10th Tamil Poem Line Questions 2026 – Book Full Coverage | Sure Marks-PDF

 


மாதிரி அடைவுத் தேர்வு-2 -ஜனவரி – 2026

பத்தாம் வகுப்பு – தமிழ்

நேரம் : 1.30 மணி                                                                                      மதிப்பெண் : 100

அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-

கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையை விடைக்குறியீட்டுடன் எழுதுக.

பகுதி - அ

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-                                                           100×1=100

“ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “

1. பாடல் இடம் பெற்ற நூலைத் தேர்க.

அ. நற்றிணை            ஆ. பரிபாடல்               இ. முல்லைப்பாட்டு                ஈ. மேகம்

2. இப்பாடல் இடம்பெற்றுள்ள அடிமோனையைத் தேர்க.

அ. உருஅறி – உந்துவளி       ஆ. கருவளர் - உருஅறி               

இ. விசும்பில் – கருவளர்          ஈ. உருஅறி – கிளர்ந்த

3. ‘ ஊழ் ஊழ் ‘ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க_______

அ. உரிச்சொல்தொடர் ஆ.பெயரெச்சத் தொடர் இ.வினையெச்சத் தொடர்  ஈ.அடுக்குத் தொடர்

4. பாடலின் ஆசிரியரைத் தேர்க_____

அ. இளங்கோவடிகள்   ஆ. பரஞ்சோதி முனிவர்      இ. கீரந்தையார்  ஈ. பெருங்கெளசிகனார்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்

5) .இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘ தண்பெயல்‘ என்ற சொல்லின் பொருள்

அ. கோடை                 ஆ. பூமி           இ. குளிர்ந்த மழை                ஈ. வானம்

6). செந்தீ  - இலக்கணக் குறிப்புத் தருக

அ. பண்புத் தொகை   , வினைத் தொகை  இ. உவமைத் தொகை ஈ. உம்மைத் தொகை

7). இப்பாடலை  இயற்றியவர்

அ.நப்பூதனார்  ஆ. குமரகுருபரர்   இ. அதிவீர ராம பாண்டியர்        ஈ கீரந்தையார்

8). இப்பாடல் இடம் பெற்ற நூல்  ___

அ. கம்பராமாயணம்        ஆ. முல்லைப்பாட்டு           இ. பரிபாடல்    ஈ. சிலப்பதிகாரம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;

இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்

வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்

சொல்லா தனசில சொல்லிட முனைவேன்”

9) இப்பாடலை இயற்றியவர்.

அ) கண்ணதாசன்                 ஆ) பாரதியார்  இ) வண்ணதாசன்          ஈ) பாரதிதாசன்

10) இப்பாடலில் கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.

அ) வண்டு                              ஆ) காற்று                  இ) அன்னம்                           ஈ) மழை

11). பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க.

அ) தருவேன்-தட்டுவேன்                 ஆ) உண்டாவண்டா 

இ) இல்லா–இல்லம்                          ஈ)சொல்லா - சொல்லிட

12) பாடல் இடம்பெற்றுள்ள கவிதையின் பெயர்_____

அ) ஞானம்                 ஆ) காலக்கணிதம்                  இ) பூத்தொடுத்தல்                 ஈ) சித்தாளு

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “

13) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா   ஆ) எந்த + தமிழ் + நா   இ) எம் + தமிழ் + நா     ஈ) எந்தம் + தமிழ் + நா

14) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத் தொகை    ஆ) வினைத்தொகை  இ) உவமைத்தொகை      ஈ) உம்மைத்தொகை

15). ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை            ஆ) தமிழ்மொழியை               இ) தாய் நாட்டை       ஈ) தம் குழந்தையை

16) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்                   ஆ) சான்றோர்            இ) வேற்றுமொழியினர்          ஈ) புலவர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

"ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ

தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ

ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ"

17). இப்பாடல் இடம் பெற்ற நூல்

(அ) தேம்பாவணி (ஆ) பெருமாள் திருமொழி (இ) கம்பராமாயணம்           (ஈ) சிலப்பதிகாரம்

18). இப்பாடலின் ஆசிரியர்

(அ) இளங்கோவடிகள் (ஆ) செய்கு தம்பி பாவலர்             (இ) கம்பர்       ஈ) வீரமாமுனிவர்

19). நெடுந்திரை – இலக்கணக் குறிப்பு தருக.

(அ) உவமைத் தொகை  ஆ) பண்புத் தொகை  (இ) உம்மைத் தொகை  (ஈ) வினைத்தொகை

20). இப்பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக

(அ) நெடுந்திரை – போவாரோ           (ஆ) நெடுந்திரை – நெடும்படை

(இ) தோழமை – ஏழமை                    (ஈ) போவாரோ வில்லாளோ

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

உய்முறை அறியேன்; ஓர்ந்த

  உணர்வினொத்து உறுப்பும் இல்லா

மெய்முறை அறியேன்; மெய்தான்

  விரும்பிய உணவு தேடச்

செய்முறை அறியேன்; கானில்

  செல்வழி அறியேன்; தாய்தன்

மைமுறை அறிந்தேன் தாயும்

   கடிந்தெனைத் தனித்துப் போனாள் ”

21) இப்பாடலின் ஆசிரியர்

அ) தமிழழகனார்        ஆ) பாரதியார்         இ) வீரமாமுனிவர்                      ஈ) பாரதிதாசன்

22) இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) கம்பராமாயணம்    ஆ) தேம்பாவணி         இ) சிலப்பதிகாரம்         ஈ) காசிக்காண்டம்

23). பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களைத் தேர்க

அ) உய்முறை - உணர்வு                             ஆ) மெய்முறை – செல்வழி

இ) மெய்முறை - செய்முறை                       ஈ)  தாய் - கடிந்தெனை

24) செய்முறை என்பதன் இலக்கண குறிப்பு தருக_____

அ) வினைத்தொகை             ஆ) தொழில் பெயர்    இ) வினைமுற்று     ஈ) பெயரெச்சம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்

துன்ன காரரும் தோலின் துன்னரும்

கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்

25).இப்பாடலடிகள் இடம் பெற்ற நூல்.

