www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
இயல் : 02
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : தமிழர் மருத்துவம்
அறிமுகம்:
உணவே
மருந்தாக வாழ்ந்த பழந்தமிழர்களின் மரபுசார்ந்த மருத்துவ முறைகளையும், நோய்க்கான காரணங்களையும், வாழ்வியல் நெறிகளையும்
சித்த மருத்துவர் கு. சிவராமன் அவர்களின் நேர்காணல் வழி அறிதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- பாடநூல்
- சித்த மருத்துவ மூலிகைகள் மற்றும் சிறுதானியங்களின்
மாதிரிகள் அல்லது படங்கள்.
- காணொளிக்காட்சிகள்
நோக்கம்:
- தமிழர் மருத்துவத்தின் தொன்மையையும் சிறப்பையும்
புரிந்துகொள்ளுதல்.
- வருமுன் காக்கும் வாழ்வியல் முறைகளை
நடைமுறைப்படுத்துதல்.
ஆசிரியர் குறிப்பு:
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப,
உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி,
யோகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பே ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை
என்பதை வலியுறுத்துதல். தமிழர் மருத்துவம் சுற்றுச்சூழலைச்
சிதைக்காத, சூழலுக்கு இசைந்த மருத்துவம் என்பதை விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
வேர், தழை, பற்பம்,
செந்தூரம் போன்றவற்றைப் பயன்படுத்தி, நாட்பட்ட
நோய்களையும் குணப்படுத்தும் தமிழர் மருத்துவத்தின் சிறப்பை விளக்குதல். நவீன கால நோய்களுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத மரபுசார்ந்த மருத்துவத்தின்
தேவையை எடுத்துரைத்தல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- மாணவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவமுறைகள் பற்றி
வகுப்பில் கலந்துரையாடுதல்.
- எளிமையாகக் கிடைக்கக்கூடிய மூலிகைகள் மற்றும்
அவற்றின் பயன்களைப் பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
- LOT: தொடக்க காலத்தில்
மனிதர்கள் மருத்துவத்திற்கு எதனைப் பயன்படுத்தினர்?
- MOT: தமிழர் மருத்துவத்தில்
பக்கவிளைவுகள் இல்லை என்பதற்கு மருத்துவர் கூறும் காரணம் என்ன?
- HOT: நோயின்றி வாழ நாம்
என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
கற்றல் விளைவுகள்::
- T808: கட்டுரையைப் படித்த
பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் வினாக்களுக்கு
விடை காண முற்படல்.
- T813: பார்வை நூல்கள் மற்றும்
கலைக்களஞ்சியங்களைப் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.
- T817: மற்றவர்கள் ஒரு
குறிப்பிட்ட சூழலில் சொன்ன சொற்களைப் பிறிதொரு சூழலில் தனது மொழிநடையில்
பயன்படுத்துதல்.
தொடர் பணி:
உங்கள் பகுதியில் கிடைக்கும் ஏதேனும் ஐந்து மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி, அவற்றின் பெயர்களையும் மருத்துவப் பயன்களையும் எழுதி வருக.
