7TH-TAMIL-1ST-TERM-UNIT-1-ONTRALLA IRANDALLA- NOTES OF LESSON

 

www.tamilvithai.com                                                    www.kalvivithaigal.com

பருவம்             :       முதல் பருவம்

மாதம்               :       ஜூன்

வகுப்பு             :       ஏழாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  

தலைப்பு           :       ஒன்றல்ல இரண்டல்ல


அறிமுகம்:

தமிழ்நாட்டின் இயற்கை வளம், இலக்கிய வளம் மற்றும் தமிழரின் கொடைத்திறனைப் போற்றும் பாடலை அறிமுகப்படுத்தி, தமிழகத்தின் பெருமைகளை மாணவர்களுக்கு உணர்த்துதல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • உடுமலை நாராயணகவியின் படம்.
  • தமிழகத்தின் இயற்கை வளங்கள் மற்றும் வள்ளல்களின் கொடைத்திறன் குறித்த படத்தொகுப்புகள்.
  • வள்ளல் வேள்பாரி மற்றும் குமணவள்ளல் குறித்த தகவல் அட்டைகள்.

நோக்கம்:

  • தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் இலக்கிய வளங்களை அறிதல்.
  • கொடைத்திறன் மிக்க தமிழரின் வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல்.
  • பழந்தமிழ் இலக்கிய வடிவங்களை அடையாளம் காணுதல்.

ஆசிரியர் குறிப்பு:

தமிழ்நாட்டின் வளங்கள் ஒன்றிரண்டல்ல பல என்பதை விளக்கி, பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவியின் பங்களிப்பை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுதல்.

கருத்துரு வரைபடம்:

விளக்கம்:

Ø  தமிழ்நாட்டின் சிறப்புகள் ஒன்றிரண்டல்ல, பல.

Ø  இங்கு வீசும் தென்றல் தேன்மணம் கமழும்; நிலம் செங்கனியையும் பொற்கதிரையும் தருகிறது.

Ø  தமிழ் இலக்கியங்கள், வள்ளல்களின் தியாகங்கள் என அனைத்தும் 

ஈடுஇணையற்றவை என்பதை விளக்குதல்.

செயல்பாடு (மாணவர் செயல்பாடு):

  • மாணவர்கள் தமிழுக்குக் கொடை கொடுத்த பிற வள்ளல்கள் குறித்த செய்திகளைத் திரட்டுதல்.
  • தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுதல்.

மதிப்பீடு:

  • LOT (அறிதல்): 'முகில்' என்னும் சொல்லின் பொருள் யாது?.
  • MOT (புரிதல்): தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?.
  • HOT (சிந்தித்தல்): தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?.

கற்றல் விளைவுகள் :

  • T705: தாங்கள் வாழும் நிலப்பகுதி சார்ந்த நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் பாடல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டுதல்.
  • T713: பல்வேறு பாடல்களைப் படித்து அவற்றின் வருணனை மற்றும் இயற்கை வர்ணனை முறைகளை இனங்காணுதல்.
  • T716: பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல்/சொற்றொடர்களின் பொருண்மை உணர்ந்து அவற்றை உரையாடலில் வெளிப்படுத்துதல்.

தொடர் பணி:

  • உடுமலை நாராயணகவியின் சிறப்புப் பெயர்களைக் கண்டறிந்து வருக.
  • நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு வள்ளல் பற்றிய சிறு குறிப்பு எழுதி வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post