அ) நீதிவெண்பா        ஆ) சிலப்பதிகாரம்   இ) கம்பராமாயணம்      ஈ) மணிமேகலை

26) இப்பாடலின் ஆசிரியர் _________

அ) பரஞ்சோதி முனிவர்         ஆ) கம்பர்       இ) இளங்கோவடிகள்             ஈ) வீரமாமுனிவர்

27). பாடலில் உள்ள சீர் மோனைச் சொற்களைக் காண்க

அ) கண்ணுள் மண்ணீட்டு            ஆ) கிழியினும் - கிடையினும்        

இ) பொன்செய் – நன்கலம்               ஈ) தருநரும் – துன்னரும்

28). மண்ணீட்டாளர் என்போர் யார் ?

அ) ஓவியர்      ஆ) சிற்பி        இ) நெய்பவர்              ஈ) எண்ணெய் விற்பவர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

மேகங்கள் மிகவும் மென்மையானவை

இதழ் முகிழ்க்கும் மழலையின்

கன்னம் போல

அல்லது காதுக் குருத்து போல

எனினும் மேகங்கள்

துணிச்சலானவை

முதுகைக் கொடுத்து

சூரியனை மறைக்கும் போது

மேகங்கள் மிகவும்

கருணையுள்ளவை

தாகங்கள் தீர்க்கும் போது

29) இதழ் முகிழ்க்கும் போது மேகங்கள் எவ்வாறு காட்சித் தருகிறது?

அ) கண்கள்                ஆ) கழுத்து     இ) கன்னம்     ஈ) மூக்கு

30) மேகங்கள் கருணையுள்ளவை என எதைக் கொண்டு கவிஞர் கூறுகிறார்?

      அ) சூரியனை மறைக்கும் போது                       ஆ) தாகங்கள் தீர்க்கும் போது

      இ) மலை முகட்டில் நடை பயிலும் போது        இ) மிதந்து செல்லும் போது

31) இக்கவிதையில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களைக் காண்க.

     அ) மேகங்கள் – மென்மையானவை                  ஆ) இதழ் – கன்னம்

      இ) மழலையின் – குருத்து                                 ஈ) துணிச்சல் – சூரியன்

32) இக்கவிதையின் ஆசிரியர்

      அ) பிரபஞ்சன்      ஆ) நாகூர் ரூமி          இ) கல்யாண்ஜி           ஈ) ந.முத்துசாமி

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி

நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக் கோக்கிள்ளி நாடு

33) இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடியெதுகை சொற்கள்

அ) காவல் - களத்து                                       ஆ) நாவலோஓ – நாளோதை    

இ) கொல்யானை - நல்யானை                    ஈ) காவலன் – கோக்கிள்ளி

34) இப்பாடலில் கொல்யானை என்பதன் இலக்கணக் குறிப்பு

அ) பண்புத் தொகை ஆ) வினைதொகை  இ) தொழிற்பெயர்      ஈ) பெயரெச்சம்

35) இப்பாடல் இடம் பெற்ற நூல்

            அ) சிலப்பதிகாரம்       ஆ) மணிமேகலை     இ) முத்தொள்ளாயிரம்            ஈ) பரிபாடல்

36) இப்பாடலில் இடம் பெற்றுள்ள அணி

            அ) வஞ்ச புகழ்ச்சி அணி  ஆ) உவமை அணி இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) உருவக அணி

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்

        திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

            பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “

37. இப்பாடலின் ஆசிரியர்

அ. கீரந்தையார்     ஆ) குமரகுருபரர்              இ. நம்பூதனார்          ஈ. செய்குதம்பிப் பாவலர்

38. இப்பாடலில் இடம் பெற்றுள்ள பிள்ளைத் தமிழ் பருவம்

அ. அம்மானை           ஆ. சப்பாணி               இ. சிறுதேர்           ஈ. செங்கீரை

39. ‘ குண்டமும் குழைகாதும் ‘ – இலக்கணக் குறிப்பு தருக.                                                                    அ) எண்ணும்மை      ஆ. உம்மைத்தொகை    இ. பண்புத் தொகை  ஈ. அடுக்குத் தொடர்

40. கிண்கிணி, அரைநாண்,சுட்டி என்பன முறையே

அ. காலில் அணிவது, இடையில் அணிவது, தலையில் அணிவது

ஆ. நெற்றியில் அணிவது,இடையில் அணிவது,தலையில் அணிவது

இ. காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது

ஈ. இடையில் அணிவது, காதில் அணிவது, தலையில் அணிவது

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலுகப் பேரரசே!

