www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : முதல் பருவம்
மாதம் : ஆகஸ்ட்/செப்டம்பர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : தேசியம் காத்த செம்மல்
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்
அறிமுகம்:
தேசியம், தெய்வீகம் ஆகியவற்றைத் தன்
இரு கண்களாகக் கொண்டு, மக்கள்
தொண்டு செய்த தியாகச் செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை
வரலாறு மற்றும் அவரது சிறப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- முத்துராமலிங்கத்தேவரின்
உருவப்படம்
- நேதாஜியுடன்
தேவர் இருக்கும் வரலாற்றுப் புகைப்படம்
- தேவரின்
சிறப்புப் பெயர்கள் மற்றும் அவர் சிறையில் கழித்த நாட்கள் குறித்த தகவல்
அட்டைகள்
நோக்கம்:
- சுதந்திரப்
போராட்ட வீரர்களின் தியாகங்களை அறிதல்.
- தேவரின்
பன்முக ஆற்றலையும், அவரது
பேச்சாற்றலையும் புரிந்துகொள்ளுதல்.
- சிறந்த
தலைவருக்குரிய பண்புகளை மாணவர்களிடம் வளர்த்தல் .
ஆசிரியர் குறிப்பு:
·
தேசியம்
காத்த செம்மல்,
·
வித்யா
பாஸ்கர் போன்ற அவரது சிறப்புப் பெயர்களையும், அவர்
ஆற்றிய ஆலய நுழைவுப் போராட்டம், விவசாயிகள்
மற்றும் தொழிலாளர் நலனுக்காக அவர் செய்த பணிகளையும் விரிவாக விளக்குதல்
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
·
தேவர்
அவர்கள் நேதாஜியின் அரசியல் குருவாகவும், வீரப்பேச்சால்
தியாகிகளை உருவாக்கியவராகவும் விளங்கினார்
·
. அவர்
தனது வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்த தியாகி என்பதையும், பெண்களைத் தெய்வமாக
மதித்துப் போற்றியவர் என்பதையும் விளக்குதல்
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- தேவர்
அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கி எழுதி வருதல்.
- சிறந்த
தலைவருக்குரிய பண்புகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுதல்.
மதிப்பீடு:
- LOT (அறிதல்): முத்துராமலிங்கத்தேவர்
நடத்திய இதழின் பெயர் என்ன?
- MOT (புரிதல்): தேவரின்
பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்படக் காரணம் யாது?
- HOT (சிந்தித்தல்): சிறந்த
தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
கற்றல் விளைவுகள் :
·
T702 ஒன்றைப் படிக்கும் போது
அந்த படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தலும்
கருத்துக்களை தமது சொந்த கருத்துக்களுடனும் , அனுபவங்களுடனும் ஒப்பிட்டு தமது குறிப்பிட்ட
கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்
- T717 வெவ்வேறு சூழல்களில் மற்றவர்களால் கூறப்பட்ட
சொற்களை முறை சார்ந்த அல்லது தனி முறையிலான கூட்டங்கள் அல்லது நிகழ்களின் போது
வயதில் பெரியவர்கள் பயன்படுத்திய சொற்கள் தச்சர், குயவர் ,துணி துவைப்பவர் முடி
திருத்துவோர் போன்ற தொழிலாளிகளுடன் பெரியவர்கள் உரையாடும்போது கேட்ட சொற்கள் வேறு
சூழல்களில் நாம் விரும்பியவாறு எழுதுதலில் பயன்படுத்தப்படுகிறது
- T721 சாதி ,மதம், நிறம், பாலினம் ,சடங்குகள்,
பழக்க வழக்கங்கள் போன்ற உணர்வு பூர்வமான சிக்கல்களில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துதல்
தொடர் பணி:
- நாட்டுக்கு
உழைத்த சிறந்த பிற தலைவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதி வருக
- தேவர்
அவர்களின் ஆலய நுழைவுப் போராட்டம் குறித்த சிறு குறிப்பு எழுதி வருக .
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
