
மாதம் :
ஜூன்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : வளர் தமிழ்
தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு மற்றும் காலத்திற்கேற்ப தன்னைத்
தகவமைத்துக்கொள்ளும் அதன் வளர்ச்சி நிலைகளை அறிமுகப்படுத்துதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
கரும்பலகை, தமிழ் மொழி வளர்ச்சிக் கால அட்டவணை, அகராதி, கணினி வழிக்காட்சி
(PPT), தமிழ் இதழ்கள்.
நோக்கம்:
Ø தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்துகொள்ளுதல்.
Ø தமிழ் மொழி கால மாற்றங்களுக்கு ஏற்ப வளர்ந்து வரும் விதம் பற்றிப்
புரிந்துகொள்ளுதல்.
Ø புதிய சொற்களைக் கண்டறிந்து பயன்படுத்தும் திறனை வளர்த்தல்.
ஆசிரியர் குறிப்பு:
தமிழ் மூத்த மொழி என்பதை எளிய சான்றுகளுடன்
விளக்குதல்.
தமிழ் இலக்கியங்கள் காலத்திற்கேற்ப எப்படி நவீனமடைந்து வருகின்றன என்பதை
எடுத்துரைத்தல்.
கருத்துரு வரைபடம்: (வளர்தமிழின் பரிணாமம்)
விளக்கம்:
Ø தமிழ்
உலகின் மிக மூத்த மொழி.
Ø தொல்காப்பியம்
போன்ற நூல்கள் அதன் இலக்கணச் செழுமையைக் காட்டுகின்றன.
Ø பேச்சு
மொழி, எழுத்து மொழி எனத் தமிழ்
இன்றும் இளைமை மாறாமல் இயங்குகிறது.
Ø கணினித்
தொழில்நுட்பத்திலும் இன்று தமிழ் தடம் பதித்துள்ளது.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
Ø அகராதியைப் பயன்படுத்தி புதிய சொற்களின் பொருளைக் கண்டறிதல்.
Ø இணையத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்த தகவல்களைத் தேடிப் பார்த்தல்.
Ø பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
·
LOT: தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்கள் யாவை?
·
MOT: இணையம் மற்றும் கணினித் துறையில் தமிழ் எவ்வாறு
வளர்ந்துள்ளது என்பதை விளக்குக?
·
HOT: ஒரு மொழி காலத்திற்கேற்ப மாறவில்லை எனில், அது அழிந்துவிடும் என நீங்கள்
கருதுகிறீர்களா? உங்கள் கருத்துகளை முன்வைக்கவும்.
கற்றல் விளைவுகள் :
T614: புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல்,
அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள முயலுதல்.
T610: பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களைப் படித்துப் புரிந்து
கொண்டு, அவற்றின் மீதான கருத்துகளைப் பகிர்தல்.
T617: இதழ்கள், இணையத்தில் காணப்படும் தகவல்களைப் படித்துப் புரிந்து கொண்டு
தமது
கருத்துகளை வெளிப்படுத்துதல்.
தொடர் பணி:
· 'தமிழ் வளர்ந்த விதம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி வருக.
· அகராதியைப் பயன்படுத்தி, பாடத்தில் உள்ள 10 புதிய சொற்களுக்குப் பொருள் எழுதி வருக.
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை