6TH-TAMIL-1ST-TERM-UNIT-2-THIRUKKURAL- NOTES OF LESSON


மாதம்                  :        ஜூலை

வகுப்பு                 :        ஆறாம் வகுப்பு     

 பாடம்                  :        தமிழ்                                   

பாடத்தலைப்பு       :        திருக்குறள்

அறிமுகம்:

உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளின் பெருமையையும்,

வாழ்வியலுக்குத் தேவையான அறக்கருத்துகளையும் மாணவர்களுக்கு

 அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

திருவள்ளுவர் படம், திருக்குறள் சுவடிகள் அல்லது புத்தகங்கள், குறட்பாக்கள் அடங்கிய

 விளக்கப்படங்கள் (Charts), கணினி வழிக்காட்சி (PPT).

நோக்கம்:

·        திருக்குறளின் சிறப்பை அறிந்துகொள்ளுதல்.

·        வாழ்வியலுக்குத் தேவையான அறநெறிகளைக் குறள் வழி புரிந்துகொள்ளுதல்.

·        சொற்களின் பொருளை அறிந்து, சரியான உச்சரிப்புடன் குறள்களை வாசித்தல்.

ஆசிரியர் குறிப்பு:

திருவள்ளுவரின் காலம், திருக்குறளின் முப்பால்கள் மற்றும் குறளின் அமைப்பு பற்றி

 விளக்குதல்.

 குறள்களில் உள்ள கருத்துகளை அன்றாட வாழ்வியல் சூழலோடு ஒப்பிடுதல்.

கருத்துரு வரைபடம்:

 

விளக்கம்:

திருக்குறள் என்பது அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களைக் கொண்டது. 

இது மனிதன் வாழ வேண்டிய முறையை, எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் 

எளிய சொற்களில் விளக்குகிறது.  

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

·                                குறள்களைச் சரியான சந்தத்துடன் வாசித்தல்.

·                                                குறள்களின் பொருளை அகராதி பார்த்து அறிந்துகொள்ள முயலுதல்.

·                                                குறள்களைக் கொண்டு சிறு கட்டுரைகள் அல்லது கருத்துகளை 

                              முன்னெடுத்துச்  செல்லுதல்.

மதிப்பீடு:

·        LOT: திருக்குறள் நூலின் மூன்று பிரிவுகள் யாவை?

·        MOT: 'உலகப் பொதுமறை' என்று திருக்குறள் ஏன் அழைக்கப்படுகிறது?

·        HOT: திருக்குறள் கூறும் அறக்கருத்துகளைத் தற்போதைய நவீன வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?

கற்றல் விளைவுகள்:

·        T608: ஒரு நூலை (திருக்குறள்) ஆழ்ந்து படித்து, அதன் மையக்கருத்தை ஊகித்தறிதல்.

·        T610: திருக்குறள் போன்ற பனுவல்களைப் படித்துப் புரிந்து கொண்டு, அவற்றின் மீதான கருத்துகளைப் பகிர்தல்.

·        T614: புதிய சொற்களைப் தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள முயலுதல்.

தொடர் பணி:

·        உங்களுக்குப் பிடித்த ஐந்து குறள்களை எழுதி, அதன் பொருளைச் சுருக்கமாக எழுதி வருக.

·        திருக்குறள் தொடர்பான படக்கதைகளை இணையத்தில் தேடித் தொகுத்து வருக.

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post