மாதிரி அடைவுத் தேர்வு-1 -ஜனவரி – 2026
பத்தாம் வகுப்பு – தமிழ்
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 100
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி:-
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையை விடைக்குறியீட்டுடன் எழுதுக.
அ.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-
60×1=60
1. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற
தொடர்___________
அ)
இகந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என்மனம்
இகழ்ந்தால் இறந்துவிடாது
இ)
இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம் ஈ) என்மனம்
இறந்துவிடாது இகழ்ந்தால்
2.
கூட்டப் பெயரைக் காண்க:- புல்
அ)
மந்தை ஆ) குலை இ) கட்டு ஈ) குவியல்
3.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _________
அ) எந் + தமிழ்
+ நா ஆ) எந்த + தமிழ்
+ நா இ) எம் + தமிழ்
+ நா ஈ) எந்தம்
+ தமிழ் + நா
4.
நாடும் மொழியும் நமது இரு கண்கள் எனக் கூறுபவர் _________
அ) பாவாணர் ஆ) பாரதியார் இ) கண்ணதாசன் ஈ)
பெருஞ்சித்திரனார்
அ)
பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ) கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
6. ‘ பச்சை நிழல் ‘ என்ற நூலை எழுதியவர்.
அ) முனைவர்.சேது
மணியன் ஆ) மா. நன்னன் இ) உதய சங்கர் ஈ) எஸ், ராமகிருஷ்ணன்
7. நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த
குற்றமில்லை எனப் பாடுபவர் –
அ) கண்ணதாசன் ஆ)
கம்பர் இ) பாரதியார் ஈ) பெருஞ்சித்திரனார்
8. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
___
அ)
இலையும்,சருகும் ஆ) தோகையும்
சண்டும் இ)
தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
9. புதிருக்கான விடையைக் காண்க : நான்கெழுத்தில்
கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும்
அ)
புதுமை ஆ) காற்று இ) விண்மீன் ஈ) காடு
10. பனையின் இளநிலை_______
அ) பிள்ளை ஆ) கன்று இ) வடலி ஈ)
நாற்று
11.எத்திசையிலிருந்து வீசும் காற்று
’ தென்றல்’ என்னும் பெயர் பெறுகிறது________
அ)
வடக்கு ஆ) கிழக்கு இ) தெற்கு ஈ)
மேற்கு
12. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும்
பயிர்வகை ___
அ) குலைப்பெயர்
வகை ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர் வகை
13.‘ மகிழுந்து வருமா? – என்பது
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த் தொடர்
இ) வினையெச்சத் தொடர் ஈ)
பெயரெச்சத் தொடர்
14. பரிபாடல் அடியில் ‘ விசும்பில் இசையில் ‘ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில் , பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும்
பேரொலியையும்
15. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம்
பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள் ஆ) கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ)
சிலப்பதிகாரம்
16. பன்மொழிப்
புலவர் என அழைக்கப்படுபவர்_______
அ) பாவாணர் ஆ) பெருஞ்சித்திரனார் இ) அப்பாதுரையார் ஈ) சச்சிதானந்தன்
17. நச்சப் படாதவன் செல்வம்
– இத்தொடரில் தடித்த சொல்லுக்குப் பொருள் தருக
அ) விரும்பப்படாதவன் ஆ)பிறருக்கு உதவாதவன்
இ)ஆசைப்படாதவன் ஈ) போற்றப்படாதவன்
18. காசிக்காண்டம்
என்பது ______
அ)
காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும்
மறுபெயர்
இ)
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
அ) தூக்கு
மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்கு
மேடை என்பது திரைப்படமா? நாடகமா?
ஈ) யாருக்குப் பாராட்டு விழா
நடத்தப்பட்டது?
20. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக்
கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ)
பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழநாடு, சேர நாடு
இ) சேரநாடு, சோழநாடு ஈ)
சோழநாடு, பாண்டியநாடு
21. பழமொழியை நிறைவு செய்க:- உப்பில்லா
___________
அ) பண்டம் குப்பையிலே ஆ) உள்ளளவும் நினை
இ) மீறினால் அமுதமும் நஞ்சு ஈ) சோற்றுக்கு ஒரு சோறு பதம்
22. மேகசந்தேசம் என்ற காவியத்தை இயற்றியவர்
அ) கம்பர் ஆ) காளிதாசர் இ)
வீரமாமுனிவர் ஈ) உதய சங்கர்
23. அமைச்சர்
நாளை விழாவிற்கு வருகிறார். – இத்தொடரில் இடம் பெறும் வழுவமைதி
அ)
இட வழுமைதி ஆ)
கால வழுவமைதி
இ)
மரபு வழுவமைதி ஈ) பால் வழுவமைதி
24. சிறுவர்
நாடோடிக் கதைகள் என்ற நூலின் ஆசிரியர்________
அ)
மா.நன்னன் ஆ) கி.ராஜ நாராயணன் இ) எம்.பி. அகிலா ஈ) ச.முகமது அலி
25. நாற்றிசையும் செல்லாத நாடில்லை
– இத்தொடரில் இடம் பெறும் தமிழெண்ணைக் காண்க
அ)
௪ ஆ)
௨ இ) ௬ ஈ)
௮
26. “ மையோமர
கதமோமறி கடலோ மழைமுகிலோ “ இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை ஆ) பச்சை இ)
பழுப்பு ஈ) நீலம்
27.
கூற்று 1 : போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது
உதவியது
அ)
கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று
1 மற்றும் 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
28.
சித்திரை, வைகாசி மாதங்களை ____________ காலம் என்பர்.
அ) முதுவேனில் ஆ) பின்பனி இ)
முன்பனி ஈ) இளவேனில்
29.
குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______
அ)
முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல்
நிலங்கள்
இ)
குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் ஈ)
மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
30.
ஒரு சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ வந்து
ஒரு பயனிலைக் கொண்டு முடிவது_____
அ) தனிச்சொற்றொடர் ஆ) தொடர் சொற்றொடர்
இ) கலவைத் தொடர் ஈ) வினாச்சொற்றொடர்
31.
‘ தக்கையின் மீது நான்கு கண்கள் ‘ என்ற நூலை எழுதியவர்.
அ) கி.ராஜநாராயணன்
ஆ) மு.வரதராசனார் இ) சா. கந்தசாமி ஈ) சு.சமுத்திரம்
32. சரியான
அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….
அ)
உழவு,மண்,ஏர்,மாடு ஆ) மண்,மாடு,ஏர்,உழவு
இ)
ஏர்,உழவு,மாடு,மண் ஈ) உழவு,ஏர்,மண்,மாடு
33. தமிழினத்தை
ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
34.
உலகமே வறுமையுற்றாலும்
கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
யாவர்?
அ)
உதியன்;சேரலாதன் ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ)
பேகன்;கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்;திருமுடிக்காரி
35.‘ காருகர் ‘ என்பதன் பொருள்
அ)
ஓவியர் ஆ) நெய்பவர் இ) அப்பம் விற்பவர் ஈ) பிட்டு விற்பவர்
36. இரு நாட்டு அரசர்களும் தும்பைப்
பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
37.‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன்
குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை
முறையே –
அ) திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ)
திருப்பரங்குன்றமும் பழனியும்
38. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் - 1. மேற்கு ஆ) கோடை - 2. தெற்கு
இ)
வாடை - 3. கிழக்கு ஈ) தென்றல் - 4.
வடக்கு
அ) 1,2,3,4 ஆ) 3,1,4,2 இ) 4,3,2,1 ஈ)
3,4,1,2
39.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய
சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?
அ)
வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
40.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு
காக்க என்று ___,___ வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக
41.காலில்
அணியும் அணிகலனைக் குறிப்பது --------
அ)
சுட்டி ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி
42.“வளிமிகின் வலி இல்லை “ என காற்றின்
ஆற்றலைக் கூறுபவர்
அ)
இளநாகனார் ஆ) ஐயூர் முடவனார் இ) தனிநாயகம் ஈ) இளங்கோவடிகள்
43. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று
வந்துள்ள அணியைத் தேர்க
அ) வஞ்சப் புகழ்ச்சி அணி ஆ) உருவக அணி
இ) உவமை அணி ஈ) எடுத்துக்காட்டு உவமை
அணி
44. ‘ சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்,
புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே எனக் குறிப்பிடும் நூல்
அ) நற்றிணை ஆ) புறநானூறு இ) அகநானூறு ஈ)
பொருநராற்றுப்படை
45.கூட்டப் பெயரைக் காண்க : கீரை
அ)
கட்டு ஆ) குலை இ) குவியல் ஈ)
தாறு
46. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு
இடமுண்டு
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில்
தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு
தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு
இடமுண்டு
அ) பண்புத்தொகை ஆ) உவமைத் தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
48.படர்க்கைப்
பெயரைக் குறிப்பது எது?
