காலாண்டுத் தேர்வு - 2026
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
புத்தக மதிப்பீட்டு வினாக்கள் தொகுப்பு
இயல் 1 முதல் 3 வரை
இளந்தமிழ் – வழிகாட்டிக் குழு
📚 9ஆம் வகுப்பு தமிழ் – காலாண்டுத் தேர்வு 2026
இயல் 1 முதல் 3 வரை பாடநூலில் இடம்பெற்றுள்ள பலவுள் தெரிக, குறுவினா, சிறுவினா, நெடுவினா ஆகிய மதிப்பீட்டு வினாக்களின் முழுமையான தொகுப்பு. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இயல் 1 முதல் 3 வரை பாடநூலில் இடம்பெற்றுள்ள பலவுள் தெரிக, குறுவினா, சிறுவினா, நெடுவினா ஆகிய மதிப்பீட்டு வினாக்களின் முழுமையான தொகுப்பு. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
📝 பலவுள் தெரிக
📖 இயல் 1
- திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?
- தமிழ்விடு தூது _________ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
- பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?
- “காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! – எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!” – இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?
- சிந்தாமணி என்பதன் இலக்கணக்குறிப்பு –
📖 இயல் 2
- “மாடு” – என்பதன் பொருள் என்ன?
- நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
- சரியான தொடர்களைத் தெரிவு செய்க.
- பகுதி, விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?
- மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
📖 இயல் 3
- பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக.
- முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
- பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக.
- தோரண வீதியும், தோமறு கோட்டியும் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
- பொருந்தாத தொடரைக் கண்டறிக.
✏️ குறுவினா
📖 இயல் 1
- நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
- தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
- கண்ணி என்பதன் விளக்கம் யாது?
- “அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்” – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?
- தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
- அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
📖 இயல் 2
- “கூவல்” என்று அழைக்கப்படுவது எது?
- உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.
- நிலையான வானத்தில், தோன்றி மறையும் காட்சியைப் பெரியபுராணம் எதனுடன் ஒப்பிடுகிறது?
- மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
📖 இயல் 3
- நீங்கள் வாழும் பகுதியில் ஏறு தழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
- ஏறு தழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் சுட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
- பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.
- “கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
- “கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்த” – இவ்வடிகளில் கண்ணுக் கினியான் என்பது யாரைக் குறிக்கிறது?
- காலவாகுபெயர் – குறிப்பு தருக.
📚 சிறுவினா
📖 இயல் 1
- தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.
- திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
- மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
- “புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்” – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
📖 இயல் 2
- அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.
- நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
- சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
- வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும் செய்தியை விளக்கி எழுதுக.
📖 இயல் 3
- ஏறு தழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
- திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
- உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
- தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
- அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.
🖊️ நெடுவினா
📖 இயல் 1
- காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.
- புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.
📖 இயல் 2
- வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.
- பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
- ’தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
📖 இயல் 3
- ஏறு தழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
- பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
- ’தாய்மைக்கு வறட்சி இல்லை’ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.
🎯 தேர்வுக்கான பயிற்சி:
மேற்கண்ட வினாக்களை இயல் வாரியாகப் படித்து, முக்கியமான சொற்கள் மற்றும் கருத்துகளை அடிக்கோடிட்டு, எழுத்துப் பயிற்சியுடன் மீள்பார்வை செய்வது தேர்வுத் தயாரிப்பிற்கு உதவும்.
மேற்கண்ட வினாக்களை இயல் வாரியாகப் படித்து, முக்கியமான சொற்கள் மற்றும் கருத்துகளை அடிக்கோடிட்டு, எழுத்துப் பயிற்சியுடன் மீள்பார்வை செய்வது தேர்வுத் தயாரிப்பிற்கு உதவும்.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...
