ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
🌿 ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
📘 வகுப்புநிலைத் திறன்கள் – பொருளுணர்ந்து படித்தல்
2.1. தொடர்களைப் பொருளுக்கு ஏற்பக் கோடிட்டுப் பிரித்துப் படித்துக் காட்டுக.
அ) யாழ்நிலா/வீட்டுக்குச்/சென்றாளே!
யாழ்/நிலா வீட்டுக்குச்/சென்றாளே!
ஆ) பலகைகள்/ உடைந்து பேரதிர்ச்சி தந்ததல்லவா?
பல/கைகள் / உடைந்து/ பேரதிர்ச்சி தந்ததல்லவா?
இ) அந்த / மான் பார்க்க / எப்பொழுது / செல்வோமெனச் சொல்
அந்தமான்/ பார்க்க எப்பொழுது / செல்வோமெனச் சொல்
ஈ) நேற்று /தான் கண்ட / காட்சிகளை / விவரித்துக் கொண்டிருந்தார்.
நேற்றுதான்/ கண்ட காட்சிகளை / விவரித்துக் கொண்டிருந்தார்.
2.2. பத்தியைப் பொருளுக்கு ஏற்பக் கோடிட்டுப் பிரித்துப் படித்துக் காட்டுக.
மனிதநேயம் / என்ற சொல்லுக்கு / மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் / காட்டும் அன்பு என்று பொருள்./ இதில் / உயிரிரக்கப் பண்பு / இன்றியமையாத / இடம் பெறுகிறது./அன்பே/ மகிழ்ச்சியின் / ஊற்றாகும். அதுவே/ மனித மனங்களில் உள்ள / மாசுகளை நீக்கும்./ மனிதர்களிடம்/ மட்டுமன்றி மற்ற / உயிர்களிடத்தும் / அன்பு காட்ட வேண்டும்./ “ வாடிய / பயிரைக் கண்டபோதெல்லாம் /வாடினேன்”/ என்ற வள்ளலாரின் / உயிரிரக்கப்பண்பு / போற்றுவதற்கு உரியது.
மனிதநேயம் / உள்ளவர்கள் /இல்லை என்றால் / இவ்வுலகத்தில் / பல சீர்குலைவுகள்/ ஏற்படும்./மனித நேயத்தோடு / வாழ்பவர்கள் /இருப்பதால் தான்/ இவ்வுலகம் / சீராக இயங்குகிறது.
மனிதநேயத்துடன் / வாழ்ந்து /வருபவர்களை / நினைவுகூறும் / வகையில் / உலக மனிதநேய நாள்/ கொண்டாடப்படுகிறது.