41. இப்பாடலின் ஆசிரியர்

அ. பாவாணர்     ஆ) குமரகுருபரர்      இ. நம்பூதனார்          ஈ. பெருஞ்சித்திரனார்

42. இப்பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்கள்

. அன்னை - முன்னை                 ஆ. அழகார்ந்த – முகிழ்த்த     

இ. செந்தமிழே - நறுங்கனியே         ஈ. கன்னி - மன்னி

43. ‘ முன்னை ‘ என்பதன் பொருள்

            அ) செழுமை              ஆ. பழமை    இ. புதுமை          ஈ. வாய்மை

44. ‘ பேரரசு ‘ என்பதன் இலக்கணக் குறிப்பு

அ. பண்புத்தொகை  ஆ. உவமைத் தொகை  இ. வினைதொகை  ஈ. வேற்றுமைதொகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாபத்தே! எண்தொகையே! நற்கணக்கே

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

45. ‘ தென்னன்’ எனக் குறிப்பிடப்படுபவர்

அ. பாண்டியன்     ஆ) சேரன்             இ. சோழன்               ஈ. களப்பிரர்

46. பாபத்தே என்பது

அ. பாட்டு        ஆ. பத்து                    இ. பத்துப்பாட்டு                ஈ. பாடல்பத்து

47. நற்கணக்கே என்பதைக் குறிப்பது                                                                   

அ) மேல்கணக்கு நூல்கள்    ஆ. எட்டுத் தொகை   

இ. கீழ்க்கணக்கு நூல்கள்     ஈ. காப்பியங்கள்

48. இப்பாடலில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பிய நூல்கள்

அ. சிலப்பதிகாரம், திருக்குறள்         ஆ. மணிமேகலை, சீவக சிந்தாமணி

இ. சிலப்பதிகாரம், மணிமேகலை      ஈ. குண்டலகேசி, வளையாபதி

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

செந்தா மரைத் தேனைக் குடித்து சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!

49. இப்பாடலில் இடம் பெற்றுள்ள சீர் மோனைச் சொற்கள்

அ. உந்தி - உணர்வு             ஆ. கனல் – குடித்து   

இ. செந்தாமரை - தேனை    ஈ. யாம்பாடி - யாண்டும்

50. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. உந்தி - உள்ளம்               ஆ. செந்தாமரை - அந்தும்பி            

இ. முந்துற்றோம் – முழங்க   ஈ. குடித்து -  பாடும்

51. இப்பாடலில் “ தும்பி “ என்பது எதனைக் குறிக்கிறது                                                              

அ) தமிழ்         ஆ. நூல்              இ. பாடல்      ஈ. வண்டு

52. ‘ செந்தாமரை’ என்பதன் இலக்கணக் குறிப்பு

அ. பண்புத்தொகை  ஆ. உவமைத் தொகை  இ. வினைதொகை  ஈ. வேற்றுமைதொகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ கவிஞன் யானோர் காலக் கணிதம்

 கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

 புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

 பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்

 இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

 இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

53. புகழுடைத் தெய்வமாக – கூறப்படுவது

அ. மொழி       ஆ. கவிஞர்                இ. கவிதை                 ஈ. தமிழ்

54. இயம்புவது என்பதன் பொருள்

அ. கூறுவது    ஆ. எழுதுவது        இ. பாடுவது         ஈ. படிப்பது

55. பொன் எதனோடு ஒப்பிடப்பட்டுள்ளது?                                                              

அ) தமிழ்         ஆ. கவிதை        இ. கவிஞன்             ஈ. பணம்

56. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிமோனைச் சொற்கள்

அ. யானோர் - நானோர்  ஆ. தெய்வம் – செல்வம்  இ. புவி - பொன்  ஈ. இவை - இயம்புதல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்

ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்

57. இப்பாடலில் இடம் பெற்றுள்ள சீர் மோனைச் சொற்கள்

அ. உந்தி - உணர்வு             ஆ. கனல் – குடித்து   

இ. செந்தாமரை - தேனை    ஈ. யாம்பாடி - யாண்டும்

58. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. உந்தி - உள்ளம்               ஆ. செந்தாமரை - அந்தும்பி            

இ. முந்துற்றோம் – முழங்க   ஈ. குடித்து -  பாடும்

59. இப்பாடலில் “ தும்பி “ என்பது எதனைக் குறிக்கிறது                                                             

அ) தமிழ்         ஆ. நூல்              இ. பாடல்      ஈ. வண்டு

60. ‘ செந்தாமரை’ என்பதன் இலக்கணக் குறிப்பு

அ. பண்புத்தொகை  ஆ. உவமைத் தொகை  இ. வினைதொகை  ஈ. வேற்றுமைதொகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது

இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்

இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய்க் காடுமே டாக

மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்

61. புல்லரிகாது என்பதன் பொருள்

அ. மகிழ்ச்சி இல்லை    ஆ. புகழ்ச்சி இல்லை         இ. பணம் இல்லை         ஈ. பாடல் இல்லை

62. இக்கவிதையில் இடம் பெற்றுள்ள முரண் சொற்கள்

அ. கல்  - மரம் ஆ. வளமார் கவி–வனவிலங்கு   இ. புகழ்–இகழ்   ஈ. என்னுடல்-என்மனம்

63. வனவிலங்கு என்று கவிஞர் குறிப்பிடப்படுவது                                                                      

அ) கவிதை    ஆ. கவிஞர்        இ. பாடல்      ஈ. தமிழ்

64. இப்பாடல் இடம் பெற்ற கவிதைத் தொகுப்பு

அ. கனிச்சாறு  ஆ.நாகூர் ரூமி கவிதைகள்  இ.காலக்கணிதம்  ஈ. பரிபாடல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ மாற்றம் எனது மானிடத் தத்துவம்

 மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்

 எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

 என்ப தறிந்து ஏகுமென் சாலை

 தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்

65. இப்பாடலில் இடம் பெற்றுள்ள சீர் மோனைச் சொற்கள்

அ. தலைவர் - தர்பார்            ஆ.மாற்றம் – மானிடம்            

இ. தீமை – நன்மை               ஈ. மாற்றம் - மாறும்

66. கவிஞர் மானிடத் தத்துவம் எனக் குறிப்பிடுவது

அ. நன்மை     ஆ.தீமை      இ. தர்பார்           ஈ. மாற்றம்

67. தர்பார் என்பதன் பொருள்                                                                      

அ) ஆட்சி மாற்றம்     ஆ. கொள்கைகள் மாற்றம்    இ. சாலைகள் மாற்றம்  ஈ.கவிதை மாற்றம்

68. இக்கவிதையில் உள்ள முரண் சொற்கள்

அ.மாற்றம் - மாறும்  ஆ. தலைவர் - தர்பார்  இ. நன்மை-தீமை  ஈ. தத்துவம் – மகத்துவம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

 கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்

69. இக்கவிதைகள் ‘ அட்சய பாத்திரம் ‘ எனக் குறிப்பிடப்படுவது

அ. மாற்றம்     ஆ.தத்துவம்      இ. நாடு         ஈ. சட்டம்

70. கொள்க, குரைக்க – இச்சொற்களின் இலக்கணம்

அ. உவமைத் தொகை  ஆ.உரிச்சொல்  இ. வியங்கோள் வினைமுற்று  ஈ. வினைதொகை

71. ‘குரைப்போர்’ என கவிஞர் கூறுவதன் பொருள்                                                                       

அ) மாற்றத்தை ஏற்பவர்        ஆ. பாடல் இயற்றுபவர்              

இ. குறைக் கூறுபவர்               ஈ. நிறைகளைக் கொண்டாடுபவர்

72. ‘ இக்கவிதையில் ‘ தொடக்கம் , முடிவு ‘ என்பதன் நயம்

அ. எதுமை     ஆ.மோனை               இ.முரண்        ஈ. இயைபு

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“மேகங்கள் மிகவும்

 அழகானவை

மலை முகடுகளில்

நடைபயிலும் போது

மேகங்கள் ரொம்ப அற்புதமானவை

தண்ணீரும் இல்லாமல்

தன்னுயிரும் போகாமல்

வான் வெளியில்

மிதந்து செல்லும் போது

மேகங்கள் மிகவும் மென்மையானவை

73. மேகங்கள் எப்போது அழகாககிறது?

அ. மலைமுகடுகளில் நடைபயிலும் போது              ஆ. மிதக்கும் போது     

இ. உருவமாக தெரியும் போது                                   ஈ. மழை சூழும் மேகமாய் இருக்கும் போது

74. தண்ணீரும் இல்லாமல், தன்னுயிரும் போகாமல் மேகங்கள் செய்வது

அ. துணிச்சல்  ஆ. கருணை          இ. அற்புதம்       ஈ. அழகு

75. கவிதையில் இடம் பெற்றுள்ள அடிமோனைச் சொற்களைத் தேர்க                                     

அ) மலை–முகடு ஆ.மேகங்கள்–மென்மை   இ. மேகங்கள்–மிகவும்  ஈ) தண்ணீர்-தன்னுயிர்

76. கவிதையில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களைத் தேர்க

அ) மலை–முகடு ஆ.மேகங்கள்–மென்மை   இ. இல்லாமல்–செல்லும்  ஈ) நடை - வான்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

 திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

    எழுதல் முன் மகிழ்வன செப்பல்

 பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

    போமெனில் பின் செல்வதாதல்

 பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

    ஒழுக்கமும் வழிபடும் பண்பே

77. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. காசிக்காண்டம்     ஆ.கனிச்சாறு            இ. மேகம்         ஈ. விவேகசிந்தாமணி

78. இப்பாடலை இயற்றியவர்

அ. இளங்கோவடிகள்   ஆ. பரஞ்சோதி முனிவர்      இ. கீரந்தையார்  ஈ. அதிவீரராம பாண்டியர்

79. இப்பாடலில் குறிப்படப்படும் விருந்தோம்பல் பண்புகளின் எண்ணிக்கையின் தமிழெண் காண்க    

அ) அ                          ஆ.               இ. ரு                 ஈ. கூ

80. ‘ வந்து,’ செப்பல் ‘ ஆகியவற்றின் இலக்கணம் முறையே

அ. பெயரெச்சம் , பண்புத் தொகை           . வினையெச்சம் , தொழிற்பெயர்                       

இ. பண்புத் தொகை , உரிச்சொல்                ஈ. வினையெச்சம், வினைதொகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்

 பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்

 பொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன்

வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல்

81. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. கம்பராமாயணம் ஆ.முல்லைப்பாட்டு  இ. திருவிளையாடற் புராணம்   ஈ. சிலப்பதிகாரம்

82. இப்பாடலை இயற்றியவர்

அ. இளங்கோவடிகள்   ஆ. பரஞ்சோதி முனிவர்      இ. கீரந்தையார்  ஈ. அதிவீரராம பாண்டியர்

83. இப்பாடலில் ‘ பனுவல் ‘ என்பதன் பொருள்

அ) செய்யுள்   ஆ. கவிஞர்       இ. நூல்    ஈ. மாலை

84. ‘ நட்பினன் ‘ என்பதனை உணர்த்தும் சொல்லைத் தேர்க.

அ. பனுவல்       .கேள்வியினான்   இ.கேண்மையினான்   ஈ. தாரனை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்

 நல் நதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்

 பொன் நதிபோல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச்

 சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிதும் முடி துளக்கான் ஆகி

85. இப்பாடலில் “ ஆலவாய் “ என்பது

 அ. மதுரை        ஆ. கபிலன்  இ. பாண்டியன்          ஈ. பாம்பு

86. புகல என்னும் சொல்லின் பொருள்

அ. பாராட்ட       ஆ. சொல்ல      இ. பாட      ஈ. கேட்க

87. வேம்பன் என்பது யாரைக் குறிக்கிறது?

அ) கபிலன்                ஆ.இறைவன்                இ. இடைக்காடன்       ஈ. பாண்டியன்

88. தார் என்பதன் பொருள்

அ. மாலை       . பாடல்         இ. மதுரை                  ஈ. இறைவன்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவாய் நின்இடம் பிரியா இமையப் பாவை

 தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தனக்கு யாது என்னா

 முன்னை மொழிந்து இடைக்காடன் தணியாத முனிவு ஈர்ப்ப முந்திச் சென்றான்

அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப அருளின் மூர்த்தி

89. பாவை என்பதைக் குறிப்பது

அ.பாடல்          ஆ. பெண்                  இ. தமிழ்                      ஈ. இசை

90. முனிவு – என்பதன் பொருள்

அ. சினம்           ஆ. முனிவர்      இ. அணிகலன்      ஈ. மாலை

91. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகை சொற்களைத் தேர்க

அ) தன்னை - உன்னை      ஆ. திருச்செவி - அருளின்   

இ. என்னை – நின்இடம்      ஈ. தன்னை - முன்னை

92. திருச்செவி என்பது உணர்த்துவது

அ. கண்         . காது             இ. மூக்கு        ஈ. வாய்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ போனஇடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான்

  ஞானமய மாகியதன் இலிங்கவுரு மறைத்துஉமையாம் நங்கை யோடும்

 வானவர்தம் பிரானெழுந்து புறம்போய்த்தன் கோவிலின்நேர் வடபால் வையை

 ஆனநதித் தென்பாலோர் ஆலயங்கண்டு அங்கு இனிதின் அமர்ந்தான் மன்னோ

93. அகத்துவகை என்பதனைப் பிரித்து எழுத கிடைக்கும் சொல்

அ.அகம் + வகை        ஆ. அகத்து + வகை  இ. அகத்து + உவகை   ஈ. அகத்து + துவகை

94. இடைக்காடனுக்கும் கபிலனுக்கும் - இலக்கணம்

அ. உவமைத்தொகை   ஆ. உம்மைத்தொகை      இ. எண்ணும்மை        ஈ. பண்புத்தொகை

95.வானவர் என்பது குறிப்பது

அ) இறைவன்           ஆ.பாண்டியன்           இ. இடைக்காடன்                 ஈ.தேவர்

96.இப்பாடலில் குறிப்பிடப்படும் நதி

அ. காவிரி                  . கங்கை                 இ. வையை                              ஈ.கோதாவடி

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து

 எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ்நாட்டில் எய்திற்றாலோ

 தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ

 இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்! எந்தாய்!

97. இப்பாடலில் ‘ தமர் ‘ என்பதன் பொருள்

அ.பகைவர்                 ஆ. தேவர்                   இ. உறவினர்              ஈ. புலவர்

98. கானம் – என்பதன் பொருள்

அ. பாடல்           ஆ. காடு      இ. கோயில்       ஈ. பிழை

99. பாடலில் தீயவர் என்பதைக் குறிக்கும் சொல்

அ) தமர்          ஆ. பகைஞர்      இ. மறையவர்         ஈ. கள்வர்

100. எந்தாய் எந்தாய் என்பது

அ.பண்புத்தொகை       . உவமைத்தொகை          இ. அடுக்குத்தொடர்    ஈ. இரட்டைக்கிளவி

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ ஓங்கு தண் பணைசூழ்  நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்

  நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு

  தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே

 ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா

101. தண்பணை என்பதைக் குறிப்பது

அ. கடம்பவனம்          ஆ. குளிர்ந்த வயல்    இ. குளிர்ந்த சோலை             ஈ. பனைமரம்

102. நீபவனம்  என்பது

அ. திருக்கோயில்         ஆ. கடம்பவனம்      இ. சோலை      ஈ. ஆற்றங்கரை

103. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைத் தேர்க

அ . நீபவனம் - நீத்து ஆ. நீங்குவம் - நீயும்    இ. ஆங்கு - அவன்           ஈ. ஓங்கு - தீங்கு

104. இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களைத் தேர்க.

அ. உளை -அல்லை    . வைத்த – என்னா   இ. நீங்குவம் - நீயும்       ஈ. கண்டாய் -காடன்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி

  விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்

  புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ

  எண்ணிய பெரியோருக்கு என்னா ஏத்தினான் இறைஞ்சி னானே

105. மீனவன் எனக் குறிப்பிடப்படுவது

அ.மீன் விற்பவர்         ஆ. மீன் பிடிப்பவர்     இ. பாண்டிய மன்னன்           ஈ. இடைகாடன்

106. குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ – என வேண்டுபவர்

அ. இடைகாடன்           ஆ. பாண்டியன்      இ. இறைவன்             ஈ. கபிலன்

107. இறைஞ்சுதல் என்பதன் பொருள்

அ) இறைவனை நேசித்தல் ஆ. இறைவனை வணங்குதல் 

இ. பணிந்து வேண்டுதல்       ஈ. கோபித்து செல்லுதல்

108. பரமயோகி எனக் குறிப்பிடப்படுபவர்

அ. இடைகாடன்           ஆ. பாண்டியன்      இ. இறைவன்             ஈ. கபிலன்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ விதிமுறை கதலி பூகம் கவரியால் விதானம் தீபம்

