7TH-TAMIL-1ST-TERM-UNIT-1-ENGAL THAMIZH- NOTES OF LESSON

  

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஜூன்

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       எங்கள் தமிழ்


அறிமுகம்:

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரின் கவிதை மூலம் தமிழ் மொழியின் மென்மை, இனிமை, வளமை மற்றும் அது வாழ்விற்குத் தரும் அன்பையும் அறத்தையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் படம்.
  • தமிழ் மொழியின் சிறப்புகளை விளக்கும் வரைபடங்கள்/அட்டைகள்.
  • கவிதை வரிகள் அடங்கிய அட்டைகள்.

நோக்கம்:

  • தமிழ் மொழியின் பெருமைகளை உணர்தல்.
  • நாமக்கல் கவிஞரின் ஆளுமையை அறிதல்.
  • பாடலின் மையக்கருத்தை உள்வாங்கி, அன்பையும் அறத்தையும் வாழ்வியல் நெறியாகக் கொள்ளுதல்.

ஆசிரியர் குறிப்பு:

தமிழ் மொழியின் தொன்மை, அதன் சிறப்பு மற்றும் நாமக்கல் கவிஞரின் காந்தியக் கொள்கைகள் குறித்து ஆசிரியர் விரிவாக விளக்குதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

Ø  அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தரும் தமிழ் மொழி, தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கிறது.

Ø  பொருள் பெறுவதற்காக யாரையும் புகழாமல், தம்மைப் போற்றாதவரை இகழாமல் வாழும் மாண்பினை உணர்த்துகிறது.

Ø  அன்பும் அறமும் நிறைந்த தமிழ் மொழி, அச்சத்தைப் போக்கி இன்பம் தரும் தேன் மொழி என்பதை விளக்குதல்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மாணவர்கள் "எங்கள் தமிழ்" பாடலை இசையுடன் பாடி மகிழ்தல்.
  • பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களைக் கண்டறிதல்.
  • நாமக்கல் கவிஞரைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தல் .

மதிப்பீடு:

  • LOT (அறிதல்): 'நெறி' என்னும் சொல்லின் பொருள் யாது?
  • MOT (புரிதல்): தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
  • HOT (சிந்தித்தல்): கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்? உங்கள் கருத்து என்ன?

கற்றல் விளைவுகள்:

  • T702: படைப்பாளி (நாமக்கல் கவிஞர்) வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் தமது சொந்த அனுபவங்களுடன் ஒப்பிட்டு அறிதல்.
  • T704: தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் மற்றும் புரிதலை மேம்படுத்துதல்.
  • T712: கவிதையில் அமைந்துள்ள சொற்கள், சொற்றொடர்களைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

தொடர் பணி:

  • நாமக்கல் கவிஞர் எழுதிய "கத்தியின்றி ரத்தமின்றி" பாடலைப் படித்துச் சுவைத்து, அதில் உள்ள கருத்துகளைக் குறித்து வருதல்.
  • "எங்கள் தமிழ்" பாடலை மனப்பாடம் செய்து வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post