மாதம் :
ஜூன்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : ஒளி பிறந்தது
அறிமுகம்:
![]()
ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் இளமைக்கால
அனுபவங்கள் மற்றும் அறிவியலில் அவர் பெற்ற ஆர்வம் குறித்த உரையாடலை
அறிமுகப்படுத்துதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
கரும்பலகை, டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் படம், ஏவுகணை மாதிரி படங்கள்,
அறிவியல் இதழ்கள், மின்வழிக்
கல்வி ஊடகங்கள்.
நோக்கம்:
· அப்துல் கலாமின் உழைப்பு மற்றும் விடாமுயற்சியை மாணவர்களுக்கு உணர்த்துதல்.
· அறிவியல் ஆர்வம் மற்றும் தேடல் குணத்தை மாணவர்களிடம் உருவாக்குதல்.
· மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்கும் பண்பை வளர்த்தல்.
ஆசிரியர் குறிப்பு:
கலாமின் வாழ்க்கையில் 'சிறகின் ஓசை' மற்றும் பறவைகளின் பறக்கும் விதம் எப்படி ஒரு
சிறுவனை அறிவியலாளராக மாற்றியது என்பதை எளிய முறையில் விவரித்தல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
அப்துல் கலாம் தன் பள்ளி ஆசிரியர் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று
விளக்கியதைக் கேட்டு, அறிவியலில் ஆர்வம் கொண்டார்.
விடாமுயற்சியும், தேடலும் இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளராக முடியும்
என்பதை
இப்பாடம் விளக்குகிறது.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
· கலாமின் வாழ்க்கையில் உங்களைக் கவர்ந்த ஒரு நிகழ்வை வகுப்பில் பகிர்ந்துகொள்ளுதல்.
· அப்துல் கலாம் வினாக்களுக்கு விடைகாணும் உரையாடல் பயிற்சி.
· கலாமின் பொன்மொழிகளைச் சேகரித்தல்.
மதிப்பீடு:
·
LOT:
§
அப்துல்
கலாம் அவர்களுக்கு அறிவியல் ஆர்வம் ஏற்படக் காரணமான பறவை எது?
·
MOT:
§
ஆசிரியரின்
விளக்கம் கலாமின் வாழ்வில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியது?
·
HOT:
§
உங்களை
அறிவியலாளராக மாற்றும் ஒரு சிறு நிகழ்வை அல்லது கனவை விளக்குக.
கற்றல் விளைவுகள்:
· T605: பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களை (பார்வை இழந்தவரின்
அல்லது அறிஞர்களின் பயண அனுபவங்கள் போன்றவை) திரும்பக் கூறுதல்.
· T616: மற்றவர்களின் அனுபவங்களைத் தேவைக்கு ஏற்ப, தேவை ஏற்படும்போது எழுதுதல்
அல்லது பகிர்ந்துகொள்ளுதல்.
· T610: பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களைப் படித்துப் புரிந்து
கொண்டு, அவற்றின் மீதான கருத்துக்களைப் பகிர்தல்.
தொடர் பணி:
· அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' போன்ற புத்தகங்களில் உள்ள ஒரு சிறு பகுதியை வாசித்து வருக.
· அப்துல் கலாம் குறித்த படக்கதை அல்லது தொகுப்பு ஒன்று உருவாக்கி வருக.
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
