3=6


வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.


21. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்தப்பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக் கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.


22. கம்பராமாயணப் பாடல் அடிகளுக்கு ஏற்ற பொருளை எழுதுக.


கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே

 

தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட

 

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ

 


23. “ தண்டலை “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்


VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                       1×4=4


24. அ.) . வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.  

 

  ( அல்லது )


ஆ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-


 

 

VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                          2×5=10


25.அ.  போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.  


(அல்லது )


ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக,


26. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி….. தண்டலை மயில்கள் ஆட…....  இவ்வுரையைத் தொடர்க.  


( அல்லது )

  ஆ.) பாய்ச்சல் கதையின் மையக் கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post