7TH-TAMIL-1ST-TERM-UNIT-3-VIDUTHALAI THIRUNAL- NOTES OF LESSON

   

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஆகஸ்ட்/செப்டம்பர்

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       விடுதலைத்திருநாள்


 அறிமுகம்:

பிறந்தநாள், திருமணநாள் போன்ற தனிப்பட்ட மகிழ்ச்சி தரும் நாட்களை விட, இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விடுதலைத் திருநாளின் சிறப்பினை மீராவின் புதுக்கவிதை வாயிலாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • கவிஞர் மீராவின் உருவப்படம்
  • இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் விடுதலை நாள் தொடர்பான வரலாற்றுப் படங்கள்
  • விடுதலைத் திருநாள் உணர்வை வெளிப்படுத்தும் கவிதை வரிகள் அடங்கிய அட்டைகள்

நோக்கம்:

  • விடுதலைத் திருநாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்தல்
  • தியாகிகளின் போராட்டத்தையும், சுதந்திரத்தின் தேவையையும் புரிந்துகொள்ளுதல்
  • புதுக்கவிதை வழி உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனை வளர்த்தல்

ஆசிரியர் குறிப்பு:

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் அடிமைநிலை, தியாகிகளின் சபதம் மற்றும் விடுதலைக்குப் பிந்தைய ஆனந்தமான இந்தியாவைப் பற்றி கவிஞர் மீரா கவிதை நடையில் விவரித்துள்ளதை ஆசிரியர் எடுத்துரைத்தல்

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

முன்னூறு ஆண்டு கால அந்நிய ஆட்சியை முறியடித்த விடுதலை நாள், இந்தியத் தாயின் கைவிலங்கு உடைந்த நாள், பகத்சிங் கனவு கண்ட விடியல் தோன்றிய நாள் என விடுதலைத் திருநாளின் சிறப்புகளை விளக்குதல்

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • விடுதலைத் திருநாளின் சிறப்பினை உணர்த்தும் வகையில் கவிதை அல்லது கட்டுரை எழுதி வருதல்
  • விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை வகுப்பறையில் பகிர்ந்து கொள்ளுதல்

மதிப்பீடு:

  • LOT (அறிதல்): 'சீவன்' என்னும் சொல்லின் பொருள் யாது?
  • MOT (புரிதல்): பகத்சிங் கண்ட கனவு யாது?
  • HOT (சிந்தித்தல்): நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை நீங்கள் எவ்வாறு கொண்டாடலாம்?

கற்றல் விளைவுகள் :

·        T702 ஒன்றைப் படிக்கும் போது அந்த படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தலும் கருத்துக்களை தமது சொந்த கருத்துக்களுடனும் , அனுபவங்களுடனும் ஒப்பிட்டு தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்

  • T708 வெவ்வேறான உணர்ச்சிகரமான பாடப்பொருள் பிரச்சனைகள் சாதி ,மதம், நிறம், பாலினம், சடங்குகள் போல்ன மீது காரண காரிய அடிப்படையில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துதல்
  • T721    சாதி ,மதம், நிறம், பாலினம் ,சடங்குகள், பழக்க வழக்கங்கள் போன்ற உணர்வு பூர்வமான சிக்கல்களில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துதல்

தொடர் பணி:

  • விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை அறிந்து அவற்றை போற்றும் வகையில் ஒரு நாட்குறிப்பு எழுதி வருக
  • உங்களுக்கு விருப்பமான விழா ஒன்றினைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post