6TH-TAMIL-1ST-TERM-UNIT-1-INBA THAMIZH- NOTES OF LESSON

  

மாதம்                         ஜூன்

வாரம்                   :        முதல்   வாரம்

வகுப்பு                 :        ஆறாம் வகுப்பு     

 பாடம்                  :        தமிழ்                                   

பாடத்தலைப்பு              இன்பத் தமிழ்


அறிமுகம்:

தமிழைப் போற்றும் கவிதை நடையில் அமைந்த இன்பத்தமிழ் பாடலை அறிமுகப்படுத்தி,

பாரதிதாசனின் தமிழ் பற்றை மாணவர்களுக்கு விளக்குதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

கரும்பலகை, பாடப்புத்தகம், தமிழ் எழுத்துகள் அடங்கிய அட்டைகள், பாரதிதாசன் படம்,

கணினி வழிக்காட்சி (PPT).

நோக்கம்:

* தமிழுக்குக் கவிஞர் சூட்டிய பெயர்களை அறிந்து கொள்ளுதல்.


·        தமிழின் சிறப்புகளைக் கவிதை வடிவில் பாடி மகிழ்தல்.


·        தமிழ் மொழிக்கும் உயிருக்கும் உள்ள உறவைப் புரிந்துகொள்ளுதல்.

ஆசிரியர் குறிப்பு:

கவிதையில் உள்ள உவமைச் சிறப்புகளை (அமுது, நிலவு, மணம், தேன்) மாணவர்களுக்கு

 எளிய உதாரணங்களுடன் விளக்குதல். 'நிருமித்த' போன்ற புதிய சொற்களின்

 பொருளைக் கூறுதல்.

கருத்துரு வரைபடம்:


விளக்கம்:

கவிஞர் பாரதிதாசன் தமிழை அமுது என்றும், நிலவு என்றும், மணம்

 என்றும் அழைக்கிறார்.

 சமூக வளர்ச்சியைக் குறிக்கும் நீர் போலவும், வாழ்வை மேம்படுத்தும் ஊர் போலவும்

 தமிழைப் போற்றுகிறார். 

தமிழ் மொழியை உயிரோடு ஒப்பிட்டு, அது இன்பம் தருவதாகப் பாடுகிறார்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

 * பாடலை இசையுடன் பாடுதல்.

·        மை’ என முடியும் சொற்களைப் பட்டியலிடுதல்.

·        தமிழ்-அமுது’, ‘தமிழ்-நிலவு’ போன்ற ஒப்புமைகளை அட்டவணையாக வரைதல்.

மதிப்பீடு:

·        LOT (குறைந்தநிலை சிந்தனை):

§  தமிழுக்குக் கவிஞர் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

·        MOT (இடைநிலை சிந்தனை):

§  'சமூகத்தின் விளைவுக்கு நீர்' - இத்தொடரின் பொருளைச் சுருக்கமாக


 விளக்குக.

·        HOT (உயர்நிலை சிந்தனை):

§  தமிழ் மொழி உங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று


 கருதுகிறீர்கள்?

கற்றல் விளைவுகள்:

T611 ஒலி யியைவு , சந்தம் முதலான யாப்பமைதிக்  கூறுதல் மரபுத் தொடர்கள் போன்ற


 மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள்


 கட்டுரைகளின் நயம் பாராட்டல்

தொடர் பணி:

* உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊரின் சிறப்பைப் பற்றித் தமிழைப் போற்றி ஒரு சிறு கவிதை எழுதி வருக.

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 


📚

இளந்தமிழ் பாடக்குறிப்பேடு PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post