அ)
யாம் ஆ) நீவிர் இ) அவர் ஈ)
நாம்
49.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக்
கொண்டாடி
வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில்
தமிழகம் இரண்டாமிடம் என்பது
எனக்குப் பெருமையே.
செய்தி 3 – இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது
விழுக்காடு மழையைத்
தென்மேற்குப்
பருவக்காற்றாகக் கொடுக்கிறேன்.
அ) செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1,3 ஆகியன சரி
50.
இரவீந்தநாத
தாகூர் _________ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ______ மொழியில்,
மொழிபெயர்த்த பிறகு தான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம் ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு ஈ) தெலுங்கு, ஆங்கில
51.
சாகும் போது தமிழ்படித்துச் சாக வேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்
எனக் கூறுபவர்.
அ) பாவாணர் ஆ) பெருஞ்சித்திரனார் இ) சச்சிதானந்தன் ஈ) பாரதியார்
52.
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறுபவர்
அ) திருமூலர் ஆ) திருவள்ளுவர் இ) இளங்கோவடிகள் ஈ) சாத்தனார்
53. “ மாணவ நேசன் “ என்னும் கையெழுத்து
ஏட்டை நடத்தியவர்.
அ) ம.பொ.சி ஆ) கலைஞர் இ) பாவாணர் ஈ) அறிஞர் அண்ணா
54.
பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணி – இக்குறளில் பயின்று
வந்துள்ள அணியைத் தேர்க
அ) வஞ்சப் புகழ்ச்சி
அணி ஆ) உருவக அணி
இ) உவமை அணி ஈ) எடுத்துக்காட்டு உவமை
அணி
55.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ)
அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
56.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல்
அ) ஒரு
சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ)
உயரப் பறத்தல்
57. கான் + அடை – சரியான பொருளைத் தேர்க.
அ)
காலில் நடத்தல் ஆ) காலால் நடத்தல்
இ)
காட்டைச் சேர் ஈ) காட்டுக்கு நடத்தல்
58.
மேன்மை தரும் அறம் என்பது ______________________
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற
நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
59. ‘ விருந்தே புதுமை ‘ என்று தொல்காப்பியர்
கூறியுள்ளார். இவ்விடைக்கேற்ற பொருத்தமான வினாவைத் தேர்க
அ) தொல்காப்பியர்
கூறிய விருந்து குறித்த கருத்து இன்று பொருந்துமா?
ஆ) விருந்து குறித்து
தொல்காப்பியர் குறிப்பிட்ட கருத்துகள் யாவை?
இ) புதுமையான
விருந்தோம்பல் என்பது யாது?
ஈ) விருந்து பற்றித்
தொல்காப்பியர் கூறியுள்ள கருத்து யாது?
60.
‘ புதையல் ‘ என்னும் புதினத்தை எழுதியவர்
அ) ம.பொ.சி ஆ) கலைஞர் இ)
பாரதிதாசன் ஈ) சுரதா
பகுதி - ஆ
பாடலைப் படித்து
வினாக்களுக்கு விடையளிக்க:-
40×1=40
“ விசும்பில்
ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர்
வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா
ஒன்றன் ஊழியும்
உந்து
வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “
61. பாடல்
இடம் பெற்ற நூலைத் தேர்க.
அ. நற்றிணை ஆ.
பரிபாடல் இ. முல்லைப்பாட்டு ஈ. மேகம்
62. இப்பாடல்
இடம்பெற்றுள்ள அடிமோனையைத் தேர்க.
அ. உருஅறி
– உந்துவளி ஆ. கருவளர் - உருஅறி
இ. விசும்பில்
– கருவளர் ஈ. உருஅறி – கிளர்ந்த
63. ‘ ஊழ்
ஊழ் ‘ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க_______
அ. உரிச்சொல்தொடர் ஆ. பெயரெச்சத் தொடர்
இ. வினையெச்சத்
தொடர் ஈ. அடுக்குத் தொடர்
64. பாடலின்
ஆசிரியரைத் தேர்க_____
அ. இளங்கோவடிகள் ஆ.
பரஞ்சோதி முனிவர்
இ. கீரந்தையார்
ஈ. பெருங்கெளசிகனார்
பாடலைப் படித்து
வினாக்களுக்கு விடையளிக்க:-
செந்தீச்
சுடரிய ஊழியும்; பனியொடு
தண்பெயல்
தலைஇய ஊழியும்; அவையிற்று
உள்முறை
வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும்
பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு
ஆகிய இருநிலத்து ஊழியும்
65)
.இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘ தண்பெயல்‘ என்ற சொல்லின் பொருள்
அ. கோடை ஆ. பூமி இ. குளிர்ந்த மழை ஈ. வானம்
66).
