10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26- UNIT - 7 - 50-MARK QUESTIONS

     

பத்தாம் வகுப்பு 

புதிய பாடத்திட்டம் 25 - 26

இயல் - 7

அலகுத் தேர்வு வினாத்தாள்

----------------------------------------------------------------------------------------------------------------------------

அலகுத் தேர்வுகள்


வகுப்பு : 10                                                                                                                    அலகு : இயல் -7


பாடம்    : தமிழ்                                                                                                   மொத்த மதிப்பெண் : 50


I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                 6×1=6


1. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?


அ) ஒரு சிறு இசை                     ஆ) முன்பின்

இ) அந்நியமற்ற நதி                  ஈ) உயரப் பறத்தல்


2. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் __


அ) அகவற்பா         ஆ) வெண்பா           இ) வஞ்சிப்பா       ஈ) கலிப்பா


3. தமிழ்ச்செல்வன் போட்டித் தேர்வில் படித்து வெற்றிப் பெற்றான். இத்தொடர் உணர்த்தும் மரபுத் தொடரைத் தேர்க.


அ) மனக்கோட்டை                    ஆ) அள்ளி இறைத்தல்            

இ) கண்ணும் கருத்தும்              ஈ) ஆறப்போடுதல்


4. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது______


அ) பிரம்ம கமலம்   ஆ) குறிஞ்சி           இ) சண்பகம்          ஈ) மூங்கில்


5. எழுவரின் கொடைப் பெருமையைக் கூறும் நூல்______.


          அ) புறநானூறு                 ஆ) சிறுபாணாற்றுப்படை 

இ) குறுந்தொகை            ஈ) நற்றிணை


6. கண்ணுள் வினைஞர் – என்போர் யார்?


அ) சிற்பி      ஆ) பிட்டு விற்பவர்          இ) ஓவியர்             ஈ) நெசவாளர்                                                  

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                            4×1=4


உய்முறை அறியேன்; ஓர்ந்த

  உணர்வினொத்து உறுப்பும் இல்லா

மெய்முறை அறியேன்; மெய்தான்

  விரும்பிய உணவு தேடச்

செய்முறை அறியேன்; கானில்

  செல்வழி அறியேன்; தாய்தன்

மைமுறை அறிந்தேன் தாயும்

   கடிந்தெனைத் தனித்துப் போனாள் ”


7) இப்பாடலின் ஆசிரியர்


அ) தமிழழகனார்    ஆ) பாரதியார்          இ) வீரமாமுனிவர்            ஈ) பாரதிதாசன்


8) இப்பாடல் இடம் பெற்ற நூல்


அ) கம்பராமாயணம்          ஆ) தேம்பாவணி     இ) சிலப்பதிகாரம்  ஈ) காசிக்காண்டம்


9). பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களைத் தேர்க


அ) உய்முறை - உணர்வு                    ஆ) மெய்முறை – செல்வழி      

இ) மெய்முறை - செய்முறை              ஈ)  தாய் - கடிந்தெனை


10) செய்முறை என்பதன் இலக்கண குறிப்பு தருக_____


அ) வினைத்தொகை  ஆ) தொழில் பெயர்      இ) வினைமுற்று   ஈ) பெயரெச்சம்


III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                   3×2=6


11. விடைக்கேற்ற வினா அமைக்க:-


அ. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான முதல் தரமான அறங்கள்.


ஆ. வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை சந்தா சாகிப் என்னும் மன்னர் அளித்தார்.


12. சங்க காலத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?


13 பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?


IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                            4×2=8


14. குறிப்பு வரைக:- அவையம்


15. குறள் வெண்பாவின் இலக்கணத்தை  எழுதி எடுத்துக்காட்டுத் தருக.


16. கலைச்சொல் தருக:- அ. HAPPINESS        ஆ. TRUTH


17. சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள் தருக.

        அ) வருந்தாமரை                       ஆ) பலகையொலி


V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                 2×3=6


   பிரிவு -1


18. வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக


19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.


தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர்,புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.


அ) ஆவூர் மூழங்கிழாரின் போர் அறம் யாது?


ஆ) போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?


இ) யாருக்கெல்லாம் தீங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும்?


20. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.


பிரிவு -2


எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                        2×3=6


வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.


21. மொழிபெயர்க்க.


1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein


2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb


3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle


4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill


22. நயம் பாராட்டுக


கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

          உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

    மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

          மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

   ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

          ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.       வள்ளலார்.


23. “ நவமணி  “ எனத் தொடங்கும் தேம்பாவணி பாடல்  


VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                       1×4=4


24. அ.) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக  


( அல்லது )


ஆ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-



 

VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                          2×5=10


25.அகருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க


(அல்லது )


ஆ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.


26. கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.   


( அல்லது )


  ஆ.) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.


மாணவன்கொக்கைப் போல,கோழியைப் போலஉப்பைப் போலஇருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழிகண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்ஆசிரியர் விளக்கம்மாணவன் மகிழ்ச்சி.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post