www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : முதல் பருவம்
மாதம் : ஆகஸ்ட்/செப்டம்பர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : கப்பலோட்டிய தமிழர்
அறிமுகம்:
தூத்துக்குடி துறைமுகத்தைப்
பெருமைப்படுத்தியவரும், சுதேசக்
கப்பல் கம்பெனியை உருவாக்கி ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்தவருமான
வ.உ.சிதம்பரனாரின் தியாக வாழ்வையும், அவரது
உணர்ச்சிகரமான பேச்சையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
- வ.உ.சிதம்பரனாரின்
உருவப்படம்.
- அவர்
சிறையில் இழுத்த செக்கின் புகைப்படம்.
- பாரதியார்
மற்றும் வ.உ.சி. இடையேயான தொடர்பு குறித்த வரலாற்றுச் செய்திகள்.
நோக்கம்:
- சிதம்பரனாரின்
தன்னலமற்ற தேசப்பற்றையும் தியாகத்தையும் உணர்தல்.
- அடிமைத்தனம்
மற்றும் விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ளுதல்.
- சிறந்த
மேடைப் பேச்சாளரின் உணர்வுகளைக் கவிதைகள் மற்றும் உரைநடை வழி அறிதல்.
ஆசிரியர் குறிப்பு:
வ.உ.சிதம்பரனாரின் கப்பலோட்டிய
வரலாற்றையும், அவர்
சிறையில் பட்ட துயரங்களை மறக்கத் தமிழ் நூல்களை (தொல்காப்பியம், இன்னிலை) எப்படிப்
பயன்படுத்தினார் என்பதையும் விளக்குதல்.
கருத்துரு வரைபடம்:
விளக்கம்:
·
சொந்த
நாட்டிலேயே வெள்ளையருக்கு அடிமைப்படுவதை எதிர்த்து வ.உ.சி. சுதேசக் கப்பல்
கம்பெனியைத் தொடங்கினார்.
·
சிறைச்சாலையைத்
தவச்சாலையாகக் கருதி, சிறையிலும்
தமிழ் நூல்களை இயற்றிச் செந்தமிழ்த்தாயின் அருளைப் பெற்ற வ.உ.சி.யின் வீரத்தை
விளக்குதல்.
செயல்பாடு (மாணவர் செயல்பாடு):
- வ.உ.சிதம்பரனாரின்
உரையைச் சுருக்கி வாழ்க்கை வரலாறாக எழுதி வருதல்.
- பாரதியார், கொடிகாத்த குமரன்
போன்ற பிற விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி வகுப்பறையில் உரையாற்றுதல்.
மதிப்பீடு:
- LOT (அறிதல்): வ.உ.சிதம்பரனாரைச்
'சொல்லின்
செல்வர்' எனப்
போற்றுவதற்குரிய காரணம் யாது?
- MOT (புரிதல்): சிறைச்சாலையைத்
தவச்சாலையாகக் கருதினேன் - வ.உ.சி.யின் இக்கருத்தை விளக்குக.
- HOT (சிந்தித்தல்): வ.உ.சி.தம்பரனாரின்
வாழ்விலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட தலைமைப் பண்புகள் யாவை?
கற்றல் விளைவுகள்:
- T702: படைப்பாளி வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொண்டு
தமது சொந்தக் கருத்துகளுடன் ஒப்பிடுதல்.
- T712: பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும் சொற்கள்
மற்றும் சொற்றொடர்களின் பொருண்மை உணர்ந்து நயம் பாராட்டுதல்.
- T719: தனிப்பட்ட அனுபவங்களை அல்லது வரலாற்றுச்
செய்திகளைச் சொந்த நடையில் தமக்குரிய மொழியில் வெளிப்படுத்துதல்.
தொடர் பணி:
- வ.உ.சிதம்பரனாரின்
உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதி வகுப்பறையில் சமர்ப்பிக்கவும்.
- ரா.பி.
சேதுப்பிள்ளையின் நூல்களில் உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் ஒன்றின் பெயரைக்
குறித்து வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
