7TH-TAMIL-1ST-TERM-UNIT-2-THAMIZHIRARIN KAPPAR KALAI- NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஜூலை

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       தமிழரின் கப்பற்கலை


அறிமுகம்:

  • பழங்காலம் தொட்டே தமிழர்கள் கப்பல் கட்டும் கலையிலும், கடல் பயணத்திலும் சிறந்து விளங்கினர் என்பதையும், அதற்கான இலக்கிய மற்றும் வரலாற்றுச் சான்றுகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • கப்பல் கட்டும் கலை மற்றும் கப்பல்களின் உறுப்புகள் தொடர்பான படங்கள்.
  • கலங்கரை விளக்கம் குறித்த ஓவியங்கள்/புகைப்படங்கள்.
  • கப்பல் கட்ட பயன்படுத்தப்பட்ட மரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வரைபடங்கள்.

நோக்கம்:

  • தமிழர்களின் கடல்சார் தொழில்நுட்ப அறிவைப் புரிந்துகொள்ளுதல்.
  • கப்பல் கட்டும் முறை, கப்பலின் உறுப்புகள் மற்றும் செலுத்தும் முறைகளை அறிதல்.
  • வரலாற்றில் தமிழர்களின் கப்பற்கலை பெற்றுள்ள இடத்தைப் பெருமிதத்துடன் உணர்தல்.

ஆசிரியர் குறிப்பு:

  • தமிழர்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே கடல் பயணம் மேற்கொண்டதையும், அவர்கள் கப்பல் கட்டுவதில் பெற்றிருந்த நுட்பமான அறிவையும் ஆசிரியர் வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

 

விளக்கம்:

  • தமிழர்கள் நீர்நிலைகளில் மரக்கட்டைகளைப் பயன்படுத்தத் தொடங்கி, பின் பெரிய கப்பல்களைக் கட்டும் அளவிற்கு முன்னேறினர்.
  • கப்பல் கட்டும் கலைஞர்கள் 'கம்மியர்' என அழைக்கப்பட்டனர்.
  • காற்றின் திசையையும் விண்மீன்களையும் கொண்டு கப்பலைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • வகுப்பறையில் தரைவழிப்பயணம் மற்றும் கடல்வழிப்பயணம் குறித்த கலந்துரையாடலை மேற்கொள்ளுதல்.
  • தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு கப்பல்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குதல்.

மதிப்பீடு:

  • LOT (அறிதல்): கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி எது?
  • MOT (புரிதல்): கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் அல்லது பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?
  • HOT (சிந்தித்தல்): தற்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாததற்கான காரணங்களைச் சிந்தித்து எழுதுக.

கற்றல் விளைவுகள்:

  • T706: கப்பற்கலை, கட்டிடக்கலை, உழவுத் தொழில் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் சொற்களை அறியப் பேரார்வம் கொள்ளுதல்.
  • T710: பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து, அதில் உள்ள சிறப்புக்கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
  • T715: கப்பற்கலை உள்ளிட்ட பல்வேறு கலைகளிலும் தொழில்களிலும் பயன்படுத்தப்படும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்துதல்.

தொடர் பணி:

  • 'கலங்கரை விளக்கம்' குறித்துச் சிறுகுறிப்பு வரைந்து வருக.
  • தமிழரின் கப்பற்கலை குறித்த கூடுதல் தகவல்களை நூலகம் அல்லது இணையதளம் மூலம் திரட்டி வருக.

 

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post