  புதியதார் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல்

  கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேற் கற்றோர் சூழ

 மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி

109. கதலி  எனக் குறிப்பிடப்படுவது

அ. மல்லிகை             ஆ. வாழை     இ. தென்னை             ஈ.பாக்கு

110. சேக்கை என்பதன் பொருள்

அ. இருக்கை              ஆ. பூக்கை      இ. சேர்க்கை            ஈ. வழக்கு

111.கதலிகை என்பதன் பொருள்

அ. மரம்                       ஆ. கொடி                   இ. செடி         ஈ. பூ

112. பூகம் என்பது

அ. கவிதை                 ஆ. வாழை      இ. கமுகு                 ஈ. பாடல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ புண்ணிய புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

 பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

 நுண்ணிய கேள்வி யோரும் மன்ன நீ நுவன்ற சொல்லாம்

 தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா

113. என்னா - என்பது

அ. உரிச்சொல்           ஆ. இடைச்சொல்      இ. வினைச்சொல்     ஈ. அசைச்சொல்

114. நுவன்ற – என்ற சொல்லின் பொருள்

அ. நுகர்ந்த        ஆ. கூறிய               இ. பாடிய          ஈ. கேட்ட

115. தண்ணிய என்ற சொல்லின் பொருள்

அ) தீயான      ஆ. இடியாக               இ. குளிர்ந்த               ஈ. விலகிய

116. தணிந்தது – என்ற சொல்லின் சரியாக பிரித்த பகுபத உறுப்பைத் தேர்க

அ. தணி+ந்+த்+அது  ஆ. தணிந்து+அது      இ. தணி+த்+த்+அ+து    ஈ. தணி + த்(ந்)+த்+அ+து

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்

 போதவிழ் பொய்கை தோ றும் புதுமணல் தடங்கள் தோறும்

 மாதவி வேலிப் பூக வனம்தொ றும் வயல்கள் தோறும்

 ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாயது அன்றே

117. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. கம்பராமாயணம் ஆ.முல்லைப்பாட்டு  இ. திருவிளையாடற் புராணம்   ஈ. சிலப்பதிகாரம்

118. இப்பாடலை இயற்றியவர்

அ. இளங்கோவடிகள்   ஆ. பரஞ்சோதி முனிவர்      இ. கம்பர்     ஈ. அதிவீரராம பாண்டியர்

119. பொய்கை என்பதன் பொருள்

அ) பொய்யான கை   ஆ. வயல்   இ. அருவி          ஈ. கடல்

120. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு

அ. காவேரி        ஆ. கங்கை      இ. சரயு                  ஈ. யமுனை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்

  கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்

  தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

  வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ

121. இப்பாடலில் குறிப்பிடப்படும் மலர்கள்

அ. தாமரை, அல்லி  ஆ.சூரியகாந்தி, மல்லிகை  இ. தாமரை, குவளை  ஈ) மல்லி, மருதம்

122. இப்பாடலில் இடம் பெற்றுள்ள நிலம்

அ. குறிஞ்சி      ஆ. மருதம்               இ. முல்லை        ஈ. நெய்தல்

123. கொண்டல் என்பதன் பொருள்

அ) மேகம்       ஆ. காடு                      இ. சோலை                ஈ. திரைச்சீலை

124. இப்பாடலில் குறிப்பிடப்படும் இசைக்கருவி

அ. பறை           ஆ. மகர யாழ்           இ. மண முழா            ஈ. தொண்டகம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

  பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

  மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

  ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்

125. இப்பாடலில் ‘ இளையான் ‘ எனக் குறிப்பிடப்படுபவர்

அ. இராமன்               ஆ.சீதை                     இ. அனுமன்               ஈ. இலக்குவன்

126. “மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ”  – இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறம்

அ. கருமை                 ஆ. பச்சை                  இ. பழுப்பு     ஈ. நீலம்

127. “ வெய்யோன் “ என்பது

அ) சூரியன்                ஆ. இராமன்               இ. இலக்குவன்         ஈ. குகன்

128. இப்பாடலில் எவருடைய மேனி பற்றி பாடப்பட்டுள்ளது?

அ) அனுமன்              ஆ. இராமன்               இ. இலக்குவன்         ஈ. குகன்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ உறங்கு கின்ற கும்ப கன்ன உங்கள் மாய வாழ்வெல்லாம்

 இறங்கு கின்றது இன்று காணெ ழுந்தி ராய் எழுந்திராய்

 கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே

 உறங்கு வாய் உறங்கு வாய் இனிக் கிடந்து உறங்குவாய்

129. இப்பாடலில் எவரின் வாழ்வு இறங்குவதாகப் பாடப்பட்டுள்ளது

அ. இராமன்                ஆ.குகன்                   இ. கும்ப கன்னன்                  ஈ. இலக்குவன்

130. ‘ கறங்கு ‘ என்ற சொல்லின் பொருள்

அ. இறங்கு                 ஆ. மாயம்                   இ. காற்றாடி         ஈ. உறங்கு

131. இப்பாடலில் இடம் பெற்றுள்ள “ எழுந்திராய், எழுந்திராய் “ என்பது

அ) இரட்டைக் கிளவி           ஆ. அடுக்குத்தொடர்     இ. இடைச்சொல்    ஈ. உரிச்சொல்

132. யாருடைய கையில் கும்ப கன்னனை உறங்கச் சொல்கிறார்கள்

அ) தாய்                       ஆ. தந்தை                  இ. இராவணன்          ஈ. காலனின் தூதர்