செந்தீ - இலக்கணக் குறிப்புத் தருக
அ. பண்புத் தொகை
ஆ, வினைத் தொகை இ. உவமைத் தொகை ஈ. உம்மைத் தொகை
67).
இப்பாடலை இயற்றியவர்
அ.நப்பூதனார் ஆ. குமரகுருபரர் இ. அதிவீர ராம பாண்டியர் ஈ கீரந்தையார்
68).
இப்பாடல் இடம் பெற்ற நூல் ___
அ. கம்பராமாயணம் ஆ. முல்லைப்பாட்டு இ. பரிபாடல் ஈ. சிலப்பதிகாரம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
“உண்டா யின்பிறர்
உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந்
தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்”
69) இப்பாடலை
இயற்றியவர்.
அ)
கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) வண்ணதாசன் ஈ) பாரதிதாசன்
70) இப்பாடலில்
கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.
அ)
வண்டு ஆ)
காற்று இ) அன்னம் ஈ) மழை
71). பாடலில்
இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க.
அ)
தருவேன் - தட்டுவேன் ஆ) உண்டா - வண்டா
இ)
இல்லா – இல்லம் ஈ) சொல்லா
- சொல்லிட
72) பாடல்
இடம்பெற்றுள்ள கவிதையின் பெயர்_____
அ)
ஞானம் ஆ)
காலக்கணிதம் இ) பூத்தொடுத்தல் ஈ) சித்தாளு
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்
பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?
முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்
“
73) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால்
இவ்வாறு வரும்:
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா
74) ‘ செந்தமிழ் ‘ என்பது:
அ)
பண்புத் தொகை ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
75). ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை
அழைக்கிறார்?
அ) தம் தாயை ஆ)
தமிழ்மொழியை இ) தாய் நாட்டை ஈ) தம்
குழந்தையை
76) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில்
‘ வேறார் ‘ என்பது.
அ) தமிழர் ஆ) சான்றோர் இ) வேற்றுமொழியினர் ஈ) புலவர்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
"ஆழ
நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு
நடுங்கிடும் வில்லாளோ
தோழமை யென்றவர் சொல்லிய
சொல்லொரு சொல் அன்றோ
ஏழமை வேட னிறந்தில
னென்றெனை யேசாரோ"
77). இப்பாடல் இடம் பெற்ற நூல்
(அ) தேம்பாவணி
(ஆ) பெருமாள் திருமொழி (இ) கம்பராமாயணம் (ஈ) சிலப்பதிகாரம்
78). இப்பாடலின்
ஆசிரியர்
(அ) இளங்கோவடிகள்
(ஆ) செய்கு தம்பி பாவலர் (இ) கம்பர் ஈ) வீரமாமுனிவர்
79). நெடுந்திரை – இலக்கணக் குறிப்பு தருக.
(அ) உவமைத் தொகை ஆ) பண்புத் தொகை (இ) உம்மைத் தொகை (ஈ) வினைத்தொகை
80). இப்பாடலில்
இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக
(அ) நெடுந்திரை –
போவாரோ (ஆ) நெடுந்திரை – நெடும்படை
(இ) தோழமை – ஏழமை (ஈ) போவாரோ
– வில்லாளோ
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
“
உய்முறை அறியேன்; ஓர்ந்த
உணர்வினொத்து உறுப்பும் இல்லா
மெய்முறை அறியேன்; மெய்தான்
விரும்பிய உணவு தேடச்
செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்; தாய்தன்
மைமுறை அறிந்தேன் தாயும்
கடிந்தெனைத் தனித்துப்
போனாள் ”
81)
இப்பாடலின் ஆசிரியர்
அ)
தமிழழகனார் ஆ) பாரதியார் இ) வீரமாமுனிவர் ஈ)
பாரதிதாசன்
82)
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ) கம்பராமாயணம் ஆ) தேம்பாவணி இ) சிலப்பதிகாரம் ஈ) காசிக்காண்டம்
83).
பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களைத் தேர்க
அ) உய்முறை
- உணர்வு ஆ)
மெய்முறை – செல்வழி
இ)
மெய்முறை - செய்முறை ஈ) தாய்
- கடிந்தெனை
84)
செய்முறை என்பதன் இலக்கண குறிப்பு தருக_____
அ) வினைத்தொகை ஆ) தொழில் பெயர் இ) வினைமுற்று ஈ) பெயரெச்சம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி
85).இப்பாடலடிகள் இடம்
பெற்ற நூல்.
