7TH-TAMIL-1ST-TERM-UNIT-2-VILANGUGAL ULAGAM- NOTES OF LESSON

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஜூலை

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       விலங்குகள் உலகம்


 

அறிமுகம்:

காடு பல்லுயிர்களின் வாழ்விடமாகும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனஅலுவலர் ஒருவருடன் ஆதினி மற்றும் அவள் தாய் மேற்கொள்ளும் காட்டுப் பயணத்தின் வாயிலாக, வனவிலங்குகளின் இயல்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்குகளின் புகைப்படங்கள்.
  • யானை (ஆசிய/ஆப்பிரிக்க), கரடி, புலி மற்றும் புள்ளிமான்கள் அடங்கிய தொகுப்புப் படங்கள்.

நோக்கம்:

  • காட்டுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ளுதல்.
  • வனவிலங்குகளின் தனித்துவமான பண்புகள் மற்றும் வாழ்விடங்களைப் பற்றி அறிதல்.
  • வனவிலங்குகள் மீதான ஆர்வத்தையும், இயற்கையைப் பாதுகாக்கும் உணர்வையும் வளர்த்தல்.

ஆசிரியர் குறிப்பு:

காடுகளின் செழிப்புக்கு வனவிலங்குகள் எவ்வாறு உதவுகின்றன என்பதையும், மனிதன் காடுகளின் மரபுத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்வதன் அவசியத்தையும் ஆசிரியர் விளக்க வேண்டும்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

யானைகளின் சமூக வாழ்க்கை, கரடியின் உணவுப் பழக்கம், புலிகளின் தனித்த வாழும் இயல்பு மற்றும் காட்டின் வளத்தை உறுதி செய்யும் புலி எனப் பல்வேறு வனவிலங்குகளின் வாழ்வியல் நுட்பங்களை இப்பாடம் விவரிக்கிறது.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • வனவிலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டிப் பட்டியலிடுதல்.
  • காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டி அழகான படத்தொகுப்பு உருவாக்குதல்.

மதிப்பீடு:

  • LOT (அறிதல்): தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
  • MOT (புரிதல்): புலியைக் 'காட்டுக்கு அரசன்' எனச் சொல்லாமல், 'பண்புள்ள விலங்கு' என ஏன் கூறுகிறார்கள்?
  • HOT (சிந்தித்தல்): மனிதர்கள் வனவிலங்குகளின் வழித்தடங்களில் குறுக்கிடுவதால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து உங்கள் கருத்துகளைப் பதிவிடுக.

கற்றல் விளைவுகள்:

  • T707: இயற்கை சார்ந்த தலைப்புகள் தொடர்பாகத் தர்க்கரீதியான முடிவுகளை அளித்தல்.
  • T710: பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதிலுள்ள சிறப்புக்கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
  • T713: பல்வேறு வகையான கதைகள் மற்றும் கட்டுரைகளைப் படித்து அவற்றின் நடை மற்றும் வருணனைத் தன்மைகளை இனங்காணல்.

தொடர் பணி:

  • ஏதேனும் மூன்று வனவிலங்குகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுதுக.
  • இந்திய வனமகன் ஜாதவ் பயேங் குறித்து இணையம் மூலம் கூடுதல் செய்திகளைச் சேகரித்து வருக.

 

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post