www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : முதல் பருவம்
மாதம் : ஜூலை
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
---------------------------------------------------------------------------------------------------------
அறிமுகம்:
- மரங்கள் மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை.
கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம், ஆனால்
அவற்றைப் பற்றிய இனிய நினைவுகள் என்றும் அழியாது என்பதை விளக்கும்
ராஜமார்த்தாண்டனின் கவிதையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள்:
- கவிஞர் ராஜமார்த்தாண்டனின் உருவப்படம்.
- நாவல் மரம் மற்றும் சிறுவர்கள் விளையாடும் காட்சி
அடங்கிய பாடப்புத்தகப் படங்கள்.
- மரம் சார்ந்த இயற்கை மற்றும் நினைவுகள் குறித்த
புகைப்படங்கள்.
நோக்கம்:
- மரங்களின் முக்கியத்துவத்தையும், இயற்கையின்
மீதான பற்றையும் வளர்த்தல்.
- கவிஞர் ராஜமார்த்தாண்டனின் கவிதை நடையை அறிமுகம்
செய்தல்.
- பழைய நினைவுகள் மற்றும் மரத்தின் மீதான பந்தத்தை
மாணவர் உணர்தல்.
ஆசிரியர்
குறிப்பு:
- மரங்களின் பயன்களையும், அவை
மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கவிஞர் எவ்வாறு விவரித்துள்ளார்
என்பதை ஆசிரியர்கள் எடுத்துரைத்தல். மரங்கள் வீழ்ந்தாலும் அதன் நினைவுகள்
மாறாது என்பதன் ஆழத்தை விளக்குதல்.
கருத்துரு
வரைபடம்:
விளக்கம்:
- ஊரின் வடகோடியில் இருந்த நாவல் மரம், பல
தலைமுறைகளாகச் சிறுவர்களின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருந்தது.
- அது இயற்கையின் அற்புதம். பேய்க்காற்றில் மரம்
சாய்ந்தாலும், கவிஞரின் மனதில் அது மாமலைபோல
என்றும் அப்படியே நிற்கிறது என்பதைப் பாடலின் பொருளாக விளக்குதல்.
செயல்பாடு
(மாணவர் செயல்பாடு):
- மரத்தின் நினைவுகள் குறித்து மாணவர்கள் தங்கள்
சொந்த அனுபவங்களை விவரித்தல்.
- பாடலில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களைக்
கண்டறிந்து பட்டியலிடுதல்.
மதிப்பீடு:
- LOT (அறிதல்): 'பரவசம்' என்னும்
சொல்லின் பொருள் யாது?
- MOT (புரிதல்): சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க
உதவியோர் யாவர்?
- HOT (சிந்தித்தல்): பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக்
கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை? உங்கள்
கருத்து என்ன?
கற்றல்
விளைவுகள் :
- T702: கவிஞர் வேறொரு சூழலில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொண்டு, தமது
சொந்தக் கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிடுதல்.
- T713: கவிதையின் வருணனை உணர்வு
மற்றும் இயற்கை வர்ணனைத் தன்மைகளை இனங்காணல்.
- T719: தனிப்பட்ட அனுபவங்களைச் சொந்த
நடையில் தமக்குரிய மொழியில் வெளிப்படுத்துதல்.
தொடர்
பணி:
- உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஏதேனும் ஒரு மரம்
குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதி வருக.
- மரம் குறித்த மற்றுமொரு கவிதையைத் தேடித்
தொகுத்து வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
