9TH-TAMIL-THIRAN-ANSWER KEY- AGARATHIL PORUL KANDU EZHUTHUGA

ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025

🌾 ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025

📗 வகுப்புநிலைத் திறன்கள் – அகராதியில் பொருளறிதல்

1.1. திருக்குறளின் பொருளை அகராதி உதவியுடன் எழுதுக.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்

சொற்பொருள்
அன்பு - கருணை, பாசம்  
நாண் - வெட்கம்  
ஒப்புரவு - ஒற்றுமை  
கண்ணோட்டம் - இரக்கம்  
வாய்மையொடு - உண்மை  

குறளின் பொருள் :
அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் மனிதனின் நல்லொழுக்கத்தின் தூண்களாக விளங்குகின்றன.  

1.2. பாடலின் பொருளை அகராதி உதவியுடன் எழுதுக.
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்  
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்  
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு  
எல்லோர்க்கும் பெய்யும் மழை.

சொற்பொருள்
இறைத்த - பாய்ச்சிய  
பொசியுமாம் - பெய்தல்  
உளரேல் - இருந்தால்  
பொருட்டு - அதனால்  

பாடலின் பொருள் :
நெல்லுக்காக (பயிருக்காக) நீரை இறைத்தால், அது வாய்க்காலில் ஓடி பக்கத்தில் வளரும் புல்லுக்கும் சென்றடையும்.  
அதைப் போலவே, இவ்வுலகில் ஒரு நல்ல மனிதர் ஒருவராவது இருந்தால், அவருடைய நற்குணங்களுக்காக முழு உலகிற்கும் மழை பெய்யும்.  

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post