மாதம் :
ஜூலை
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : முதலெழுத்தும் சார்பெழுத்தும்
தமிழ் எழுத்துகளின் வகைப்பாட்டினைத் தெளிவுபடுத்துதல், உயிர் மற்றும்
மெய்யெழுத்துகளை முதலெழுத்துகள் என்றும், அவற்றைச் சார்ந்து வரும் எழுத்துகளைச்
சார்பெழுத்துகள் என்றும் அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
முதலெழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகளின் விளக்கப்படம் , கரும்பலகை, அகராதி.
நோக்கம்:
· தமிழ் எழுத்துகளின் அடிப்படை வகைகளைப் புரிந்துகொள்ளுதல்.
· முதலெழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கையை அறிதல்.
· எழுத்துகளின் ஒலிப்பு நுணுக்கங்களை உணர்தல்.
ஆசிரியர் குறிப்பு:
முதலெழுத்துகள் (உயிர் 12 + மெய் 18 = 30) ஏன் முதன்மையானவை என்பதையும்,
சார்பெழுத்துகள் ஏன் அவற்றைச் சார்ந்து பிறக்கின்றன என்பதையும்
விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
முதலெழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு பிறப்பவை சார்பெழுத்துகள் ஆகும். இவை
மொத்தம் பத்து வகைப்படும்.
இவை
மொழியின் மரபு நடை நுட்பங்களைக் கொண்டு அமைந்தவை.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
· சார்பெழுத்துகளின் பத்து வகைகளை வரிசைப்படுத்தி எழுதுதல்.
· சொற்களில் உள்ள சார்பெழுத்துகளைக் கண்டறிந்து பிரித்தல்.
மதிப்பீடு:
·
LOT: முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை?
·
MOT: சார்பெழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
·
HOT: முதலெழுத்துகள் இல்லாமல் சார்பெழுத்துகள் தனித்து இயங்க
முடியுமா? உங்கள் கருத்துகளை விளக்குக.
கற்றல் விளைவுகள்:
· T611: ஒலி இயைவு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள் மற்றும் மரபுத் தொடர்கள் போன்ற
மொழியின் மரபு நடை நுட்பங்களைக் கருத்தில் கொண்டு எழுத்துகளைப் பகுத்தாய்தல்.
· T614: புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல் மற்றும்
அகராதிகளைப் பார்த்துப் பொருள் கொள்ள முயலுதல்.
·
T618: சரியான சொற்கள் மற்றும் தொடர்களைப் பயன்படுத்தி இலக்கணப்
பிழையின்றி எழுதுதல்.
தொடர் பணி:
·
சார்பெழுத்துகளின்
பத்து வகைகளை எழுதி அவற்றிற்குத் தலா ஒரு உதாரணம் தேடி வருக.
·
பாடத்திலுள்ள
எழுத்துகளைப் பகுப்பாய்வு செய்து ஒரு அட்டவணை உருவாக்குக.
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