 

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

 பூவும் புகையும் மேவிய விரையும்

 பகர்வனர் திரிதரு நகர வீதியும்

 பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

 கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

133. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. கம்பராமாயணம்     ஆ.திருவிளையாடற் புராணம்   இ. சிலப்பதிகாரம்  ஈ. தேம்பாவணி

134. இப்பாடலை இயற்றியவர்

அ. இளங்கோவடிகள்   ஆ. கம்பர்    இ. கீரந்தையார்                ஈ. வீரமாமுனிவர்

135. காருகர் – என்பதன் பொருள்

அ) சிற்பி         ஆ. ஓவியர்     இ. நெய்பவர்     ஈ. விவசாயி

136. பட்டினும் மயிரினும் – இலக்கணக் குறிப்புத் தருக

அ) அடுக்குத்தொடர்  ஆ. எண்ணும்மை         இ. உரிச்சொல்       ஈ. இடைச்சொல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

137. இப்பாடலில் ‘ கூலம் ‘ என்பதன் பொருள்

அ. தானியம்                ஆ. தங்கம்                 இ. பணம்                    ஈ. ஏடு

138. இப்பாடலில் உள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்க

அ. கூலம் – கூலவீதி  ஆ. மணியும் - பொன்னும்     இ. தூசும் – மாசுஅறு   ஈ.பகுதி -பண்டம்

139. வெறுக்கை – என்பதன் பொருள்

அ) அகில்       ஆ. பட்டு     இ. பவளம்   ஈ. செல்வம்

140. பாடலில் தூசு, துகிர் என்பவை குறிப்பவை முறையே

அ) சிற்பி, துணி     ஆ. செல்வம்-துணி            இ. பட்டு,பவளம்   ஈ.அப்பம், வெற்றிலை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்

  மீன்விலைப் பரதவர், வெள் உப்பு பகருநர்

 பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு

  ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;

 கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்

 மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

141. இப்பாடலில் காழியர், கூவியர் என்போர் முறையே

அ. பிட்டு விற்போர், அப்பம் விற்போர்           ஆ.சிற்பி, நெசவாளர்             

இ. எண்ணெய் விற்பவர், ஓவியர்                 ஈ.வெற்றிலை விற்போர், மீன் விற்பவர்

142. ஓசுநர் - என்போர்

அ. நறுமணப் பொருள் விற்பவர்  ஆ. உப்பு விற்பவர்     இ. எண்ணெய் விற்பவர  ஈ. ஓவியர்

143. கருங்கைக் கொல்லர் என்போர்

அ) மரத்தச்சர் ஆ. சிற்பி     இ. இரும்புக்கொல்லர்    ஈ. வெண்கலம் செய்பவர்

144. பாசவர்,வாசவர்,பல்நிணவிலைஞர் என்போர்

அ. வெற்றிலை விற்போர், நறுமணப் பொருள் விற்போர், பலவகை இறைச்சி விற்போர்

ஆ. நறுமணப் பொருள் விற்போர், வெற்றிலை விற்போர், பலவகை இறைச்சி விற்போர்                இ. பலவகை இறைச்சி விற்போர், நறுமணப் பொருள் விற்போர், வெற்றிலை விற்போர்      ஈ. வெற்றிலை விற்போர், பலவகை இறைச்சி விற்போர், நறுமணப் பொருள் விற்போர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்

 குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்

 வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்

 அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு

மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்

145. இப்பாடலில் “ வழுவின்றி “ என்ற சொல் உணர்த்துவது

அ. குறையோடு          ஆ.நிறைவாக             இ. குறைவின்றி        ஈ. ஈடுசெய்ய

146. ‘இப்பாடலில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்

அ.மத்தளம்,நாகசுரம்     ஆ. புல்லாங்குழல்,வீணை              இ. குழல்,யாழ்       ஈ. பறை,வீணை

147. இப்பாடலில் குறிப்பிடப்படும் எண்ணுப் பெயரின் தமிழெண்ணைத் தேர்க

அ) க                           ஆ.              இ.              ஈ.

148. இப்பாடல் சிலப்பதிகாரத்தில் எக்காண்டத்தில்  அமைந்துள்ளது.

அ) ஆரண்ய காண்டம்  ஆ. புகார்க்காண்டம்   இ. வஞ்சிக்காண்டம்         ஈ. மதுரைக்காண்டம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

  வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

  கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

  நச்சிலைவேல் கோக்கோதை நாடு”

149. இப்பாடலில் “ கோக்கோதை நாடு “ என குறிப்பிடப்படும் நாடு

அ. சேரநாடு                 ஆ.சோழநாடு              இ. பாண்டிய நாடு                   ஈ. பல்லவ நாடு

150. பாடலில் ‘ புள்ளினம் ‘ என குறிப்பிடப்படுவது

அ. விலங்குகள்                      ஆ. வண்டினங்கள்               இ. பறவைகள்                 ஈ. பூச்சிகள்

151. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அணி

அ) வஞ்சப் புகழ்ச்சி அணி     ஆ.தற்குறிப்பேற்ற அணி    இ. உவமை அணி    ஈ.உருவக அணி

152. பாடலில்’ அள்ளல், பழனம் ‘ ஆகிய சொற்கள் குறிப்பவை முறையே

அ) வயல், பறவை       ஆ. சேறு, நீர் மிக்க வயல்       இ.நீர்மிக்க வயல், சேறு   ஈ.சேறு - பறவை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ பூக்கையைக் குவித்துப் பூவே

