6TH-TAMIL-1ST-TERM-UNIT-2-SIRAGIN OSAI- NOTES OF LESSON

 

மாதம்                  :        ஜூலை

வகுப்பு                 :        ஆறாம் வகுப்பு     

 பாடம்                  :        தமிழ்                                   

பாடத்தலைப்பு       :        சிறகின் ஓசை

 அறிமுகம்:

பறவைகளின் வலசை போதல் மற்றும் சிட்டுக்குருவிகளின் அழிவு குறித்து மாணவர்கள்

 அறிந்துகொள்ளும் வகையில், பறவைகளின் உலகத்தை அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

பறவைகள் வலசை போதலை விளக்கும் வரைபடம், சிட்டுக்குருவி மற்றும் சலீம் அலி

 படங்கள், பறவைகள் தொடர்பான காணொலிகள்.

நோக்கம்:

·        பறவைகள் வலசை போதல் குறித்த புரிதலைப் பெறுதல்.

·        சிட்டுக்குருவிகளின் அழிவிற்கான காரணங்களை அறிதல்.

·        பறவை இனங்களைக் காக்கும் பொறுப்புணர்வினை வளர்த்தல்.

ஆசிரியர் குறிப்பு:

பறவைகள் வலசை போதலின் போது அவற்றின் உடலில் ஏற்படும் மாற்றங்களையும்,

சிட்டுக்குருவிகள் அழிவதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியவற்றையும்

 பாடப்புத்தகத்தின் அடிப்படையில் விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

தட்பவெப்பநிலை மாற்றம், உணவுத் தேவை மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காகப்

 பறவைகள் நீண்ட தூரம் பயணம் செய்வதை 'வலசை போதல்' என்பர்

பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் இயற்கையான சூழல் அழிக்கப்படுவதால்

 சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

·        பறவைகளின் வலசை போதல் பற்றி வரைபடம் வரைதல்.

·        பறவைகளுக்குச் செயற்கை முறையில் உணவு மற்றும் தண்ணீர் வைக்கும் முறைகளைச் 

செய்து பார்த்தல்.

மதிப்பீடு:

·        LOT: பறவைகள் இடம்பெயர்தலை என்னவென்று அழைப்பார்கள்?

·        MOT: சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமான மனிதச் செயல்கள் யாவை?

·        HOT: பறவைகள் புகலிடங்களுக்குத் தேவையா? ஏன்? உங்கள் சொந்த கருத்துகளைக் கூறுக.

கற்றல் விளைவுகள் :

·        T606: தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப் 

பாடல்களை அறிந்திருத்தல் மற்றும் கலந்துரையாடுதல்.

·        T610: பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களைப் படித்துப் புரிந்து 

கொண்டு, அவற்றின் மீதான கருத்துகளைப் பகிர்தல்.

·        T615: சூழலியல் மற்றும் பறவைகள் வாழ்வியல் துறைகளில் பயன்படுத்தப்படும் மொழியின் 

தனிச்சிறப்புகளை அறிந்து கொள்ள பேரார்வத்தை வெளிப்படுத்துதல்.

தொடர் பணி:

·        பறவைகளின் வலசை போதல் குறித்த கூடுதல் தகவல்களை இணையத்தில் தேடி ஒரு தொகுப்பு

 தயார் செய்து வருக.

·        சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை குறித்த வாசகங்களை எழுதி வருக.

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post