பத்தாம் வகுப்பு
புதிய பாடத்திட்டம் 25 - 26
இயல் - 1
அலகுத் தேர்வு வினாத்தாள்
------------------------------------------------------------------------------------------------------------------------
அலகுத் தேர்வுகள்
வகுப்பு : 10 அலகு
: இயல் -6
பாடம் : தமிழ் மொத்த
மதிப்பெண் : 50
I. அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 6×1=6
1. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக்
கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழநாடு, சேர நாடு
இ) சேரநாடு, சோழநாடு ஈ)
சோழநாடு, பாண்டியநாடு
2. முத்தொள்ளாயிரம் எப் பா வகையால் எழுதப்பட்ட நூல்
அ)
ஆசிரியப்பா ஆ) கலிப்பா
இ) வெண்பா ஈ) வஞ்சிப்பா
3. தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன _________
அ) சோறு ஆ) கற்றல் இ)
எழுத்து ஈ)
கரு
4. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
5. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….
அ) உழவு,மண்,ஏர்,மாடு ஆ) மண்,மாடு,ஏர்,உழவு
இ) ஏர்,உழவு,மாடு,மண் ஈ) உழவு,ஏர்,மண்,மாடு
6. கண்ணுள் வினைஞர் – என்போர் யார்?
அ) சிற்பி ஆ) பிட்டு விற்பவர் இ) ஓவியர் ஈ) நெசவாளர்
II) பாடலைப் படித்து வினாக்களுக்கும்
விடையளி:- 4×1=4
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி
7).இப்பாடலடிகள் இடம்
பெற்ற நூல்.
அ) நீதிவெண்பா ஆ)
சிலப்பதிகாரம் இ) கம்பராமாயணம் ஈ) மணிமேகலை
8) இப்பாடலின் ஆசிரியர்
_________
அ) சாத்தனார் ஆ) கம்பர் இ) இளங்கோவடிகள் ஈ) நக்கீரர்
9). பாடலில் உள்ள சீர்
மோனைச் சொற்களைக் காண்க
அ)
கண்ணுள் - மண்ணீட்டு ஆ) கிழியினும் - கிடையினும்
இ)
பொன்செய் – நன்கலம் ஈ) தருநரும் –
துன்னரும்
10). மண்ணீட்டாளர்
என்போர் யார் ?
அ)
ஓவியர் ஆ) சிற்பி இ) நெய்பவர் ஈ) எண்ணெய் விற்பவர்
III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-
3×2=6
11.
விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ. ஆஸ்திரியா நாட்டின் தலைநகரம் வியன்னா.
ஆ. 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி
மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.
12. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும்
வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
13. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச்
சான்று தருக.
IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 4×2=8
14.பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.
15. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி
சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு
அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு
அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி
16. கலைச்சொல் தருக:- அ.
DICOURSE ஆ. BORDER
17. பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக்
கண்டறிந்து எழுதுக;-
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப்
பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:- 2×3=6
பிரிவு -1
18. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப்
பொருள் விளக்குக.
19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு
விடை தருக.
மருவூர்ப்பாக்கம் என்பது நகரின் உட்பகுதியாகும். பட்டின பாக்கம்
என்பது கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்;
வாணிபம் செய்வோரும், தொழில் செய்வோரும் வாழ்ந்த பகுதி அது. அங்கே தெருக்கள் தனித்தனியே
இன்ன இன்ன தொழிலுக்கு என வகைப்படுத்தி இருந்தன. நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில்
குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும், அணி கலன்களும்
விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்களைக் குவித்து விற்கும் தெரு கூலவீதி
எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலை பகர்வோர், வெற்றிலை, வாசனைப்
பொருள்கள் விற்போர், இறைச்சி, எண்ணெய் விற்போர், பொன், வெள்ளி, செம்புப் பாத்திரக்
கடைகள் வைத்திருப்போர், பொம்மைகள் விற்போர், சித்திர வேலைக்காரர், தச்சர், கம்மாளர்,
தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லுநர்கள், சிறு தொழில் செய்பவர்கள்
இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
அ. மரூவூர் பாக்கம் என்பது எப்பகுதி?
ஆ.பண்டங்கள்
குவித்து விற்கும் தெரு எவ்வாறு அழைக்கப்பட்டது?
இ.
கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதி எது?
20. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ்
எண்ணுரு தருக
மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக
மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ்
இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை
முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில்
பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை
ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகின்றன.
பிரிவு
-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;- 2×3=6
வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
21. அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும்
நிறுவியர் பெயர்,நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப்
பார்த்திருப்பீர்கள்.இவை நமது இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை.அது போலவே கோவில்களிலும்
பழமையான நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம் பெற்றிருக்கும்.
அவை நம் பழம் பெருமையையும் வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்கள் என்று அறிவீர்கள்
தானே?
கல்வெட்டுகள்
நம் வரலாற்றைப் புலப்படுத்துபவை.
இவற்றைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும்
உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.
22. பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு
விடை எழுதுக.
பகர்வனர் திரிதிரு
நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
அ)
இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
ஆ)
பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ)
எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
ஈ)
காருகர் – பொருள் தருக.
உ)
இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
23. “ அள்ளல் “ எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடல்
VI) கீழ்க்காணும் வினாவிற்கு
விடையளி:-
1×4=4
24. அ.) தமிழ்வேந்தன் என்பவரின் மகள் வான்மலர், அரசு உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம், கடலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு
முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு
மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் சேர விரும்புகிறார். தேர்வர்
தன்னை வான்மலராகக் கருதி,
கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
(
அல்லது)
ஆ.) காட்சியைக் கண்டு
கவினுற எழுதுக:-
25.அ. நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
(அல்லது )
ஆ) . நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக்
கடிதம் எழுதுக.
26. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
(
அல்லது )
ஆ.) உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்பு மிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து எழுதுக. குறிப்பு : பூ விற்பவர், சாலையோர உ