அ)
நீதிவெண்பா
ஆ) சிலப்பதிகாரம் இ) கம்பராமாயணம் ஈ) மணிமேகலை
86) இப்பாடலின் ஆசிரியர்
_________
அ) பரஞ்சோதி
முனிவர் ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள் ஈ) வீரமாமுனிவர்
87). பாடலில்
உள்ள சீர் மோனைச் சொற்களைக் காண்க
அ)
கண்ணுள் – மண்ணீட்டு ஆ)
கிழியினும் - கிடையினும்
இ)
பொன்செய் – நன்கலம் ஈ) தருநரும் –
துன்னரும்
88). மண்ணீட்டாளர்
என்போர் யார் ?
அ)
ஓவியர் ஆ) சிற்பி இ) நெய்பவர் ஈ) எண்ணெய் விற்பவர்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
மேகங்கள்
மிகவும் மென்மையானவை
இதழ்
முகிழ்க்கும் மழலையின்
கன்னம்
போல
அல்லது
காதுக் குருத்து போல
எனினும்
மேகங்கள்
துணிச்சலானவை
முதுகைக்
கொடுத்து
சூரியனை
மறைக்கும் போது
மேகங்கள்
மிகவும்
கருணையுள்ளவை
தாகங்கள்
தீர்க்கும் போது
89) இதழ் முகிழ்க்கும் போது
மேகங்கள் எவ்வாறு காட்சித் தருகிறது?
அ) கண்கள் ஆ) கழுத்து இ)
கன்னம் ஈ) மூக்கு
90)
மேகங்கள் கருணையுள்ளவை என எதைக் கொண்டு கவிஞர் கூறுகிறார்?
அ) சூரியனை மறைக்கும் போது ஆ)
தாகங்கள் தீர்க்கும் போது
இ) மலை முகட்டில் நடை பயிலும் போது இ)
மிதந்து செல்லும் போது
91)
இக்கவிதையில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களைக் காண்க.
அ) மேகங்கள் – மென்மையானவை ஆ)
இதழ் – கன்னம்
இ) மழலையின் – குருத்து ஈ) துணிச்சல் – சூரியன்
92)
இக்கவிதையின் ஆசிரியர்
அ) பிரபஞ்சன் ஆ) நாகூர் ரூமி இ)
கல்யாண்ஜி ஈ) ந.முத்துசாமி
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
காவல்
உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ
என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை
மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக்
கோக்கிள்ளி நாடு
93) இப்பாடலில்
இடம் பெற்றுள்ள அடியெதுகை சொற்கள்
அ) காவல் - களத்து ஆ)
நாவலோஓ – நாளோதை
இ) கொல்யானை - நல்யானை ஈ) காவலன் – கோக்கிள்ளி
94)
இப்பாடலில் கொல்யானை என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) பண்புத் தொகை ஆ) வினைதொகை
இ) தொழிற்பெயர் ஈ) பெயரெச்சம்
95)
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) முத்தொள்ளாயிரம் ஈ)
பரிபாடல்
96)
இப்பாடலில் இடம் பெற்றுள்ள அணி
அ) வஞ்ச புகழ்ச்சி அணி ஆ) உவமை அணி இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) உருவக அணி
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
“
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை
வடமாடப்
பைம்பொ
னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி
பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி
விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “
97.
இப்பாடலின் ஆசிரியர்
அ. கீரந்தையார் ஆ) குமரகுருபரர் இ.
நம்பூதனார் ஈ. செய்குதம்பிப் பாவலர்
98.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பிள்ளைத் தமிழ் பருவம்
அ. அம்மானை ஆ. சப்பாணி இ. சிறுதேர்
ஈ. செங்கீரை
99.
‘ குண்டமும் குழைகாதும் ‘ – இலக்கணக் குறிப்பு தருக. அ) எண்ணும்மை ஆ. உம்மைத்தொகை இ. பண்புத் தொகை ஈ. அடுக்குத் தொடர்
100.
கிண்கிணி, அரைநாண்,சுட்டி என்பன முறையே
அ. காலில் அணிவது, இடையில் அணிவது,
தலையில் அணிவது
ஆ. நெற்றியில் அணிவது,இடையில் அணிவது,தலையில் அணிவது
இ. காலில் அணிவது, இடையில் அணிவது,
நெற்றியில் அணிவது
ஈ. இடையில் அணிவது, காதில் அணிவது,
தலையில் அணிவது