      புரிவொடு காக்கென்று அம்பூஞ்

  சேக்கையைப் பரப்பி இங்கண்

       திருந்திய அறத்தை யாவும்

  யாக்கையைப் பிணித்தென்று ஆக

       இனிதிலுள் அடக்கி வாய்ந்த

   ஆக்கையை அடக்கிப் பூவோடு

        அழுங்கணீர் பொழிந்தான் மீதே”

153. இப்பாடலில் ‘ பூக்கை ‘ என்பது குறிப்பது முறையே

அ. உடம்பு                   ஆ. பூ             இ. கை                        ஈ. படுக்கை

154. ‘ சேக்கை ‘ என்ற சொல்லின் பொருள்

அ. உடம்பு                   ஆ. பூ             இ. கை                        ஈ. படுக்கை

155. இப்பாடலில் அழுவதாகக் குறிப்பிடப்படுவர்

அ) கருணையன்       ஆ. எலிசபெத்     இ. பறவைகள்    ஈ. விலங்குகள்

156. இப்பாடலில் உள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்க

அ) பூக்கை - பூவே    ஆ. ஆக்கை - அழுங்கணீர்   இ. சேக்கை - யாக்கை   ஈ. மீதே -பூவே

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ வாய்மணி யாகக் கூறும்

      வாய்மையே மழைநீ ராகித்

  தாய்மணி யாக மார்பில்

     தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்

  தூய்மணி யாகத் தூவும்

     துளியிலது இளங்கூழ் வாடிக்

  காய்மணி யாகு முன்னர்க்

     காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ”

157. இப்பாடலில் “ வாய்மையே மழைநீராகி” இத்தொடரில் வெளிப்படும் அணி

அ. உவமை      ஆ.உருவகம்                        இ. தற்குறிப்பேற்றம்               ஈ. வஞ்சப்புகழ்ச்சி

158. காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் – இத்தொடரில் வெளிப்படுத்தும் உவமை

அ. வாட்டம்       ஆ.மகிழ்ச்சி              இ. சுயசிந்தனை                     ஈ. பாராட்டு

159. இப்பாடலில் “ இளங்கூழ் “ என்பது

அ) இளமை    ஆ. நீர்மிக்க வயல்     இ. இளம்பயிர்                ஈ. முற்றிய தானியம்

160. இப்பாடலில் அடிமோனைச் சொற்களைத் தேர்க

அ) தயங்கி – வாழ்ந்தேன்                  ஆ. இளங்கூழ்- அந்தோ         

இ. காய்ந்தென – காய்ந்தேன்           ஈ. வாய்மணி - வாய்மை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ விரிந்தன கொம்பில் கொய்த

      வீயென உள்ளம் வாட

   எரிந்தன நுதிநச்சு அம்புண்டு

      இரும்புழைப் புண்போல் நோகப்

   பிரிந்தன புள்ளின் கானில்

      பெரிதழுது இரங்கித் தேம்பச்

    சரிந்தன அசும்பில் செல்லும்

       தடவிலா தனித்தேன் அந்தோ!”

161. இப்பாடலில் ‘ நச்சு ‘ என்பதன் பொருள்

அ. இனிப்பு                  ஆ.கண்ணீர்              இ. நஞ்சு                     ஈ. பூ

162. ‘ வீ ‘ என்ற சொல்லின் பொருள்

அ. மலர்                       ஆ.கண்ணீர்              இ. நஞ்சு                     ஈ. அம்பு

163. இப்பாடலில் ‘ புள்ளின், கானில்’ என்ற சொற்களின் பொருள் முறையே

அ) விலங்கு,காடு       ஆ. பூ,காடு     இ. காடு,பறவை    ஈ. பறவை,காடு

164. இப்பாடலில் ‘ அசும்பு ‘என்பதன் பொருள்

அ. நிலம்                     ஆ.கண்ணீர்              இ. நஞ்சு                     ஈ. பறவை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-

“ நவமணி வடக்க யில்போல்

      நல்லறப் படலை பூட்டும்

  தவமணி மார்பன் சொன்ன

     தன்னிசைக்கு இசைகள் பாடத்

  துவமணி மரங்கள் தோறும்

     துணர்அணிச் சுனைகள் தோறும்

  உவமணி கானம்கொல் என்று

     ஒலித்து அழுவ போன்றே”

165. இப்பாடலில் ‘ நவமணி ‘ என்ற சொல்லில்  “ நவம் “ என்பது

அ. ஏழு                        ஆ. எட்டு                   இ. ஒன்பது                  ஈ. பத்து

166. ‘ உவமணி ‘ என்ற சொல்லின் பொருள்

அ. மாலை                   ஆ. மணமலர்             இ. முத்துமணி      ஈ. கண்ணீர்

167. இப்பாடலில் அழுவதாக குறிப்பிடப்படுபவை

அ) கருணையன்       ஆ. எலிசபெத்     இ. இயற்கை            ஈ. பூக்கள்

168.இப்பாடலில் காணப்படும் இயைபுச் சொற்களைத் தேர்க

அ) நவமணி – தவமணி                     ஆ. தவமணி-துவமணி 

இ. சொன்ன-தோன்றும்                   ஈ. தோறும் - தோறும்

 

இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக 2026 -2027 கல்வி ஆண்டிற்கான சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு…….. சிறப்பு தள்ளுபடி விலையில் பெற - தொடர்பு எண் : 80724-26391


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post