www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : முதல் பருவம்
மாதம் : ஜூலை
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : காடு
அறிமுகம்:
- காட்டின் வளமே நாட்டின் வளம் என்பதை உணர்த்தும்
வகையிலும், காட்டின் குளிர்ச்சியையும் அங்கு
வாழும் விலங்குகளின் மகிழ்ச்சியான சூழலையும் விவரிக்கும் சுரதாவின் கவிதையை
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- கவிஞர் சுரதாவின் உருவப்படம்.
- காடு மற்றும் காட்டு விலங்குகளின் (மயில், யானை, குரங்கு)
வண்ணப் படங்கள்.
- கிளிக்கண்ணி பாவகையை விளக்கும் சொற்கள் அடங்கிய
அட்டைகள்.
நோக்கம்:
- காடுகளின் முக்கியத்துவத்தையும், இயற்கையின்
எழிலையும் புரிந்துகொள்ளுதல்.
- கவிஞர் சுரதாவின் கவிதை நடையையும், 'கிளிக்கண்ணி' பாவகையையும்
அறிதல்.
- காட்டு உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும்
இடையேயான தொடர்பை உணர்தல்.
ஆசிரியர்
குறிப்பு:
- காட்டை 'இயற்கை
விடுதி' என்று கவிஞர் அழைப்பதன்
உட்பொருளையும், உவமைக் கவிஞர் சுரதாவின்
பன்முகத்தன்மையையும் மாணவர்களுக்கு விளக்குதல்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
- கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும்
மலர்கள் பூத்திருக்கும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். காட்டு
விலங்குகள் யாவும் இயற்கையாகப் படைக்கப்பட்ட தங்குமிடத்தில் மகிழ்ச்சியுடன்
வாழ்கின்றன என்பதை கவிதை வரிகள் மூலம் விளக்குதல்.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- "காடு" பாடலை உரிய சந்தத்துடன்
இசையோடு பாடுதல்.
- பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச்
சொற்களைப் பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
- LOT (அறிதல்): 'ஈன்று' என்னும்
சொல்லின் பொருள் யாது?
- MOT (புரிதல்): காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா
கூறுவன யாவை?
- HOT (சிந்தித்தல்): காட்டை 'இயற்கை
விடுதி' என்று கவிஞர் கூறக் காரணம் என்ன? உங்கள்
கருத்து என்ன?
கற்றல்
விளைவுகள் :
- T707: மழைக்காலங்களில் பசுமையான
சூழலை ஏற்படுத்துதல் போன்ற இயற்கை சார்ந்த தலைப்புகள் அல்லது பிரச்சனைகள்
குறித்துத் தருக்கவியல் முடிவுகளை அளித்தல்.
- T713: பல்வேறு பாடல்களைப் படித்து
அவற்றின் நடையையும் இயற்கை வருணனையையும் இனங்கானல்.
- T716: பாடல்களில் படித்த ஒரு
குறிப்பிட்ட சொல்/சொற்றொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
தொடர்
பணி:
- உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள மரம்/காடு குறித்த
வருணனைகளை ஐந்து தொடர்களில் எழுதி வருக.
- காடு குறித்த பிற கவிதைகளைத் திரட்டித் தொகுத்து
வருக.
_______________________________________
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை
