7TH-TAMIL-1ST-TERM-UNIT-2-NALVAGAI KURUKKANGAL- NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஜூலை

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       நால்வகை குறுக்கங்கள்


 அறிமுகம்:

எழுத்துக்களுக்கு உரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் முறை

 குறித்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • நால்வகை குறுக்கங்களை விளக்கும் விளக்க அட்டவணைகள்.

  • எழுத்துக்களின் மாத்திரை அளவுகளைக் குறிக்கும் அட்டைகள்.

  • குறுக்கங்கள் இடம்பெறும் சொற்கள் அடங்கிய கரும்பலகைக் குறிப்புகள்.

நோக்கம்:

  • எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்
  •  முறையை அறிதல்.
  • ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் மற்றும் ஆய்தக்குறுக்கம் ஆகியவற்றின் இலக்கணத்தை உணர்தல்.
  • சொற்களைச் சரியாக உச்சரிக்கும் திறனை வளர்த்தல்.

ஆசிரியர் குறிப்பு:

ஒவ்வோர் எழுத்துக்கும் உரிய மாத்திரை அளவை நினைவூட்டி, சில சூழல்களில்

 அவை ஏன் குறைந்து ஒலிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன்  விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

எழுத்துக்கள் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிப்பதை 'குறுக்கம்

என்பர். 

ஐகாரம், ஒளகாரம், மகரம் மற்றும் ஆய்தம் ஆகிய நான்கு எழுத்துக்களும்

 குறிப்பிட்ட சூழல்களில் மாத்திரை குறைந்து ஒலிக்கும் முறையை விளக்குதல்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • நால்வகை குறுக்கங்களுக்குப் பாடப்புத்தகத்திலிருந்து புதிய சொற்களைக் கண்டறிந்து தொகுத்தல்.
  • குறுக்கங்கள் இடம்பெறும் சொற்களை மாத்திரை அளவுகளுடன் எழுதிப் பயிற்சி செய்தல்.

மதிப்பீடு:

  • LOT (அறிதல்): மகரக்குறுக்கம் இடம்பெறும் ஒரு சொல்லைக் கூறுக.

  • MOT (புரிதல்): ஒளகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?

  • HOT (சிந்தித்தல்): ஏன் எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து
  •  குறைந்து ஒலிக்கின்றன? இது மொழியின் ஒலியமைப்பில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?

கற்றல் விளைவுகள் :

  • T716: மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளைப் புரிந்துகொண்டு,
  • பாடல்களில் படித்த குறிப்பிட்ட சொற்களின் பொருண்மை உணர்ந்து உரையாடலில் பயன்படுத்துதல்.

  • T720: சொற்களை எழுதும் போது நிறுத்தற்குறிகள் மற்றும் பிற இலக்கணக் கூறுகளை முறையாகப் பயன்படுத்துதல்.

தொடர் பணி:

  • ஐகார, ஒளகார, மகர, ஆய்தக்குறுக்கங்களுக்குப் பாடப்புத்தகத்தில் உள்ளவை தவிர்த்து, கூடுதல் எடுத்துக்காட்டுச் சொற்களைத் திரட்டி எழுதி வருக.

 

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post