WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-11-2026
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:30
பகுதி-அ
அ) அனைத்து
வினாவிற்கும் விடையளி:-
(10x3=30)
1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான
காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
2.
‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது ‘
இது போல் இளம்
பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
3. ‘ அறிந்தது,அறியாதது, புரிந்தது,புரியாதது, தெரிந்தது, தெரியாதது,பிறந்தது,பிறவாதது
‘ இவை எல்லாம் அனைத்தையும் யாம் அறிவோம்.
இக்கூற்றில்
வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
4. உயிர்கள் உருவாகி
வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்
வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
5. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய
பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப்பாடினர். மாணவர்கள்
கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக்
கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப்
பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். –
வண்ணமிட்ட சொற்களுக்கான
தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக
6.‘இன்மையிலும்
விருந்தோம்பல்’ குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
7. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன்
செங்கீரை ஆடிய நயத்தை எழுதுக.
10. உயிராக நான்,
பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய்
ஓட்டியாக நான்….. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது.இவ்வாறு ‘
நீர் ‘ தன்னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391
