10TH-TAMIL-QUARTERLY EXAM-MODEL QUESTION-1-2025


மாதிரி காலாண்டுத் தேர்வு – 2025

வினாத்தாள்  - 1

 மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                   மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                       15×1=15

1. தமிழ்சிட்டு என்னும் இதழின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்

அ) பாவாணர்    ஆ) க.சச்சிதானந்தன்   இ) அப்பாதுரையார்   ஈ) பெருஞ்சித்திரனார்

2. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது_______

அ) இட வழுவமைதி                                    ஆ) பால் வழுவமைதி

இ) திணை வழுவமைதி                                ஈ) கால வழுவமைதி

3. வேலோடு நின்றான் இடுவென்றது போலும்

   கோலோடு நின்றான் இரவு – இக்குறளில் இடம் பெறும் அணி

அ) உவமை அணி                                         ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி

இ) சொற்பொருள் பின் வருநிலையணி           ஈ) வஞ்ச புகழ்ச்சி அணி

4. விருந்தினரைப் பேணூவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

அ) நிலத்திற்கேற்ற விருந்து                ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து                        ஈ) உற்றாரின் விருந்து

5. மகிழ்ந்து வருமா? என்பது

அ) விளித்தொடர்                       ஆ) எழுவாய்த் தொடர்     

இ) வினையெச்சத் தொடர்         ஈ) பெயரெச்சத் தொடர்

6. “ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் “ பாடல் வரி இடம் பெறும் நூல் எது?

அ) புறநானூறு       ஆ) நற்றிணை      இ) குறுந்தொகை            ஈ) அகநானூறு

7. ஓரெழுத்தில் சோலை- இரண்டெழுத்தில் வனம் ___________

அ) காற்று              ஆ) புதுமை                     இ) காடு                 ஈ) நறுமணம்

8. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்

அ) சிலப்பதிகாரம்      ஆ) மணிமேகலை         இ) புறநானூறு        ஈ) பெரிய புராணம்

9. பொருளைப் புரிந்துகொண்டு தொடரை முழுமை செய்க.

   பசுமையான ________ ஐக் ________ கண்ணுக்கு நல்லது.

அ) நடித்தல், நடிப்பு           ஆ) காட்சி, காணுதல்

இ) புதையல், புதைத்தல்    ஈ) சுட்டல், சுடுதல்

10. வேர்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது

அ) குலைப் பெயர் வகை            ஆ) மணிப்பெயர் வகை    

இ) கிளைப் பெயர் வகை           ஈ) இலைப்பெயர் வகை

11. “ இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதனை அனைவரும் ஏற்பர் “என்று கூறினான். இத்தொடரில் இடம் பெற்றுள்ள வழுவமைதி

அ) இட வழுமைதி                     ஆ) கால வழுவமைதி

இ) மரபு வழுவமைதி                  ஈ) பால் வழுவமைதி

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

 “ செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்

திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

        பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “

12. இப்பாடலின் ஆசிரியர்

அ. கீரந்தையார்                ஆ. குமரகுருபரர்   

இ. நம்பூதனார்                  ஈ. செய்குதம்பிப் பாவலர்

13. இப்பாடலில் இடம் பெற்றுள்ள பிள்ளைத் தமிழ் பருவம்

அ. அம்மானை       ஆ. சப்பாணி    இ. சிறுதேர்            ஈ. செங்கீரை

14. ‘ குண்டமும் குழைகாதும் ‘ – இலக்கணக் குறிப்பு தருக.

அ. எண்ணும்மை                                ஆ. உம்மைத்தொகை

இ. பண்புத் தொகை                             ஈ. அடுக்குத் தொடர்

15.  கிண்கிணி, அரைநாண்,சுட்டி என்பன முறையே

அ. காலில் அணிவது, இடையில் அணிவது, தலையில் அணிவது

ஆ. நெற்றியில் அணிவது,இடையில் அணிவது,தலையில் அணிவது

இ. காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது

ஈ. இடையில் அணிவது, காதில் அணிவது, தலையில் அணிவது

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.          4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. பாரதியார் நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றார்.

ஆ. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் என்று கூறியவர் ஒளவையார்.

17. தாவரங்களில் விளையும் தானியங்களைக் குறிக்கும் மணிபெயர்வகைகளைக் குறிப்பிடுக.

18. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

19. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

20. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

21.  கண் – என முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                  5×2=10

22. தடித்தச் சொற்களின் தொடர்வகைகளை எழுதுக.

          அ) பழகப் பழக பாலும் புளிக்கும் 

ஆ) வடித்த கஞ்சியில் சேலையை நன்றாக அலசினேன்

23. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : அமர்ந்தான்

25. ‘பலகை’ என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

26. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

அ.  ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஆ. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

27 எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

அ. நாற்றிசையும் செல்லாத நாடில்லை

ஆ. எறும்புந்தன் கையால் எண் சாண்

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப்பெயர்களை எழுதுக :- அ) கல் ஆ) பழம்

28. மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன் ; சுற்றும் முற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். இத் தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.

 

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                         2×3=6

29. .” புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது” – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

30.பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடைத்தருக.

          கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் இருந்தார். இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை. சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.சீவல மாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

அ). வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நூல் எது?

ஆ) கொற்கையின் அரசர் யார்?

இ). சீவல மாறன் எழுதிய பிற நூல்கள் யாவை?

31. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.        2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

33. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

34. அ) “ அன்னை மொழியே “ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல்  எழுதுக   (அல்லது )

      ஆ) “புண்ணிய புலவீர்” எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                    2×3=6

35. தொழிற்பெயர் ,வினையாலணையும் பெயர் இரண்டிற்கும் வேறுபாட்டைத் தருக

36. எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்குக

37. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக்  காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப்பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து  ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். – வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                5×5=25

38. அ) இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக             ( அல்லது )

ஆ) முயற்சி குறித்து வள்ளுவர் ஆள்வினை உடைமையில் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக,

39. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.      ( அல்லது )

ஆ. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

41. சேலம் மாவட்டம்-636015,ஆலமரத்துக்காடு தெரு, களரம்பட்டி கதவு எண் 2/504 என்ற முகவரியில் வசித்து வரும் இராமன், சரண்யா ஆகியோரின் மகள் ஸ்ரீதர்ஷினி என்பவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்து களரம்பட்டி ஊர்ப்புற நூலகத்தில் ரூ 300 உடன் சென்று உறுப்பினராக சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை ஸ்ரீதர்ஷினியாக பாவித்து உரிய பரிவத்தை நிரப்புக.

42. அ) புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.   ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                              3×8=24

43. அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.( அல்லது )

ஆ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

44. அ .பிரும்மம் “ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.  ( அல்லது )

‘ கற்கை நன்றே கற்கை நன்றே

       பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க..

45. அ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை –

          மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

  ( அல்லது )

ஆ)  “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

 CLICK HERE TO GET PDF

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post