THIRAN தமிழ் அடிப்படைத் திறனறி மதிப்பீடு – புதிய மாதிரி வினாத்தாள் | PDF இலவச பதிவிறக்கம் | Tamil Worksheet 2026

 


தமிழ் – அடிப்படைத் திறனறி மதிப்பீடு

பெயர் : _______________________            வகுப்பு & பிரிவு : _______________

மதிப்பெண் : 20                                                                 நேரம் : 40 நிமிடம்


1. படத்தின் பெயர் எது? () குறியிடுக. (2 × 1 = 2)

அ) 🍌

மாதுளை

வாழைப்பழம்

மாம்பழம்

ஆ) 🦚

குருவி

மயில்

கிளி


2. படத்தின் பெயரை எடுத்து எழுதுக. (2 × 1 = 2)

(மாமரம், மலை, பட்டாம்பூச்சி, அணில்)

🦋 ______________________

 

⛰️ ______________________

 


3. தொகுப்பில் வேறுபட்ட சொல்லை வட்டமிடுக. (2 × 1 = 2)

அ) சிங்கம் – புலி – மான் – பேருந்து

ஆ) நெல் – கோதுமை – கம்பு – மாம்பழம்


4. தொடர்புடைய சொல்லை எழுதுக. (2 × 1 = 2)

(மலர், தேன், ஆசிரியர், பள்ளி)

தேனீ – __________________       மாணவர் – __________________


5. அகர வரிசைப்படுத்துக. (2 × 1 = 2)

விளக்கு, வண்டு, வயல், வானம், வளையல், வாத்து, விலங்கு, வைரம்




6. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக. (2 × 1 = 2)

(மலர்ந்தது, பாடியது, வீசியது, ஓடியது)

அ) குயில் __________________                 ஆ) பூ __________________

7. சொற்களை ஒழுங்குபடுத்தி தொடராக்குக. (2 × 1 = 2)

(மாணவர்கள், பள்ளிக்கு, சென்றனர், மகிழ்ச்சியுடன்)

பள்ளிக்கு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர்.

மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர்.

சென்றனர் பள்ளிக்கு மாணவர்கள் மகிழ்ச்சியுடன்.


8. படத்தைப் பார்த்து இரண்டு சொற்கள் / தொடர்கள் எழுதுக. (2 × 1 = 2)

அ) _______________________________

ஆ) _______________________________


9. படித்து விடையளிக்க. (2 × 1 = 2)

மரம் நமக்கு நிழல் தருகிறது. பழங்களையும் தருகிறது. பறவைகள் மரங்களில் கூடு கட்டுகின்றன. மரங்களை வளர்ப்பது நமது கடமையாகும்.

வினாக்கள்

1. உரைப்பகுதி எதைப் பற்றிக் கூறுகிறது?

விலங்குகள்

மரங்கள்

ஆறுகள்

2. மரத்தில் யார் கூடு கட்டுகின்றனர்?


10. படித்துக் காட்டுக. (2 × 1 = 2)

 

அ) சொற்களைப் படித்துக் காட்டுக

கொய்யாப்பழம்

பட்டாம்பூச்சி

நூலகம்

விளையாட்டு

 

ஆ) தொடர்களைப் படித்துக் காட்டுக

அ. எங்கள் பள்ளி மிகவும் அழகாக உள்ளது.

ஆ. நாம் தினமும் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும்.

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post