6TH-TAMIL-1ST-TERM-UNIT-3-KALVIYAI POTTRU- NOTES OF LESSON

 

மாதம்                  :        ஆகஸ்ட்/செப்டம்பர்

வகுப்பு                 :        ஆறாம் வகுப்பு     

 பாடம்                  :        தமிழ்                                   

பாடத்தலைப்பு       :        கல்வியைப் போற்று

அறிமுகம்:

கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், 

கற்றலின் மேன்மையையும் விளக்கும் கருத்துகளை மாணவர்களுக்கு 

அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

கரும்பலகை, கல்வி தொடர்பான பொன்மொழிகள், நூலகம் குறித்த படங்கள், 

கணினி வழிக்காட்சி, கல்வித் துறையில் சாதனை படைத்தவர்களின் படங்கள்.

நோக்கம்:

·        கல்வியின் இன்றியமையாமையை உணர்த்துதல்.

·        கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல் என்பதை விளக்குதல்.

·        கல்வி தொடர்பான நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல்.

ஆசிரியர் குறிப்பு:

கல்வியறிவு ஒரு மனிதனைச் சிறந்த குடிமகனாக மாற்றும் என்பதை விளக்குதல். 

கல்வி கற்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டுதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல, அது வாழ்க்கைக்குத் தேவையான 

அறிவையும் பண்பையும் வழங்குகிறது. கல்விதான் ஒருவரை உயர்ந்த இடத்திற்கு 

அழைத்துச் செல்லும்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

·        கல்வி தொடர்பான பழமொழிகளைச் சேகரித்தல்.

·        நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை வாசித்து, அதன் மையக்கருத்தைப் பகிர்தல்.

·        கல்வி குறித்த சொந்தக் கருத்துகளை ஒரு சிறிய கட்டுரை வடிவில் எழுதுதல்.

மதிப்பீடு:

·        LOT: கல்வி கற்கும் ஆர்வத்தை வளர்க்க நாம் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும்?

·        MOT: 'கல்வி கரையில கற்பவர் நாள்சில' - இத்தொடரின் பொருளைச் சுருக்கமாக விளக்குக.

·        HOT: இன்றைய காலச்சூழலில் கல்வி என்பது எவ்வாறு மாறியுள்ளது? இணையம் வழியாகக் கல்வி கற்கும் முறையை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?

கற்றல் விளைவுகள்:

·        T608: ஒரு நூலை ஆழ்ந்து படித்து அந்நூலின் மையக்கருத்தை ஊகித்தறிதல்.

·        T610: பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களைப் படித்துப் புரிந்து கொண்டு, அவற்றின் மீதான கருத்துகளைப் பகிர்தல்.

·        T613: கல்வி தொடர்பான வெவ்வேறு வகையான கட்டுரைகளைத் தொடர்ந்து படித்தல்.

தொடர் பணி:

·        உங்கள் பகுதியில் உள்ள நூலகத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள நூல்களின் வகைப்பாட்டை அறிந்து வந்து ஒரு பட்டியல் எழுதி வருக.

·        கல்வி குறித்த புகழ்பெற்ற ஆளுமைகளின் பொன்மொழிகளைத் தொகுத்து வருக.

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post