8TH-TAMIL-UNIT-2-PATTAMARAM - NOTES OF LESSON

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

மாதம்               :       ஜூலை

இயல்                :         02

வகுப்பு             :       எட்டாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       பட்டமரம்

அறிமுகம்:

மரம் மனித வாழ்வின் இன்றியமையாத அங்கமாகும். பட்டுப்போன மரமொன்றைக் கண்டு கவிஞர் தமிழ்ஒளி கொள்ளும் வருத்தத்தையும், இயற்கையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் இப்பாடம் உணர்த்துகிறது.

  கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • பாடநூல்.
  • பட்டுப்போன மரத்தின் நிழற்படம் அல்லது அதன் ஓவியம்.

  நோக்கம்:

  • மரங்களின் சிறப்பை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்கும் மனப்பான்மையை வளர்த்தல்.
  • கவிதையின் மூலம் கவிஞரின் வருத்தத்தைப் புரிந்துகொண்டு இயற்கையின் மீது அன்பு செலுத்துதல்.

  ஆசிரியர் குறிப்பு:

கவிஞர் தமிழ்ஒளி பாரதியாரின் கவிமரபு வழி வந்தவர் என்பதையும், மரம் என்னும் உயிர் பட்டுப்போனதால் ஏற்படும் துன்பத்தை அவர் உணர்ச்சிகரமாகப் பாடியுள்ளதையும் விளக்குதல். மரம் வெட்டப்படுவதால் ஏற்படும் சூழலியல் மாற்றங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்.

  கருத்துரு வரைபடம்:

  விளக்கம்:

·         இலைகளும் கிளைகளும் இன்றி வாடிய மரத்தின் நிலையை விவரித்து, மரம் தன் அழகையும் பயனையும் இழந்ததால் கவிஞர் வருந்தும் சூழலை விளக்குதல்.

·         சிறுவர்கள் குதிரை ஓட்டி விளையாடிய மரத்தின் பொற்காலம் இன்று வெறும் கனவாக முடிந்தது என்ற கவிஞரின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ளுதல்.

  செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மரங்களின் பயன்கள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல்.
  • மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பட்டியலிடுதல்.

  மதிப்பீடு:

  • LOT: மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது எது?
  • MOT: பட்டமரம் ஏன் தனது அழகை இழந்தது?
  • HOT: மரங்கள் பட்டுப்போகாமல் காக்க நீங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகள் யாவை?

  கற்றல் விளைவுகள்::

  • T801: பாடப்பொருள் குறித்த உரையாடல் மூலம் மரத்தின் விவரிப்புகளைப் புரிந்து கொள்ளுதல்.
  • T807: பாடலைப் படித்து ஆய்வு செய்து சூழலியல் மாற்றங்கள் போன்ற குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல்.
  • T812: படைப்பாளியின் சொற்சித்திரத்தை நயம்படப் பாராட்டுதல்.

  தொடர் பணி:

மரங்கள் வெட்டப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறு கட்டுரை எழுதி வருக.

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post